கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 71
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 71 1. கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லேன்னு தலைவர் சொல்லிட்டாராமே! கொடுத்தாலும் வாங்கிறதுக்கு அங்கே தொண்டர்கள் யாரும் இல்லையே! 2. அந்த சாமியாரை ஏன் கைது பண்ணிட்டு போறாங்க? சூரணம் விக்கிறதா சொல்லி பல பேரோட சொத்துக்களை ஜீரணம் பண்ணிட்டாராம்! 3. பேஸ்புக்குல நம்ம படத்தோட டீசருக்கு நிறைய வரவேற்பாமே! ஆமா! சின்ன குழந்தை கூட டீஸ் பண்ணி கமெண்ட் பண்ணிகிட்டு இருக்கு! 4. தன்னோட வழக்கை சைபர் கிரைம் போலீஸ் விசாரிக்க தலைவர் விரும்பலையாமே? கோடி கோடியா சொத்து இருக்கிறப்ப சைபர் போலீஸ் விசாரிக்கிறது இழுக்குன்னு நினைக்கிறாராம்! 5. ஆனாலும் அந்த சர்வருக்கு நக்கல் அதிகம்? எப்படி சொல்றே? சோலாப் பூரி உப்பலா இருக்க வேணாமான்னு கேட்டா நீங்க ஏற்கனவே உப்பி இருக்கீங்க! இன்னமும் உப்பணுமான்னு கேக்கறான்! 6. எதிரி எல்லை தாண்டி விட்டான் மன்னா! நம் கொல்லைக் கதவை திறந்தே வைத்துவிடுங்கள் அமைச்சரே! 7. அந்த வக்கீல் டேபிள் மேல ...