நியதியும் வசதியும்! கவிதை!


இப்படித்தான் வாழ வேண்டும்
என்று ஒரு கட்டுக்குள்
கட்டுக்கோப்பாய் வாழ்வது நியதி!
எப்படியும் வாழ்வேன்!
என்று கட்டுக்களை
தளர்த்தெரிந்து பாய்வது வசதி!
நியதிக்குள் வாழ்க்கை நீடிக்கும்
நித்தம் நம்மை சோதிக்கும்!
நெளிவும் சுளிவும் தரும் வசதி!
நித்தமும் அதனால் அசதி!
பித்தமும் ஒருநாள் உறுதி!
கூட்டுக்குள்ளே புழுவாக இருந்து
பட்டு இறக்கை முளைத்து
பறக்கிறது வண்ணத்துப்பூச்சி!
கூட்டினை உடைத்து
கொடியதன் கொழுந்தினைத்
தின்று புழுவாய் உதிர்ந்து மடிகிறது
கம்பளிப்பூச்சி!
சிப்பிக்குள் அடங்கினால் விளையும்
முத்து!
குப்பிக்குள் அடங்கினால் விளையும்
மருந்து!
உடைப்பெடுக்காத ஆறு!
ஊட்டும் நல்ல சோறு!
மடை திறந்தால் அது வெள்ளம்!
உடைந்து போகும் உழவன் உள்ளம்!
கட்டுக்குள் வாழ்க்கை அமர்க்களம்!
கட்டுடைத்த வாழ்க்கை போர்க்களம்!
நியதி மனிதன் வகுத்தது!
வசதி மனிதன் படைத்தது!
படைப்பு மிஞ்சினால் நியதி அடங்குகிறது!
எல்லோரும் சமன் என்பது நியதி!
எல்லோருக்கும் மேல் நான் என்பது வசதி!
நியதிக்கும் வசதிக்கும்
நிதம் தோறும் போட்டியில்
வென்றதுவோ வசதி!
வல்லான் வகுத்ததே நியதி என்று
எல்லோரும் சொல்லும் நிலை இன்று!
உள்ளதை உள்ளபடி உரைக்கவோ
நல்லதை நல்லபடி செப்பவோ
அல்லதை அல்லதென தள்ளவோ
இல்லாமல் போனதே நியதி!
இதுவே அழிவினுக்கு கொண்டு செல்லும் வியாதி!




தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. அருமை...

    /// மடை திறந்தால் அது வெள்ளம்!
    உடைந்து போகும் உழவன் உள்ளம்!
    கட்டுக்குள் வாழ்க்கை அமர்க்களம்!
    கட்டுடைத்த வாழ்க்கை போர்க்களம்! ///

    உண்மை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கவிதையின் வரிகள் ரசிக்கும் படி அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்ல கருத்துள்ள கவிதை!! கலக்கல் நண்பா!

    ReplyDelete
  4. சிந்திக்க வைக்கும் சிறப்பான பகிர்வுக்கு பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் சகோதரா .

    ReplyDelete
  5. மடை திறந்தால் அது வெள்ளம்!
    உடைந்து போகும் உழவன் உள்ளம்!
    கட்டுக்குள் வாழ்க்கை அமர்க்களம்!
    கட்டுடைத்த வாழ்க்கை போர்க்களம்!//

    மிக மிக அருமையான கருத்துச் செறிவுள்ள கவிதை!

    நல்லதொரு பகிர்வு! நன்றி! நண்பரே!

    ReplyDelete
  6. அருமையான கவிதை வரிகள்.

    "//உள்ளதை உள்ளபடி உரைக்கவோ
    நல்லதை நல்லபடி செப்பவோ
    அல்லதை அல்லதென தள்ளவோ
    இல்லாமல் போனதே நியதி!
    இதுவே அழிவினுக்கு கொண்டு செல்லும் வியாதி!//" - முடிவு நாராக இருக்கிறது

    ReplyDelete
  7. கருத்துள்ள கவிதை.... பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!