கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 89

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 89


1.   சிறைக்கு போன தலைவர் பெயில் வாங்க வேண்டாம்னு சொல்லிட்டாராமே?
  ஆமாம்! அவர் இதுவரைக்கும் எதுலேயும் ஃபெயில் ஆனதில்லையாம் இப்பவும் ஆக மாட்டாராம்!

2.   துக்க வீட்டுக்குப் போன தலைவர் வாயே திறக்கலையாமே ஏன்?
“துக்கம் தொண்டையை அடைச்சிருச்சாம்!”

3.   பேங்க்ல வேலை செய்யறவங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்க போனது தப்பாயிருச்சு!
மாப்பிள்ளை ஐம்பதாயிரத்துக்கு மேல சம்பாதிக்கிறார்னு சொன்னதுக்கு அப்ப பான் கார்டை காட்டுங்கன்னு சொல்லிட்டாங்க!

4.   அவர் குழந்தை பத்திரிக்கைகளுக்கு எழுதற எழுத்தாளராம்!
  அதுக்காக சன்மானத்துக்கு பதில் சாக்லேட் கேக்கறதெல்லாம் ரொம்ப அதிகமா இருக்குது!


5.   கண்ணுக்கெட்டுகிற தூரம் வரை எதிரிகளே இருக்க கூடாது மந்திரியாரே!
உங்கள் புண்ணுக்கு எட்டுகிற தூரத்தில் இருந்தால் பரவாயில்லையா மன்னா?

6.    புலவர் மேல் மன்னர் ஏன் கோபமாய் இருக்கிறார்?
போர்க்களம் சென்று திரும்பிய மன்னரை “புண்”ணிய யாத்திரை சென்று வந்தவா வாழி!ண்ணு பாடிட்டாராம்!

7.   என் பையன் ஆயிரம் ஆயிரமா சம்பாதிக்கிறான்….!
  அப்ப மாத்தறதுக்கு ரொம்ப சிரமப்படறான்னு சொல்லுங்க!


8.   ராணியார் சேடிப்பெண்களுக்கு “உடைக் கட்டுப்பாடு” விதித்துவிட்டார்களாமே?
இல்லாவிட்டால் மன்னரின் கண்கள் கட்டவிழ்த்துக் கொண்டு பாய்கிறதாம்!

9.   அந்த மளிகை கடையில என்ன கலாட்டா?
அக்கவுண்ட்ல பணம் எடுக்கலாம்னு சொன்னாங்களே என் அக்கவுண்ட்ல எழுதிக்கிட்டு பணம் கொடுங்கன்னு ஒரு கஸ்டமர் கலாட்டா பண்ணிக்கிட்டிருக்காராம்!

10. தன்னை நிலை நிறுத்திக்க தலைவர் ரொம்பவும் சிரமப்படறாராமே!
ஆமாம்! எப்பவும் அவரை தூக்கி நிறுத்த ரெண்டு பேரை கூடவே வைச்சிருக்கார்!

11.  நம்ம தலைவர்  எமகாதகப் பேர்வழியா இருக்கார்!
   எப்படி?
 எவ்வளவோ வற்புறுத்தியும் “அப்பல்லோவில” அட்மிட் ஆகமாட்டேன்னு சொல்லி தப்பிச்சிட்டாரே!

12. கல்யாண வீட்டுக்காரங்க ஏன் இவ்ளோ சோகமா இருக்காங்க?
வந்த மொய்ப்பணம் எல்லாம் ஆயிரமும் ஐநூறாவுமா இருக்குதாம்!


13.  நம்ம தலைவர் குழந்தை மாதிரி…!
அதுக்காக மேடையிலே குடிக்கிறதுக்கு கிரைப் வாட்டர் கேக்கறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!

14. அந்த கெஸ்ட் ஹவுஸ்ல நிறைய பேய்ங்க நடமாட்டம் இருக்குதாம்!
அப்ப அது “கோஸ்ட் ஹவுஸ்”னு சொல்லு!

15. அவர் ஜியோ சிம் யூசர்னு எப்படி சொல்றே?
அன் லிமிடெட்டா சாப்பிட்டுகிட்டு இருக்காரே!


16. ஒண்ணுத்துக்கும் கவலைப்படாதீங்க! நான் இருக்கேன்! நான் பாத்துக்கிறேன்!
நீங்க இருப்பீங்க! அது தெரியும்! ஆனா ஆபரேஷனுக்கு பின்னாடி நான் இருப்பேனா டாக்டர்?


17.  உன் பொண்ணு கல்யாணம் “ஆன்லைன்” ட்ரான்ஸாக்‌ஷனலே நடந்ததுன்னு சொல்றியே நெட்டிலேயா?
ஏ.டி.எம் க்யுவிலே பொண்ணும் பையனும் பார்த்து லவ் பண்ணி கட்டிகிட்டாங்க!

18. மன்னா! புலவர்கள் பரிசில் கேட்டு வாசலில் நிற்கிறார்கள்!
  பேங்கிற்கு போய்வந்து தருகிறேன் என்று சொல்லி அனுப்பிவிடுங்கள் மந்திரியாரே!

19. தலைவர் எதுக்கு திடீர்னு மலைக்கு அரோகரா போடனும்னு கேக்கறார்?
நீ வேற அது மலைக்கா அரோரா! அவங்க படத்தை பார்க்கணுமாம்!


20. ரெண்டு மூனு கன்னிப்பசங்களோட சிரிச்சு பேசிகிட்டு இருக்கறதை என் வொய்ஃப் பாத்துட்டா?
அப்புறம்?
கன்னிப்பேச்சால என் கன்னம் “கண்ணி”போயிருச்சு!

21. எதிரி எதற்கு கப்பம் கட்டியபின்னும் படையெடுத்து வருகிறான் மந்திரியாரே!
  நீங்கள் கட்டிய நோட்டெல்லாம் பழைய ஆயிரம் ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள் ஆச்சே மன்னா!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
 


Comments

  1. சிரித்தேன்
    ரசித்தேன் நண்பரே

    ReplyDelete
  2. சிரித்து, ரசித்தேன்.

    ReplyDelete
  3. #துக்கம் தொண்டையை அடைச்சிருச்சாம்!”#
    இனிமேல் பேசவே மாட்டாரா :)

    ReplyDelete
  4. நிறையவே சிரித்தோம்...
    இன்றுதான் நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை...
    எல்லாத்தையும் வாசித்தேன் சகோதரரே...

    ReplyDelete
  5. அனைத்தும் அருமை!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!