புகைப்பட ஹைக்கூ 67

புகைப்பட ஹைக்கூ 67


 இழந்தாலும்
 மறக்கவில்லை
 உழைப்பு!

 குனிகையில்
 நிமிர்கிறது
 நம்பிக்கை!

 உடைந்ததுகால்தான்
 உடையவில்லை
 உறுதி!

 தலை தாழ்ந்தாலும்
 உயர்ந்து நின்றது
 உழைப்பு!

  இழந்தது அவயம்
  இழக்கவில்லை
  சுயம்!

  துளிர்த்தது
  நாற்றுமட்டுமல்ல!
  நம்பிக்கை ஊற்றும்தான்!

  நடப்பது
  நம்பிக்கை
  நடவு!

  ஊன்று கோல்
  ஊன்றியது
  நடவு!

  இளைத்தாலும்
  களைக்கவில்லை!
  நம்பிக்கை!

  நடவில்
  உரமானது
  நம்பிக்கை!

  தர்மம் கேட்கும் உலகில்
  தளிர்விடும்
  உழைப்பு!

  புதையும் சேற்றில்
  புதையலாய்
  நம்பிக்கை!

  ஊனம் தடையல்ல
  உயர்த்தும் படி
  உழைப்பவனுக்கு!

  உடல் குலைந்தாலும்
  குலையவில்லை!
     உறுதி!

    விலை போகவில்லை
    விளைநிலமானது
    ஊனம்!

    சோம்பேறிகளுக்கு
    சொல்லியது பாடம்!
    ஊன்றுகோல்!

     நாற்று விளையும் முன்
     விளைந்தது
     நம்பிக்கை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
     


Comments

 1. // இழக்கவில்லை சுயம் // உட்பட அனைத்தும் அருமை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அனைத்துமே அருமை சுரேஷ்.

  பாராட்டுகள்.

  ReplyDelete
 3. தன்னம்பிக்கையூட்டும் கவிதை. அருமை வாழ்த்துக்கள்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2