இந்த வார பாக்யாவில் என்னுடைய ஜோக்ஸ்கள் !


பாக்யா வார இதழில் எனது படைப்புக்கள் வெளிவருவது நண்பர்கள் அறிந்ததே! கடந்த இருவாரங்களாக எனது ஜோக்ஸ் வரவில்லை! சென்ற வாரம் ஒரு சிறுகதை வெளிவந்தது. இந்த வாரம்  மீண்டும் எனது ஜோக்ஸ்களை பிரசுரம் செய்துள்ளார்கள். தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுவில் இந்த விவரத்தை பகிர்ந்து ஜோக்ஸ்களை ஸ்கேன் செய்து போட்டிருந்தனர். நண்பர் கோபாலன் சார் ஜோக்ஸ்களை பதிந்து இருந்தார். என்னுடைய ஜோக்ஸ்களுடன் நண்பர் சீர்காழி ஆர் சீதாராமன் சார், ஜான் ரவி சார் ஜோக்ஸ்களும் இதழை அலங்கரிக்கின்றன.

   முன்னனி இதழ்களில் ஜோக்ஸ்கள் குறைந்து வரும் நிலையில் பாக்யா இதழ் ஜோக்ஸ்களை நிறைய வெளியிட்டு ஜோக்ஸ் எழுத்தாளர்களை ஊக்குவிப்பது பாராட்டுக்குரியது. இத்தகைய முயற்சிக்கு உறுதுணையாக விளங்கும் எஸ்.எஸ். பூங்கதிர் சார் மற்றும் பாக்யா ஆசிரியர் குழுவினர் பாக்யா நிறுவனர் பாக்யராஜ் சார் அனைவருக்கும் நன்றிகள் கோடி!

ஒவ்வொரு முறை எனது படைப்புக்கள் வெளிவரும்போதும் பாராட்டி ஊக்கமளித்து வரும் தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுவினருக்கும் படைப்புக்களை ஸ்கேன் செய்து பகிர்ந்து கொள்ளும் கோபாலன் சாருக்கும் போன் செய்து பாராட்டும் சீதாராமன் சாருக்கும்  மற்றும் வாட்சப் தோழர்கள், வலைப்பூ தோழர்கள், முகநூல் தோழர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!

ஜோக்ஸ்கள் கீழே!

கடைசி படத்தில் கடைசி ஜோக் மட்டும் என்னுடையது மேலே உள்ள ரெண்டும் சீர்காழி சீதாராமன் சாருடையது.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. படித்தேன், இரசித்தேன் வாழ்த்துகள் நண்பரே தொடரட்டும்

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் !சன்மானமாய் லட்ச லட்சமாய் சம்பாதிக்க :)

  ReplyDelete
 3. மனம் நிறைந்த வாழ்த்துகள் சுரேஷ்.

  ReplyDelete
 4. மனம் நிறைந்த வாழ்த்துகள் சுரேஷ்!

  ReplyDelete
 5. அருமையான நகைச்சுவை

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2