கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 22

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 22


1.      பையன் தொழில்ல கண்ணும் கருத்துமா இருப்பான்னு சொன்னாங்க! ஆனா இப்பத்தான் தெரியுது…
    என்னன்னு?
  ரோட்டுல போறவர பொண்ணுங்களை சைட் அடிச்சிகிட்டு திரியறான்!

2.      தலைவர் எதுக்கு திடீர்னு ஒரு லோடு குப்பை வேணும்னு கேக்கறார்?
    நாளைக்கு தெருவில குப்பையை கிளீன் பண்ண நடிகரை கூப்பிட்டு இருக்காரே!

3.      நீ என்ன கேட்டுட்டேன்னு டீச்சர் உன்னை அடிச்சாங்க?
    கடன் வாங்க கத்துக்கொடுக்கிற நீங்க திருப்பிக் கொடுக்கவும் கத்துக் கொடுக்க மாட்டேங்கிறீங்களேன்னு கேட்டேன்!

4.      சுடிதார்ல நீ அழகா இருக்கேன்னு சொன்னதுக்கு உன் பொண்டாட்டி கோச்சுக்கிட்டாளா ஏன்?
நான் அப்படி சொன்னது வேலைக்காரிக்கிட்டயாச்சே!

5.      மல்யுத்தப் போட்டிக்கு மன்னர் வர மறுத்துவிட்டாரா ஏன்?
தினம் தினம் ராணிகளோடு மல்லுக்கட்டுவதற்கே நேரம் பத்தவில்லையாம்!

6.      அவர் பி.காம் படிச்சுட்டு டாக்டர் ஆனவர்னு எப்படி சொல்றீங்க?
உங்களுக்கு இந்த மாத்திரை டேலி ஆகாது இஞ்ஜெக்‌ஷன் தான் டேலி ஆகும்னு சொல்றாரே!

7.      கல்யாணத்தை ரொம்ப சிக்கனமா நடத்தறது எல்லாம் ஓக்கேதான் ஆனா…
    என்ன ஆனா?
   தாம்பூலப் பைக்கு பதிலா சுருக்குப்பை கொடுக்கிறது எல்லாம் ரொம்ப ஓவர்..!


8.      மேடையில தலைவர் பேச ஆரம்பிச்சதும் அள்ளி வீச ஆரம்பிச்சிட்டாங்க…
நிதியையா?
இல்ல… செருப்பை!

9.      ஆதாரத்தை தேடி தலைவர் அலைஞ்சிக்கிட்டு இருக்கார்னு சொல்றியே யாருக்கு எதிரா கேஸ் போடப்போறார்?
நீ வேற நான் சொல்றது நிதி ஆதாரத்தை!

10.  மன்னா! எதிரி நம் மீது படையெடுக்க திட்டம் தீட்டுகிறானாம்!
அப்படியா! உடனே அவனிடமிருந்து தப்பிப் பிழைக்க திட்டம் தீட்டுங்கள் மந்திரியாரே!


11.  என்ன மன்னா! செல்லாக் காசுகளை கொடுக்கிறீர்!
புலவரே! நீர் மட்டும் இல்லாததைத்தானே பாடுகின்றீர்!

12.  மன்னர் மன்னை கவ்வி விட்டார் என்று எவ்வாறு சொல்கிறாய்!
    எதிரியின் மண் வீரம் விளைந்தது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறாரே!


13.  தினமும் காலையிலே சுடுதண்ணி ஒரு டம்ளர் குடிச்சா நல்லதுன்னு டாக்டர் சொல்றார்!
    குடிச்சுப்பாருங்களேன்!
   உன்னை கல்யாணம் பண்ண நாளா காப்பின்ற பேர்ல அதைத்தானே குடிச்சுக்கிட்டு இருக்கேன்!

14.  அவங்க வீட்டில டீவியே இல்லைன்னு எப்படிச் சொல்றே!
சாயங்கால வேளையில வாசல்ல எல்லோரும் உக்காந்து சிரிச்சுப் பேசிக்கிட்டு இருக்காங்களே!

15.  இழுத்துக்கிட்டே இருந்தது! இப்பத்தான் ஒழிஞ்சுது சனியன்னு யாரை சொல்றே?
    டீவி சிரியலைத்தான் சொல்றேன்!

16.  தலைவரை இனிமே யாராலேயும் அசைக்கமுடியாதுன்னு எப்படிச் சொல்றே!
அதான் நல்லா வெயிட் போட்டு குண்டாயிட்டாரே!

17.  புடவைக்கடை பூட்டை உடைச்ச நீ ஏன் ஒரு புடவையும் திருடாம வந்துட்டே!
கூட வந்த என் பெண்டாட்டிக்கு அங்கிருந்த ஒரு புடவையும் பிடிக்கலையே!

18.  நாடு ரொம்ப கெட்டுப் போச்சுன்னு பிளேடு பக்கிரி புலம்பறானே ஏன்?
முன்னே எல்லாம் பர்ஸ்ல பணம் இருக்கும்! இப்போ ஏடிஎம் கிரடிட் கார்டுதானே இருக்கு. அதான்!


19.  நீ சேவை செய்யறதுன்னா உன் வொய்ஃபுக்கு ரொம்ப பிடிக்குமாமே!
    ஆமா! நான் சேவை செய்து கொடுத்தா அப்படியே சப்புக்கொட்டி சாப்பிடுவா!

20.  இந்த படத்தோட ஒன் லைன் திருட்டு தான்!
அப்படியா! யாரோட கதையை திருடறீங்க?!

21.  அந்த கட்சி பாரம்பரியம் மிக்கதுன்னு எப்படி சொல்றே?
கட்சியை உடைச்சி இப்பத்தான் புதுக்கட்சி துவக்கனாங்க அதுக்குள்ள அதுல ரெண்டு கோஷ்டி உருவாயிருச்சே!

22. தலைவரைத் தேடி நிறைய துடைப்ப கம்பெனிக்காரங்க வந்திருக்காங்களா ஏன்?
   அவரால துடைப்ப வியாபாரம் இப்ப ஜோரா நடக்குதாம்! அதான் நன்றி சொல்லிட்டு போக வந்திருக்காங்க!

  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

  

Comments

  1. நண்பர் சுரேஷ் அவர்களுக்கு படார், படாரென வெடிக்கிறதே சிரிப்பூக்கள் அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. முதல் நபராய் வருகை தந்து கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி ஜி!

      Delete
  2. கடைசி ஜோக் மோடியை கிண்டல் செய்றா போல இருக்கே ?

    #டவுட்

    ReplyDelete
  3. மூன்றாவது ஜோக்காக எடுத்துக் கொள்ள முடியவில்லை. உண்மையிலேயே சில விஷயங்களை ஆரம்பம் முதலே கற்றுக் கொடுக்கத்தான் வேண்டும்.

    எல்லாமே அருமை.

    ReplyDelete
  4. இந்த படத்தோட ஒன் லைன் திருட்டு தான்!
    அப்படியா! யாரோட கதையை திருடறீங்க?!
    இது குட்டியாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறதே ...அனைத்தும் அருமை !

    ReplyDelete
  5. சொந்தமா யோசிச்சு இவ்வளவு ஜோக்ஸ் எழுதுவது அவ்வளவு எளிதல்ல, சூப்பர்!!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி நண்பரே!

      Delete
  6. யப்பா கண்ணைக்கட்டுதே......எல்லாமே அருமை அருமையிலும் அருமை 6

    ReplyDelete
  7. அருமை சகோதரர்.

    ReplyDelete
  8. கொஞ்சம் இல்லை, நிறையவே சிரிச்சுட்டோம் பாஸ்.

    ReplyDelete
  9. அனைத்தும் அருமையாய் இருந்தது சுரேஷ்.

    ReplyDelete
  10. ஜோக்ஸ் அருமை...
    ரசிக்க வைத்தன...

    ReplyDelete
    Replies
    1. ரசிக்க வைத்ததால் மகிழ்ந்தேன்! நன்றி!

      Delete
  11. எல்லாமும் அருமை. மூணாவதும் ,கடைசியும் மறுபடி போய்ப் பார்த்து இரண்டாம்முறையாகச் சிரிச்சேன். :)))

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாளுக்கு பிறகு வந்திருக்கீங்க! வாங்க! சிரித்து மகிழ்ந்தமைக்கு நன்றி!

      Delete
  12. சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  13. சூப்பர் ஜோக்ஸ்.....

    ReplyDelete
  14. கல்யாணத்தை ரொம்ப சிக்கனமா நடத்தறது எல்லாம் ஓக்கேதான் ஆனா…
    என்ன ஆனா?
    தாம்பூலப் பைக்கு பதிலா சுருக்குப்பை கொடுக்கிறது எல்லாம் ரொம்ப ஓவர்..!//

    சேவை........காப்பி/வென்னீர் மிகவும் ரசித்தோம்....எல்லாமேதான்...

    3 வது மட்டும் இடிக்கின்றது நண்பரே!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!