இந்த வார குமுதம் 21-12-16 இதழில் எனது இரண்டு ஜோக்ஸ்!

இந்த வார குமுதம் 21-12-16 இதழில் எனது இரண்டு ஜோக்ஸ்!

நீண்ட நாட்களாகவே குமுதம் இதழில் என் பெயரை காண வேண்டும் என்ற ஆசை.ஒரு வருட காலமாக குமுதம் இதழுக்கு மெயிலில் ஜோக்ஸ்கள் அனுப்பி வந்தேன். ஒன்று கூட தேறவில்லை. தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுவினர் கார்டில் அனுப்ப சொன்னார்கள் அப்படி ஒரு ஐம்பது கார்டுகள் அனுப்பி பார்த்தேன்.
 போன மாதம் நிறைய எதிர்பார்த்து ஏமாந்தேன். இந்த வாரம் வர்தா புயல் பாதிப்பு. ஞாயிறு முதலே கரண்ட் இல்லை. தகவல் தொடர்பு இல்லை. குடிக்க தண்ணீர் தட்டுப்பாடு. இந்த கஷ்டங்களை எல்லாம் வெள்ளியன்று இரவு வாட்சப் மெசேஜ் கிடைத்தபோது பறந்து புயலாய் அடித்து சென்றுவிட்டது.

 இன்வெர்டர் பேட்டரி மூலம் போன் சார்ஜ் செய்து போய் போய் வந்த சிக்னலில் வாட்சப் பார்க்க குமுதம் ஜோக்ஸ் வாழ்த்துக்கள் என்று குருப் நண்பர்கள் என் பெயரை சொல்லியிருந்த போது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் சிக்னல் கிடைக்காமையால் அவர்கள் பதிவிட்டிருந்த இமெஜ் டவுண்லோட் ஆகவில்லை. 
  மறுநாள் சங்கடஹர சதுர்த்தி. விரைவாக பூஜைகள் முடித்து காரனோடை சென்று குமுதம் வாங்கி புரட்டி என் ஜோக்ஸ் படித்தபோது சொல்லவொனா ஆனந்தம்.
    அப்படியே செங்குன்றம் சென்று பாக்யாவும் வாங்கினேன். அதிலும் என் ஜோக்ஸ்கள் மட்டற்ற மகிழ்ச்சியோடு வீடு திரும்பி அனைவரிடமும் சொல்லி புத்தகம் காண்பித்து மகிழ்ந்தேன். இன்னும் முழுமையாக மின்சாரம்வரவில்லை! இரவு வேளையில் மட்டும் வருகிறது. வர்தா புயல் எங்கள் கிராமத்தை புரட்டி எடுத்துவிட்டது. குடிநீர் தட்டுப்பாடு இருக்கிறது. விரைவில் இதில் இருந்து மீண்டுவந்து உங்களை எல்லாம் வலைப்பூ மூலம் சந்திக்கிறேன்.

  குமுதம் இதழ் ஆசிரியர் குழுவினர், தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினர், வலைப்பூ நண்பர்கள், மற்றும் என் பெற்றோர் உறவினர்கள், மனைவி குழந்தைகள் அனைவருக்கும் எனது  சிரம் தாழ்ந்த நன்றிகள். குமுதம் ஜோக்ஸ்கள் கீழே!

பாக்யா ஜோக்ஸ் நாளை பதிவிடுகிறேன்! பதிவு தேத்தனும்ல!தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. வாழ்த்துக்கள் சுரேஷ் ஜி :)

  ReplyDelete
 2. வெற்றி நடை போடுங்க
  வாழ்த்துகள்

  ReplyDelete
 3. சூப்பர் சார்

  ReplyDelete
 4. சூப்பர் சார்

  ReplyDelete
 5. மகிழ்ச்சி சகோ..வாழ்த்துகள்! பாக்யா, குமுதம் என்று விரிந்த உங்கள் எழுத்துப்பயணம் இன்னும் பல இதழ்களைச் சேரட்டும்.
  கிராமத்தில் விரைவில் இயல்பு நிலை திரும்ப பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 6. வாழ்த்துகள். தொடர்ந்து உங்கள் துணுக்குகள், கதைகள் வெளியீடு காணப் பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 7. பாக்யா, தொடர்ந்து குமுதம். பாராட்டுகள்.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் நண்பரே
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. தங்கள் தொடர் முயற்சியும்
  வளர்ச்சியும் மிக்க மகிழ்வளிக்கிறது
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 10. அடுத்த கட்டம்... வாழ்த்துகள் சுரேஷ்.

  ReplyDelete
 11. மனமார்ந்த வாழ்த்துக்கள் சுரேஷ்!! மேலும் மேலும் தங்கள் படைப்புகள் வெளிவர வாழ்த்துக்கள்!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!