"டீக்கடைக் காரர்” பொண்ணை கட்டிக்கிட்டா என்ன வசதி? ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!


1.பொதுக்கூட்ட பாதுகாப்புக்கு 100 போலீஸ் வேணும்னு கேட்டிருக்கீங்களே எதுக்குத் தலைவரே?
போலீஸ்காரங்களாவது கூட்டமா இருக்கட்டுமேன்னுதான்!
            சீர்காழி வி. வெங்கட்

2.உங்க பையன் படிச்சு முடிச்சதும் என்னவாகனும்னு ஆசைப்படுறீங்க?
பாஸாகணும்னு!
              கொளக்குடி சரவணன்.

3.கடைசியாக ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?
நிறைய பொய் சொல்லிட்டேன் போதும் எசமான்!
             பர்வீன் யூனுஸ்

4.என்னய்யா… டி.வி சர்வீஸுக்கு வந்தவன், வாரண்ட்டை பத்தி கேக்கிறான்.
எதையாவது உளறி வெச்சுடாதீங்க தலைவரெ, அவன் வாரண்டி கார்டு கேக்கிறான்!
                 அ.ரியாஸ்.

5.எனக்கு உலகமே என் மனைவிதான்!
மெதுவாப் பேசுங்க தலைவரே! இரண்டாம் உலகம் வந்துட்டு இருக்கு!
                   சிக்ஸ் முகம்.

6.வேட்பாளரோட செலவுக்கணக்கை ஒப்படைச்சுதுக்காக நம்ம தலைவரை இனிமேல் தேர்தல்லயே நிக்க தேர்தல் கமிஷன் தடைவிதிச்சுட்டாங்களா? ஏன்?
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததையும் செலவுக்கணக்குகல காட்டியிருந்தாராம்!
             சீர்காழி. வி. வெங்கட்.


7.நம்ம தலைவர் 7 மணி பொதுக்கூட்டத்திற்கு இவ்ளோ அவசரமா 6 மணிக்கே போறார்?
லேட்டாப் போனா மேடையில சீட் கிடைக்கிறதில்லையாம்!
                  அ.ரியாஸ்.

8.தலைவர் மப்புல இருக்கார்னு எப்படி சொல்ற?
ரொம்ப நேரமா ஏர்- கூலருக்கு வணக்கம் வெச்சபடியே இருக்காரே!
                     அ. ரியாஸ்

9.ஆட்டோவிலே கஞ்சா கடத்தினது தப்புன்னு உனக்குத் தெரியாதா?
அவசரத்துக்கு ஆட்டோதான் கிடைச்சுது எசமான்!
                      கு. அருணாசலம்.

10.வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைச்சு தண்ணியடிச்சுட்டேன்!
  அப்புறம்?
என் மனைவி ‘பத்திர’ காளியாயிட்டா!
                  வி.சகிதாமுருகன்.

11.ஆங்கிலம் கற்றுக்கொண்ட நமது மன்னரின் அலப்பரை தாங்கமுடியவில்லையா! எப்படி?
புறமுதுகிட்டு வருவதைக் கூட…  ‘வார் இன் ரிட்டர்ன்’னு சொல்றாரே!
                     நா.கி.பிரசாத்.


12.நம்ம தலைவர் எதுக்கு நாட்டுல குற்றவாளிங்க எத்தனை சதவீதம்னு கேக்கிறாரு…?
அந்த ஓட்டெல்லாம் தலைவருக்குத்தானே விழும், அதான் கேட்கிறாரு!
                  வி.சாரதிடேச்சு.

13.போதையில பக்கத்து பார்வதி வீட்டுல ஏன் நுழைஞ்சீங்க?
தண்ணிப் போட்டா எம் மூஞ்சியிலே முழிக்காதேன்னு நீதாண்டி கஸ்மாலம் சொன்னே?
                அ.கிருஷ்ணசாமி.

14.பிரம்மாண்டமான கூட்டத்தை பார்த்ததும் தலைவர் அசந்துட்டார்!
  எந்த மீட்டிங் போனப்ப…?
மீட்டிங் இல்லே… ரங்கநாதன் தெருவுக்கு ஷாப்பிங் போனப்ப…
                     பர்வீன் யூனுஸ்
15.கட்சியில தலைவர் பெயர் மங்கிட்டே வருது!
எதை வச்சு சொல்லுற?
கட்சியின் ஒளி விளக்கேன்னு ப்ளக்ஸ் வச்சவங்க இப்போ கட்சியின் சிம்னி விளக்கேன்னு வச்சிருக்காங்களே!
                  வி.சகிதா முருகன்.

16.தலைவர் ஜிம்முக்கு போன மூன்று நாட்களில் 50 கிலோ வெயிட் போன இடம் தெரியலை!
அட, அவர் உடம்புல இருந்தா?
இல்ல… ஜிம்முல இருந்து!
                சி. ஆர்.ஹரிஹரன்.

17.டீக்கடைக்காரர் பொண்ணை கல்யாணம் செஞ்சதுல ஒரு வசதி இருக்குன்னு சொல்றியே, என்னது அது?
என்னை அடிக்கிறதுக்கு முன்னாடி ‘லைட்டா ஸ்ட்ராங்கா’ன்னு கேட்டுருவா?
                   யுவகிருஷ்ணா.


18.உங்க கணவருக்கு ஹார்ட் ரொம்ப வீக்கா இருக்கு! அதிர்ச்சியான விஷயம் எதையும் சொல்லக்கூடாது!
 அப்ப நீங்க ஃபீஸை சொல்லாதீங்க டாக்டர்!
                 வி.சாரதிடேச்சு.

19.நானும் அவரும் டாஸ்மாக் கடைல நண்பரா ஆனோம்!
அப்போ  ‘கிளாஸ் மேட்’னு சொல்லுங்க!
                 வி.சாரதிடேச்சு.

20.வீட்ல திருட வந்தவனுக்கு போய் மனைவி கையால காபி போட்டு குடுக்க சொல்றீங்களே…
அவனை தண்டிக்க வேறு வழி தெரியலியே…
                  பர்வீன் யூனுஸ்

(விகடன் குமுதம் இதழ்களில் இருந்து தொகுத்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!  Comments

 1. ஆஹா அருமையான தொகுப்பு! பல ஜோக்குகள் முன்னரே வாசித்திருந்தாலும், இப்போது மீண்டும் ரசித்தோம்!

  ReplyDelete
 2. அத்தனையும் ரசிக்கும்படியான நகைச்சுவை சகோதரா :) பகிர்வுகுக்கு
  மிக்க நன்றி .

  ReplyDelete
 3. பத்திர காளி சூப்பர்.. மற்றவையும் நல்லாயிருக்கு..

  ReplyDelete
  Replies
  1. பத்திரகாளி நல்லாருக்கா??????. ஏம்ப்பா உன் டேஸ்ட் இவ்ளோ மட்டமா இருக்கு.

   Delete
  2. அவருக்கு பிடித்திருக்கிறது ரசிக்கிறார்! உங்களுக்கு ஏன் கஷ்டம்? அது ஒன்றும் அப்படி மோசமான ஜோக் இல்லையே?

   Delete
 4. அத்தனையும் சூப்பர்!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!