மொக்க ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!


1.மன்னர் அடிக்கடி நகர்வலத்தில் பிச்சைக்காரர் வேஷம் போடுகிறாரே ஏன்?
அரண்மனை கஜானா காலியாக இருக்கிறதாம்! இப்படியாவது நிரப்புவோமே என்றுதான்!

2.என்ன சொல்றீங்க நம்ம தலைவரு சுரண்டியே லாபம் பார்த்தவரா?
ஆமாம் இதுக்கு முன்னாடி சுரண்டல் லாட்டரிநடத்திக்கிட்டு இருந்தார்!

3.அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?
பையனுக்கு ஜுரம் அடிக்குது பாருங்க டாக்டர்னு சொன்னா வெளியேகாயம் எதுவும் இல்லையே எங்க அடிச்சுதுன்னு கேக்கறாரே!

4.தலைவர் எதுக்கு சிமெண்டும் கொத்துக்கரண்டியுமா போஸ் கொடுக்கிறார்?
சட்டத்துல இருக்கற ஓட்டையை அடைக்க போறாராம்!

5.தலைவருக்கு வாசம் பிடிச்சிருக்குன்னு சொன்னியே எந்தப் பூவோட வாசம்?
ஊகும்! சிறைவாசத்தை சொன்னேன்!

6.தலைவர்கிட்டே கூட்டணி அமைக்க கேட்டு வந்தவங்க ஏன் தலை தெறிச்சு ஓடறாங்க?
லோக்சபாவை நானும் ராஜ்யசபாவை நீங்களும் பிரிச்சுக்குவோம்னு சொன்னாராம்!

7.மெகாசீரியல் டைரக்டரை லவ் பண்ணது தப்பா போச்சு!!
ஏன்?
ஓரு வாரம் ஊருக்கு போய் வர்றதுக்குள்ள ஆளை மாத்திட்டார்!


8.அந்த பிளேயர் நல்லா ஆடியும் ஏன் ஏலத்தில எடுக்கலை?
நான் யாருக்கும் விலைபோகமாட்டேன்னு பேட்டிகொடுத்திட்டாராம்!

 9.மந்திரியாரே நாட்டில் மும்மாரி பொழிகிறதா?
அது எங்கே பொழிகிறது மன்னா! மக்கள்தான் வசைமாறி பொழிகிறார்கள்!

10.குற்றவாளிக் கூண்டில் நிற்பது உனக்கு கஷ்டமாக இல்லையா?
ஆமாங்க எசமான்! கால் ரொம்ப கடுக்குது! ஒரு சேர் இருந்தா ஏற்பாடு பண்ணுங்க!

 11.அமைச்சருக்கு பொது அறிவு ரொம்ப கம்மியா இருக்கு?
 எப்படி சொல்றே?
ஆளுநர் உரையை விளக்கிப் பேசனும்னு சொன்னா   ‘விம்பார்’ தருவாங்களான்னு கேக்கறார்!


12.மன்னர் தன் வாளை அடிக்கடி கூர் தீட்டுகிறாரே போர் ஏதேனும் வருகிறதா?
 ஊகும்! அந்தப் புரத்தில் ராணிகளுக்கு பூ நறுக்கிக் கொடுத்து கொடுத்து மழுங்கிவிடுகிறதாம்!

13.அந்த டாக்டர் கிரிக்கெட் பிரியராம்!
எப்படி சொல்றே?
ஆபரேசன் தியேட்டர் முன்னாடி சிவப்பு பச்சை விளக்கு தெரியுது பாரு பேஷண்ட் அவுட்டுன்னா சிவப்பு விளக்கு போடுவாராம்!

14.என் பர்ஸ் காலியாக காலியாக என் மனைவிக்கு
சந்தோஷம் கூடிகிட்டே போச்சு!
என்னது?
ஆமாம் என் பர்ஸ் காலியானதும் அவளுக்கு நகை, புடவைன்னு நிரம்பிடுச்சே!

15.அவர் பாட ஆரம்பிச்சா கேட்டுக்கிட்டே இருக்கலாம்!
 அவ்வளவு நல்லா பாடுவாரா?
ஊகும்! நான் ‘கேட்’டு கிட்டேன்னு சொன்னேன்!


16.தலைவர் சின்ன விசயத்தையும் ஊதி பெரிச்சாக்கிடுவாரா எப்படி?
பிரச்சார பீரங்கிகள் வாங்கியதில் ஊழல் இருக்குன்னு அறிக்கை விடறாரே!

17.நீ உன் மாமியார் மேல உயிரையே வச்சிருக்கியாமே?
ஆமாம்! அவர் உயிர் பேங்க்ல வச்சிருக்கிற 50 சவரன் நகையில இல்ல இருக்கு!

18.நம் மன்னர் ரன்னிங் ரேசில் சாம்பியனாக இருப்பதற்கு அண்டை நாட்டு மன்னன் தான் காரணமா? என்ன சொல்லுகிறீர்கள் அமைச்சரே!
ஆமாம்! அவனோடுதான் அடிக்கடி போரிட்டு புறமுதுகிட்டு ஓடிவந்து பயிற்சி எடுத்துக் கொண்டார்.

 19.தலைவர் எங்க சாணியும் கையுமா போயிட்டு இருக்கார்!
கட்சி வளர உரமிடுங்கள்னு சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டார் போலிருக்கு!

 20.பெட்சீட் வெளியிட்டார் பெட்சீட் வெளியிட்டார்னு சொல்றாங்களே! நமக்கு ஒரு நாலு பெட்சீட் வாங்கிட்டு வாங்க!
    தலைவரே! அது பெட்சீட் இல்ல! பட்ஜெட்!

அனைத்து நகைச்சுவை துணுக்குகளும் எழுதியவர். சா.சுரேஷ்பாபு.

டிஸ்கி} முதலில் சொந்தமாகத்தான் ஜோக் எழுதிக் கொண்டிருந்தேன்! ஒரு கட்டத்தில் இது நமக்கு வராது என்று பிறரின் ஜோக்குகளை இதழ்களில் இருந்து தொகுத்து போட்டேன்! இன்று மீண்டும் ஒரு முயற்சி! கொடுமையாக இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்! அடுத்தவாரம் நானே எழுதலாமா என்றும் சொல்லுங்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Comments

 1. ஜோக் எல்லாம் வராது என்று சொல்லாதீர்கள்... நல்லா இருக்குங்க...
  4, 7 11 எல்லாம் அசத்தல்... தொடருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே! உங்களின் ஊக்கம் தரும் கருத்துக்களுக்கு நன்றி!

   Delete
 2. தாராளமாக எழுதுங்கள்.

  ReplyDelete
 3. மொக்க ஜோக்ஸ் என்று சொல்ல முடியல! எல்லாமே நல்லாத்தான் இருக்குங்க.....!!! 19, 15, 7, 4, 3, சூப்படர்!!!!

  ReplyDelete
 4. சிறப்பான நகைச்சுவைகளே பகிர்வுக்கு மிக்க நன்றி நீங்களும் திறன்பட
  எழுதுவீர்கள் .தொடர்ந்தும் நீங்களே எழுத வாழ்த்துக்கள் சகோதரா .

  ReplyDelete
 5. 10 .... டாப்....

  அனைத்தும் நன்று. தொடரட்டும்....

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!