யார் கடவுள்?
யார் கடவுள்? உலகம் உதித்ததிலிருந்தே உயிர்பெற்றிருக்கும் ஓர் கேள்வி யார் கடவுள்? கடவுள் உண்டென்றால் சொல்லுங்கள் யார் கடவுள்? பகுத்தறிவாளர்கள் தர்க்கவியலாளர்கள் கடவுள் மறுப்பாளர்கள் இன்னும் பலரும் கேட்கிறார்கள் யார் கடவுள்? விடைதான் கிடைத்த பாடில்லை! ஆன்மீக வாதிகள்! ஆண்டவனைத் தொழுபவர்கள்! இறை நம்பிக்கை மிகுந்தோர்! சமய குருமார்கள்! சாத்திரம் படைப்பவர்கள்! வேதாந்திகள்! ஞானிகள் என்று எல்லோரும் ஏதோ ஒன்றை “கடவுள்” என்று அறுதியிட்டு சொன்னாலும், அது எது? எப்படி? ஏன்? என்று விவரம் கேட்கிறது பகுத்தறிவாளர்கள் குழு! கடவுள்தான் மனிதனைப் படைத்தானா? அவன் தான் எல்லோரையும் காத்தானா? அப்படியெனில் ஏன் ஏற்ற தாழ்வு? எதற்கு அடித்துக் கொள்ள வேண்டும்! பஞ்சமும் பசியும், பட்டினியும்! வெள்ளமும் புயலும்! விபத்தும் கொலையும் கொடுமையும் ஏன் தொடர வேண்டும்! நல்லவர்கள் கெட கெட்டவர்கள் வாழ்வது ஏன்? இப்படியொரு கேள்வி எழுகிறது! கடவுள் உண்டெண்றால் நீ பார்த்திருக்கிறாயா? பார்க்க முடியாது! உணரத்தான் முடியுமென்றால் உணர்ந்திருக்கிறாயா? இப்படி நீள்கி...