புகைப்பட ஹைக்கூ 83

புகைப்பட ஹைக்கூ 83


குடை ஒடிந்தாலும்
தளரவில்லை!
நடை!

விடைகொடுக்க
விருப்பமில்லை!
குடை!

காற்றழித்த குடை
காலமழித்த உடல்!
பிடிப்பு!

பற்று இருக்கும் வரை
முற்றுபெறுவதில்லை!
வாழ்க்கை!

உடைபட்டாலும்
உறுதி இழக்கவில்லை!
குடை,நடை!

ஒடிந்தகம்பிகள்
உணர்த்துக்கிறது மூதாட்டியின்
நிகழ்காலம்!

நிழல்கொடுக்கவில்லை
நீர்தடுக்கவில்லை!
பிடிதளரவில்லை ஆதாரம்!

ஆதாயம் தேடிகளால்
அலைகழிக்கப்படுகிறது
மூதாட்டியின் வாழ்க்கை!

காற்றில் சிக்கிய குடை
காட்டுகின்றது
பாட்டியின் நிலை!

வளமை உடைத்துப் போடுகின்றது
வறுமையின்
குடை!

ஏக்கப்பார்வையில்
அழிக்கப்படுகிறது
ஏளனப் பார்வை!

பிடிமானம் இழந்ததால்
பிய்ந்து போனது
குடை!

பிய்ந்த குடையின் பின்னே
ஓய்ந்தும் ஓடுகிறது
முதுமை!

உடைந்து கிடப்பது
குடைமட்டுமல்ல
பாட்டியின் உள்ளம்!

எலும்பிழந்தாலும்
வலுவிழக்கவில்லை!
குடை!

உடைந்த குடை
ஓய்ந்த தேகம்
சாய்க்கவில்லை நடை!

பற்று அறுந்து போனாலும்
பாட்டியை காக்கிறது
குடை!

முற்று பெறும் வயதில்
முற்று பேறா உழைப்பில்
பாட்டியும் குடையும்!

ஒடிந்த குடையும்
ஓயாதமழையும்கூட தடுக்கவில்லை
 பாட்டியின் உழைப்பை!

சுறுக்கங்கள்
சுட்டிக்காட்டுகிறது
பாட்டியின் வறுமை!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. ஒரு படம்;பிறந்தது அருமையான ஹைக்கூக்கள்!

  ReplyDelete
 2. ஹைக்கூக்கள் அனைத்தும் "ஹை" போட வைத்தன! அருமை!

  ReplyDelete
 3. அருமை நண்பரே மிகவும் நன்று

  ReplyDelete
 4. வருத்தப்பட வைத்தது அக்குடை.

  ReplyDelete
 5. பாட்டியின் குடைக்கு
  தளிர் தந்தார்
  தமிழ்க் கொடை
  கவிதை!
  நன்று.
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 6. ஒரே படம்

  அதில் பிறந்தவை பல ஹைக்கூக்கள்.
  அருமையான சிந்தனைதான். ஓயாமல் பெய்யும் அடை மழையில் பாட்டியின் குடை உடைந்தாலும் ஒய்யார நடை போடும் பாட்டியின் நடை உடையவில்லை என்பதை தளிர் நடை போட்டு நீங்கள் விளாசி தள்ளி விட்டீர்கள். அசத்தல்.

  ReplyDelete
 7. குடை சுயத்தை இழந்தாலும்
  தன் தள்ளாத வயதிலும்
  தாங்கி நிற்கும்
  பாட்டியின் கைப்பிடியில்
  கம்பீரமாய் தெரிகிறது
  சுயமரியாதை

  ReplyDelete
 8. குடை தந்த கவிதைகள் நன்று. பாராட்டுகள்.

  ReplyDelete
 9. ரொம்ப அருமையாக எழுதுகிறீர்கள்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!