வார இதழ்களில் நான் படைப்புக்கள் எழுதி வருவதை நீங்கள் அறிவீர்கள். பாக்யாவில் வரும் அளவிற்கு மற்ற இதழ்களில் படைப்புக்கள் வரவில்லை. எனினும் விடாமல் குமுதம், விகடன், கல்கி, கண்மணி என்று தொடர்ந்து முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன். நகைச்சுவை எழுத்தாளர் திரு சீர்காழி ஆர். சீதாராமன் சார் போன் செய்து பேசுகையில் சில ஆலோசனைகள் சொன்னார். அதில் ஒன்று கல்கிக்கு தராசு பதில்களுக்கு கேள்விகள் அனுப்புவது. அவர் சொன்னபடி கேள்விகள் மெயில் அனுப்ப மறு வாரமே ஒரு கேள்வி பிரசுரம் ஆனது. இந்தவாரமும் கேள்வி அனுப்பி இருந்தேன். அதில் என் கேள்வி பரிசுக்குரிய கேள்வியாக தேர்ந்தெடுக்கப்பட்டு ரூபாய் 150 பரிசினை பெற்றுள்ளது. கல்கிக்கு ஜோக்ஸும் அனுப்பி இருந்தேன். அதில் இரண்டு ஜோக்ஸ்கள் பிரசுரம் ஆகி இருக்கிறது. தீபாவளி பிஸியில் இருந்தமையால் இதை உடனே அறிந்து கொள்ள முடியவில்லை! தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவில் பகிர்ந்து இருந்தார்கள் அதை தீபாவளி அன்று இரவுதான் பார்த்தேன். நேற்று கேதார கௌரி நோன்பு. கோயில் பணி. பிஸியாக இருந்தமையால் புத்தகம் வாங்கவ...