அப்பாவிக் கணவனை “மைதிலி’ எப்படி ஏமாத்துவா? ஜோக்ஸ்

ஜோக்ஸ்!


1.      என்ன இது கதாநாயகன் ஒத்தடம் குடுக்கிறமாதிரி மிருதுவா பேசறார்?
இது  அவர் புதுசா கண்டுபிடிச்ச ‘ஸ்பாஞ்ச்’ டயலாக்காம்!
                    வி.சகிதா முருகன்.

2.      மந்திரியை வி. ஆர். எஸ் சில் போகச்சொன்னால் கேட்கமாட்டேன் என்கிறார்?
அதுக்காக அவரை வம்படியாக போருக்கு அழைத்துச்செல்வது நன்றாக இல்லை அரசே!
                  வி. சகிதாமுருகன்
.
3.      என் மனைவி ட்விட்டர் மாதிரி!
புரியலையே!
என்னை ஃபாலோ பண்ணிக்கிட்டே இருப்பா!
             பி. பாலாஜிகணேஷ்

4.      டாக்டர் என் கணவருக்கு தூக்கத்துல துணி துவைக்கிற வியாதி இருக்கு
அதுக்கு நான் என்ன செய்யட்டும்?
வீட்ல வாஷிங் மெஷின் இருக்கு… அவரை தூக்கத்துல சமைக்கிற மாதிரி பண்ணிடுங்க!
                   பர்வீன் யூனுஸ்

5.      என் மனைவியோட சமையல் டிவி சமையல் மாதிரி இருக்கும்!
புரியலையே!
பார்க்கலாம்! ஆனா சாப்பிடவே முடியாது!
            பி.பாலாஜி கணேஷ்

6.      சர்வர் காப்பி சாப்பிடற அளவுக்கு சூடு பதமா இருக்கா?
கண்டிப்பா சார்! இப்பத்தான் விரை விட்டுப்பார்த்தேன் பதமாயிருக்கு!
                 பி. பாலாஜி கணேஷ்

7.      சார் படம் பார்க்குறப்ப ஏன் தொணதொணன்னு பேசுறீங்க? ஒண்ணுமே புரிய மாட்டேங்குது!
நாங்க பர்சனல் விஷயம் பேசுறோம். உங்களுக்கு ஏன் புரியணும் சார்?
                    பி.பாலாஜி கணேஷ்

8.       .ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சீரியல்பல்பை முழுங்கினேன்… இன்னும் வலிக்குது டாக்டர்!
நீங்க முழுங்கினது மெகா சீரியல் பல்ப்! அதான்!
                       பர்வீன் யூனுஸ்

9.      மன்னரை பாரம் தூக்கக் கூடாது என்று அரண்மனை வைத்தியர் கூறிவிட்டாராம்!
அதற்காக இடுப்பில் வாளுக்குப் பதில் குண்டூசியையா தொங்க விடுவது?
                   பி.பாலாஜி கணேஷ்.


10.  டாக்டர் வீட்டு கல்யாணத்துக்கு போனது தப்பா போச்சு!
    ஏன்?
  பந்தியிலே கூட்டமா இருக்குன்னு டோக்கன் குடுத்து உட்கார வைச்சிட்டாங்க!
                      பர்வீன் யுனுஸ்

11.புலவரே! பாடலுக்கு ஏன் கூடுதலாக பொற்காசுகள் கேட்கிறீர்கள்?
என் பாட்டுக்கு மெட்டு போட்டவருக்கு தரணுமே மன்னா!
                        லெ.நா.சிவகுமார்

12.  அந்த பேஷண்ட் அநியாயத்துக்கு பொய் சொல்றார் டாக்டர்?
    என்னன்னு?
நான் கொடுத்த டியுப் மாத்திரையை ஏன் சாப்பிடலைன்னு கேட்டா பஞ்சர் ஆயிடுத்துன்னு சொல்றாரு!
                  பி. பாலாஜி கணேஷ்

13.  டாக்டர் என் பையனுக்கு ஐந்துவயசாகியும் இன்னும் பேச்சே வரலை!
கவலைப்படாதீங்க வருங்காலத்துல அவன் பிரதமராக் கூட வருவான்!
                ஆர்.பி. ஜெயச்சந்திரன்.

14.  என்னதான் மெகா சீரியல்னாலும் கோர்ட் சீனை இப்படியா எடுப்பாங்க?
என்ன ஆச்சு?
டவாலி, குற்றவாளியோட பேரை முன்னூறு தடவை சொல்லி கூப்பிடறாரே!
                      பர்வீன் யூனுஸ்

15.  டாக்டர் எனக்கு ரெண்டு ரெண்டா தெரியுது!
பொய் சொல்லாதீங்க! பீஸ் பணத்தை மட்டும் சரியா கொடுக்கிறீங்களே அதெப்படி?
                     பி.பாலாஜி கணேஷ்

16.  போரில் எதிரியை ஒரு கை பார்த்துவிடுகிறேன் என்று மன்னர் சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் விளங்குகிறது!
எப்படி?
எதிரியின் கையைப் பார்த்து ஜோசியம் சொல்லிக்கொண்டிருக்கிறாரே!
                 பர்வீன் யூனுஸ்

17.விஞ்ஞான வளர்ச்சியால தூக்கம் கெட்டுப்போயிருச்சா எப்படி?
 ஆபீஸ்ல கண்காணிப்பு காமிரா பொருத்திட்டாங்களே!
                  பர்வீன் யூனுஸ்

18.  முதுகு வலின்னு வந்த எனக்கு ஏன் டாக்டர் வயித்துல ஆபரேஷன் செய்யப் போறேன்னு சொல்றீங்க?
    முதுகை விட வயித்துல கத்தியால கிழிக்கறதுதானே ஈஸியா இருக்கும்!
                        எஸ்.எஸ். பூங்கதிர்.

19.  மண்டபத்துக்கு வெளியே நின்னு ஏன் எல்லோரும் மாப்பிள்ளை பேரைச் சொல்றாங்க?
அதுதான் மாப்பிள்ளை அழைப்பாம்!
                      நா.கி.பிரசாத்

20.  மெகாசீரியல் இயக்குனரை படத்துக்கு டைரக்டரா போட்டா இப்படித்தான்…
ஏன்… என்னாச்சு?
படத்தோட ட்ரெய்லரே மூணு மணிநேரம் ஓடுது!
                   பர்வீன் யூனுஸ்.

21.  போரைக் கடலில் வைத்துக்கொள்ளலாம் என்று எதிரிக்கு மன்னர் ஓலை அனுப்பி இருக்கிறாரே ஏன்?
மன்னர் ஓடுவதை விட நீந்துவதில் கெட்டிக்காரராம் அதுதான்!
                        பர்வீன் யூனுஸ்.

22 அப்பாவிக் கணவரை மைதிலி நல்லா ஏமாத்தறா!
  எப்படி?
பேஸ் புக்குக்கு ‘பேஷியல்’ பண்ணனும்னு சொல்லி மாசாமாசம் ஆயிரம் ரூபாய் வாங்கிடறாளே!
                 பர்வின் யூனுஸ்

நன்றி: தி இந்து (தமிழ்)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!   

                          

Comments

 1. ஹா... ஹா... மெகா சீரியல் பல்ப் செம...!

  ReplyDelete
 2. டாக்டர் என் பையனுக்கு ஐந்துவயசாகியும் இன்னும் பேச்சே வரலை!
  கவலைப்படாதீங்க வருங்காலத்துல அவன் பிரதமராக் கூட வருவான்!
  \\\\\\\\\
  ஹா ஹா... சூப்பர் ரசிச்சேன்

  ReplyDelete
 3. வணக்கம் சகோதரர்
  அனைத்தும் ரசிக்கும் படியாகவும் சிரிக்கும் படியாகவும் அமைந்துள்ளது கண்டதும் மனம் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக எனது மனைவி டிவிட்டர் மாதிரி டாப். பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 4. ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2