மொக்க ஜோக்ஸ் பகுதி 2

ஜோக்ஸ்!


1.      தலைவருக்கு கொஞ்சம் கூட அரசியல் அறிவே இல்லை!
எப்படி சொல்றே?
ஜனாதிபதி ஆட்சியிலே மந்திரி பதவி கிடைக்குமான்னு கேட்கிறாரே!

2.      நம்ம தலைவருக்கு டாக்டர் பட்டம் கிடைச்சதும் பண்ற அலும்பு தாங்க முடியலை!
ஏன் என்னாச்சு?
எப்பவும் கூட ரெண்டு நர்சுங்க இருக்கணும்னு சொல்லி கூட்டிக்கிட்டு திரியறார்!

3.      தலைவர்கூட ஒரே ரோதனையா போச்சு!
ஏன்? என்னாச்சு?
சூப்பர் சிங்கர் போட்டிக்கு ஜட்ஜை மாத்தனும்னு போராட்டம் அறிவிச்சிருக்காரு!

4.      அந்த டாக்டருக்கு ஆபரேஷன்னா அல்வா சாப்பிடறமாதிரி!
அப்ப ஆளை அப்படியே விழுங்கிடுவாருன்னு சொல்லு!

5.      மன்னா! நம் நாட்டை போர்மேகங்கள் சூழ்ந்துவிட்டன!
உடனே வெள்ளைக்குடைடையை விரித்து தற்காத்துக்கொள்ள வேண்டியதுதானே தளபதியாரே!

6.      பையனுக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சுன்னு எப்படி கண்டுபிடிச்சே!
அதான் பையன் சமையல்கட்டுல இருந்து வரும்போதே தெரிஞ்சிடுச்சே!


7.      கண்டக்டரை லவ் பண்ணது தப்பா போச்சுடி?
ஏன்?
ஒரு ஸ்டேஜுக்கு மேல தாண்ட மாட்டேங்கிறார்!

8.பொறி வைச்சு பிடிப்பேன்! பொறி வைச்சு பிடிப்பேன்னு மன்னர் சொல்லிக்கிட்டு இருக்காரே! யாரை? எதிரியையா?
  நீ வேற அரண்மணை குளத்துல இருக்கற மீன்களை பொறி போட்டு பிடிக்கிறதை சொல்றாரு அவரு!

8.      வெட்டியா திரிஞ்சிக்கிட்டு இருக்கியே உருப்படியா எதையாவது பண்ணக்கூடாதான்னு மகன் கிட்டே கேட்டியே ஏதாவது பண்ணானா?
உருப்படி ஒண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திட்டான்!

9.      சாயங்காலம் ஆனா உன் கணவர் உன்னையே சுத்தி சுத்தி வருவாரா எப்படி?
பவர்கட் ஆயிருதுல்ல விசிறிவிடத்தான்!

10.  என் மனைவி நான் போட்ட கோட்டை தாண்டமாட்டா?
அவ்வளவு அடக்கமா?
மிதிச்சிருவான்னு சொல்ல வந்தேன்!

11.  சொன்னா புரிஞ்சுக்கோங்க! டெலிவரி இலவசம்னு போட்டிருக்கிறது வாஸ்தவம்தான்! அதுக்காக உங்க மனைவியோட டெலிவரி செலவை ஏத்துக்க சொன்னா எப்படி?
12.  தலைவர் களத்திலே இறங்கினா தூத்திடுவேன்னு சொன்னது இப்பத்தான் புரியுது!
எப்படி?
அங்க பாருங்க நெல்லை என்னாமா தூத்தறாரு!

13.  தலைவருக்கு நாணயம்னா ரொம்ப பிடிக்கும்!
அதான் எப்பவும் உண்டியலும் கையுமாவே அலையுறாரா?

14.தலைவர்கிட்ட யாரும் நெருங்கவே முடியாது!
  ஏன் அவ்வளவு பாதுகாப்பா?
 இல்லே அவ்வளவு கப்பு!


15.  தலைவர் எதையும் சிம்பாலிக்காத்தான் பேசுவாரா?
ஏன்?
மொபைல்ல பேலன்ஸ் இல்லைங்கிறதை செல் இருக்கிறது ஆனால் சில்லறை இல்லைன்னு சொல்றாரே!

16.  உண்ணாவிரதத்துல கலந்துக்க தலைவர் ஏன் இவ்வளவு அவசரப்படறாரு?
லேட்டா போனா பிரியாணி தீந்திடுமாமே!

17.  பேங்க்ல லோன் வாங்கி கம்பி நீட்டினியாமே எப்படி?
இரும்பு கம்பெனி ஆரம்பிச்சேன்!


18.  அந்த சாமியார் ஏன் கோபமா இருக்கார்?
ஒரு நடிகையும் அவர் ஆசிரமத்தை ஏறெடுத்து பார்க்கவில்லையாம்!

19.சிக்கனமா இருக்க வேண்டியதுதான் அதுக்காக இப்படியா?
  ஏன்? என்னாச்சு!
மின்சார சிக்கனம்னு சொல்லி கரண்ட் அக்கவுண்ட்டை கூட ஓப்பன் பண்ணமாட்டேங்கிறாங்களே!

20. மன்னர் எட்டடி பாய்ந்தால் இளவரசர் பதினாறடி பாய்கிறாரா? அவ்வளவு வீரமா?
ஊகும்! ஓட்டத்தில் சொன்னேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. வெள்ளைக்குடை, சமையல்கட்டு, ஆசிரமம் - ஹா... ஹா...

    ReplyDelete
  2. எல்லாமே நல்லாருக்கு.....3, 5, 6, 18,13,14, சூப்பருங்க!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2