காதல் ஹைக்கூ!

காதல் ஹைக்கூ!


பூத்தது
கருகவில்லை!
காதல்!

ஈர்ப்பில் வளர்ந்து
எதிர்ப்பில் மறித்தது
காதல்!

நிழலில் இனிக்கும்
நிஜத்தில் கசக்கும்
காதல்!

மென்மையானது
ஆனால் வலிமையானது!
காதல்!

கசக்கி எறிந்தாலும்
வாசம் பரப்புகிறது
காதல்!

அன்பை விதைத்தார்கள்
முளைத்தது
காதல்!

  அழிவே இல்லா
  தொற்றுநோய்!
  காதல்!

  உயிர்களில் முளைத்து
  உணர்வுகளில் கலக்கிறது
  காதல்!
 
  அழித்துவிட்டு
  அழியாமல் நிற்கிறது
  காதல்!

  பேதமின்றி பூத்து
  பேதத்தால் கருகுகிறது
  காதல்!

 கிள்ளி எறிந்தாலும்
 துளிர்த்துக்கொண்டே இருக்கும்
 காதல்!

 அறிஞனையும்
 அசடாக்கும்
 காதல்!

 உலகம் அழிந்தாலும்
 உயிர்த்து நிற்கும்
 காதல்!

  பற்று வைத்தார்கள்
  வரவானது
  காதல்!

 மனம் லயித்ததும்
 இசைத்தது
 காதல்!

 இதயத்தில் பூக்கிறது
 இறவாத
 காதல்!


 இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்து கருத்துக்களை பின்னூட்டத்தில் இட்டு உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!Comments

 1. சிறப்பான கைக்கூக் கவிதைகளுக்குப் பாராட்டுக்களும் உங்களுக்கு
  என் வாழ்த்துக்களும் சகோதரா .

  ReplyDelete
 2. அட...! அனைத்தும் அருமை நண்பரே... படமும்...!

  அன்பு தின வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. காதல் காதல் காதல் எல்லாம் சூப்பர் !

  ReplyDelete
 4. //கிள்ளி எறிந்தாலும்
  துளிர்த்துக்கொண்டே இருக்கும்
  காதல்!// அருமை!

  அனைத்துமே அருமையாக உள்ளது!

  ReplyDelete
 5. காதலர் தினத்திற்கான
  சிறப்புக் கவிதை வெகு வெகு சிறப்பு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. சிறப்புப் பதிவு அருமை சுரேஷ்

  ReplyDelete
 7. வணக்கம் சகோதரா ! காதலர் தின வாழ்த்துக்கள்...!
  கிள்ளி எறிந்தாலும்
  துளிர்த்துக்கொண்டே இருக்கும்
  காதல்!
  எதை எடுப்பது எதை விடுவது என்று தெரியவில்லை அத்தனையும் அழகு அருமையான வரிகள் ..! வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
 8. பற்று வைத்தார்கள்
  வரவானது
  காதல்!//
  சிறப்ப பதிவு சார்!
  கவிதை அருமை !!

  ReplyDelete
 9. காதலை ரசித்தேன்

  ஈர்ப்பில் வளர்ந்து
  எதிர்ப்பில் மறித்தது
  காதல்!
  இதை இன்னும் ரசித்தேன்

  ReplyDelete
 10. அத்தனையும் அருமை......

  காதலர் தின சிறப்புப் பதிவு மிக நன்று. பாராட்டுகள்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2