என் கேள்விக்கு என்ன பதில்?

என் கேள்விக்கு என்ன பதில்?

வலைப்பூ அன்பர்களிடம் கொஞ்ச நாள் முன்பு வரை ஒரு தொற்றுவியாதி சுற்றிசுற்றி வந்தது. ஆனால் அந்த வியாதி ஒருவரையும் தீங்கு விளைவிக்கவில்லை! ஆனாலும் என்ன காரணமோ அந்த வியாதி திடீரென்று மறந்து மறைந்து போய்விட்டது.

    பதிவர்கள் வலைப்பூவை  மறந்து பேஸ்புக், டிவிட்டர் என்று சென்றுவிட்டதால் அந்த வியாதி கிட்டத்தட்ட வலைப்பூவை விட்டே ஒழிக்கப்பட்டது என்று அறிவிப்பு வரும் என்ற நிலையில் அமெரிக்க வலைப்பதிவர் திரு மதுரைத் தமிழனுக்கு அந்த நோய் தொற்றிக்கொண்டது. தொற்று வியாதி என்பதால் அந்த வியாதி இப்போது வலைப்பூ எங்கும் தொடர்ந்து வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது.

   மதுரைத்தமிழனின் வலைப்பூவை வாசித்த சொக்கன் சுப்ரமணியம் அவர்களுக்கு பிடித்த இந்த தொற்று அவரைமட்டுமின்றி அவரது நண்பர்கள் வட்டத்தில் பத்து பேரை தொற்றிக்கொண்டது. அதில் நானும் ஒருவன். என்னை பிடித்த இந்த வியாதி இன்னும் சிலரையும் தொற்றிக் கொள்ளலாம். ஆனால் இந்த வியாதியே ஒரு மருந்து. இது தொற்றிக் கொண்டால் வலைப்பூக்கள் இன்னும் சிறப்பாக பூக்கும். இனி வியாதிக்குள் நுழைவோமா?

மதுரைத்தமிழன் தொடங்கி வைத்த தொடர் பதிவு கேள்விகளும் என்னுடைய பதில்களும்!


  1. உங்களுடைய 100வது பிறந்தநாளை எவ்வாறு கொண்டாட விரும்புகிறீர்கள்?
100 வயது வரை வாழ்ந்தால் கடவுளின் வடிவமான குழந்தைகளோடு விளையாடி மகிழ்ந்து கொண்டாடுவேன்! (இவ்வளவு நாள் வாழ்வது கொடுமையான வரம்)

  1. என்னக் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
கற்றது கை மண் அளவு என்பதை அறிந்தவன் ஆதலால் புதியது எல்லாம் கற்க விரும்புகிறேன்!  ( கணிணியில் போட்டோஷாப்,பேஜ்மேக்கிங்)
  1. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
என் இரண்டாவது பெண் போதனாவோடு நேற்று கிச்சுகிச்சு மூட்டி விளையாடியபோது.

  1. 24 மணி நேர பவர்கட் ஆனால் செய்வது என்ன?
    அடிக்கடி பவர்கட் ஆகும் பிரதேசத்தில்தான் வாழ்கிறேன்! பன்னிரண்டு மணி நேரம் வேலை, தூங்க என்று போய்விடும். மீதி நேரம் குழந்தைகளோடுவிளையாட்டு புத்தகங்கள் படிக்க செலவிடுவேன். ( கல்யாணம் ஆனவுடனேயே பவர்கட் ஆயிருச்சுதானேன்னு குறுக்கு கேள்வி கேக்க கூடாது)

  1. உங்கள் குழந்தைகளின் திருமணநாளில் அவர்களிடம் சொல்லவிரும்புவது என்ன?
உங்கள் குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்படி வாழ் என்று வாழ்த்துவேன்! ( உங்கம்மா மாதிரி தயவு செய்து நடந்துக்காதம்மா)
  1. உலகத்தில் உள்ள பிரச்சனையை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எதை தீர்ப்பீர்கள்?
காவிரி நதி பிரச்சனையை தீர்த்து வைப்பேன்! (கர்நாடகா எம் மேல கேஸ் போடாம இருந்தா)

  1. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
    எந்த விசயத்திற்கு என்பதை பொறுத்தது அது! பலசமயம் என்னைவிட சிறியவர்களிடம் கூட ஆலோசனை கேட்டிருக்கிறேன்! ஆனால் அதை செயல்படுத்துவது என்பது என்னோட சாய்ஸாகத்தான் இருக்கும். ( இலவசமாத்தானே கிடைக்குது யார் வேணும்னாலும் அள்ளி வீசுங்க)
  1. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
தெரிந்தவர் செய்தால் வருந்துவேன்! மற்றோர் என்றால் கண்டும் காணாமலும் விட்டுவிடுவேன்! ( நாம அம்புட்டு பிரபலமாயிட்டோமா ராசான்னு சந்தோஷப்பட்டுக்குவேன்)
  1. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்லுவீர்கள்?
உன்னில் பாதிதான் விடைபெற்றது மீதி இதோ இருக்கிறது என்று என்னைக் காட்டுவேன்! (இனிமேலாவது சந்தோஷமா இருன்னு சொல்லுவேன்)
  1. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
    இருக்கவே இருக்கிறது ப்ளாக், பேஸ்புக், புத்தகம்!

இந்த பதிவை தொடர  அழைக்கும் நண்பர்கள்.

தேவியர் இல்லம் ஜோதிஜி அவர்கள்
ஜாக்கி சேகர் அவர்கள்
மணிமாறன் அவர்கள்
அரும்புகள் மலரட்டும் பாண்டியன் அவர்கள்
இனியவை கூறல் கலாகுமரன் அவர்கள்
என் ராஜபாட்டை ராஜா அவர்கள்
கடல் பயணங்கள் சுரேஷ் அவர்கள்
கரந்தை ஜெயக்குமார் அவர்கள்
கும்மாச்சி அவர்கள்

மழைச்சாரல் பிரியா அவர்கள்

இன்னும் நிறைய பேரை நண்பர்கள் கோர்த்துவிட்டதாலே நான் இவங்களை கோர்த்துவிடறேன்! கண்ட்னியு பண்ணுங்க நண்பர்களே!

Comments

  1. ஆஹா ...அசத்தலான பதில்கள் நான் கூட இப்படிக் கொஞ்சம் சிந்தித்திருக்கலாமோ என்று தோன்றும் அளவிற்கு பதில்கள் பிரமாதம் ! :)) வாழ்த்துக்கள் என் அன்புச் சகோதரனே .

    ReplyDelete
  2. வணக்கம்

    கேள்விக்கான பதில்கள் நன்று ... மாட்டிக்கொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் அவர்களின் கருத்தை நான் பார்க்க இருக்கிறேன். பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. //என் இரண்டாவது பெண் போதனாவோடு நேற்று கிச்சுகிச்சு மூட்டி விளையாடியபோது.// - ஆஹா.. கவித கவித.:):)

    //காவிரி நதி பிரச்சனையை தீர்த்து வைப்பேன்!//- பத்திரிகைகாரங்க யாராவது பார்த்துவிட போராங்க சார்.. :):)

    ஹாஹா.. அருமையான பதிலகள் திரு. சுரேஷ் ஐயா..:):) வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. //காவிரி நதி பிரச்சனையை தீர்த்து வைப்பேன்!//- நாளைய தினத்தந்திக்கு தலைப்பு செய்தி கிடைத்துவிட்டது.. :):)

    ReplyDelete
  5. பதில்கள் ஒவ்வொன்றும் அருமை நண்பரே
    அருமை
    எனது பெயரினையும் இணைத்துள்ளீர்கள் நன்றி நண்பரே
    முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  6. அருமையான பதில்கள் சகோ!

    இது ஒரு சுய பரிசோதனையோ?...
    எப்படி எல்லாவற்றிற்கும் எதார்த்தமாகப் பதில் சொல்வது?...

    எனக்கும் அழைப்புக் கிட்டியுள்ளது. உங்களைப் போன்ற பலரின் பதில்களைப் பார்த்து ஒரு தொகுப்பாக வழங்க வேண்டியதுதான்..:)

    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  7. அம்புட்டு பிரபலம் தான்... சந்தேகம் வேண்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. /(இவ்வளவு நாள் வாழ்வது கொடுமையான வரம்)///

    இந்த பதில்கள் சிந்திக்க வைத்தன என்னை. பலரும் 100 வயதுவரை நாம் எங்கே வாழப் போகிறோம் என்றும் 100 வயது வரை வாழ்வது கொடுமை என்றும் மேலும் பல கோணங்களில் சிந்திக்கின்றார்கள்.

    இவர்கள் இப்படி சிந்திக்க காரணம் அந்த வயதில் நம்மால் ஏதும் செய்ய முடியாது என்று அவநம்பிக்கையோடு இருப்பதால்தான் மேலும் பலர் சந்தோஷமாக வாழ்வது எப்படி என்று தெரியாதாதால்தான் இப்படி நினைக்கிறார்கள். இதை மாற்றதான் எனது 2 வது கேள்வியே பதிலாக இருக்கிறது. இன்னும் ப்ரியும்படி சொன்னால் 100 வயதில் எப்படி ஆரோக்கியமாக இருப்பது சந்தோஷமாக இருப்பது மற்றவர்களுக்கு உதவும்படி இருப்பது என்பதை கற்றுக் கொண்டாலே நிச்சயம் 100 வது பிறந்த நாளை மிக நல்லபடியாக கொண்டாடலாம்தானே

    ReplyDelete
  9. செமை ரகளை பதில்கள்

    வாழ்த்துக்கள் சுரேஷ்
    http://www.malartharu.org/2014/06/actor-named-vimal.html

    ReplyDelete
  10. ஒரே கேள்விக்கு சிரிக்கவும், சிந்திக்கவும் தனி தனியா ரெண்டு பதில்கள் !! சூப்பர் சார்!http://makizhnirai.blogspot.com/2013/10/blog-post_8.html

    ReplyDelete
  11. உங்கள் அழைப்புக்கு நன்றி. இப்போதைய வேலைப்பளூவில் நிச்சயம் கவனம் செலுத்த முடியாத நிலையில் உள்ளேன். நன்றி சுரேஷ்

    ReplyDelete
  12. அனைத்து பதில்களும் அருமை. சிந்திக்க வைக்கக்கூடிய பதில்கள்.

    "// உங்கம்மா மாதிரி தயவு செய்து நடந்துக்காதம்மா)//" - சொந்த அனுபவம் எவ்வளவு விஷயத்திற்கு பயன்படுகிறது.

    ReplyDelete
  13. நல்ல பதில்கள்....

    பாராட்டுகள் சுரேஷ்.

    ReplyDelete
  14. அனைத்துப் பதில்களும் நன்றாக இருக்கிறது.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2