தளிர் சென்ரியூ கவிதைகள்! 5

தளிர் சென்ரியூ கவிதைகள்! 5

 பணமுதலைகள்
 முழுங்கின
 மலையழகு!

 ஆறுவழிகள் பெருகின
 அருகிப்போயின
 கிராமங்கள்!

 கழனிகள் எல்லாம்
 கலர் தோரணங்கள்!
 உதித்தது புதிய நகரம்!

 காகிதத்தை பயன்படுத்தாதே!
 அறிவுறுத்தின நகரெமெங்கும்
 ஆயிரம் சுவரொட்டிகள்!

 கால மாற்றம்!
 ஆயிரங்களில் இருந்து லட்சங்களுக்கு
விலை போகிறது உயிர்!

 தோண்டத் தோண்டப் பிணங்கள்!
 நாற்றமெடுத்தது
அதிகாரிகளின் ஊழல்!

 பசி ஆற்றிக்கொண்டிருக்கிறான்
 பசியோடு
 ஓட்டல் பணியாள்!

 மது ஆற்றில்
 நீந்துகிறது
 மயங்கிப்போன தமிழகம்!

 குறைக்க குறைக்க
 ஏறுகிறது விலை!
  நடிகையின் உடை!

  உயரத்தில் ஏறுகிறது விலைவாசி
  தாழ்ந்து போகிறது சாமான்யனின்
  தராசு!

  தட்டுக்களில் சில்லறை
  சிலர் உள்ளே சிலர் வெளியே!
  கோயில்!

 குறைகளைக் கரைய
  நிறைந்தன உண்டியல்கள்!
   கோயில்!

   கன்று போட்டது!
   ஆறியது குழந்தையின் பசி!
  பசு!

உயர்வை நோக்கிய பயணம்
உயிரை பறித்து முடிந்தது!
கட்டுமானத் தொழிலாளார்கள்!

 பூக்களை விற்றுக் கொண்டிருத்தாள்
  வாடிக்கொண்டு இருந்தது முகம்!
  வெயிலில் விதவை!

  சுத்தமான இடம்
  அசுத்தமாகின்றது!
  கோயில்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!


Comments

  1. குறைக்க குறைக்க
    ஏறுகிறது விலை!
    நடிகையின் உடை!

    சவுக்கடி வார்த்தைக(ல்)ள் இதுதான் இன்றைய நிலை நண்பா.....

    ReplyDelete
  2. கவிதை மிக அட்டகாசம் மிக அருமையாக உண்மையை எடுத்துரைத்தது பாராட்டுக்கள் பட்ங்களை எடுத்துவிட்டு அல்லது பதிவிற்கு சம்பந்தமான படத்தை பதிவின் மேலோ அல்லது இறுதியிலோ கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து

    ReplyDelete
  3. பசி ஆற்றிக்கொண்டிருக்கிறான்
    பசியோடு
    ஓட்டல் பணியாள்!///

    அனுபவித்த உண்மை இது

    ReplyDelete
  4. உயர்வை நோக்கிய பயணம்
    உயிரை பறித்து முடிந்தது!
    கட்டுமானத் தொழிலாளார்கள்!//

    இன்றைய சம்பவங்களுக்கு பொருத்தமான கவிதை

    ReplyDelete
  5. கன்று போட்டது!
    ஆறியது குழந்தையின் பசி!
    பசு!
    //

    சூப்பர்

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா.

    உண்மையான வரிகள் காலத்தின் அதிவேக வளர்ச்சிஎன்றுதான் சொல்லவேண்டும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. பல மனதைத் தொட்டன.

    அனைத்தும் அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  8. கன்று போட்டது!
    ஆறியது குழந்தையின் பசி!
    பசு!


    யதார்த்தம்.

    ReplyDelete
  9. சிறப்பான வரிகள்..

    ReplyDelete
  10. இன்றைய நடப்பு..
    இங்கு கவிதையையாக...
    சிறப்பு.

    ReplyDelete
  11. சிறப்பான வரிகள் நண்பரே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. "//பசி ஆற்றிக்கொண்டிருக்கிறான்
    பசியோடு
    ஓட்டல் பணியாள்//"

    உண்மை.

    அனைத்து வரிகளும் நாட்டு நடப்புகளை புட்டு புட்டு வைத்து விட்டன. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. நவீனத்தின் கோர முகத்தைக் காட்டும் கவிதை அருமை !

    ReplyDelete
  14. அனைத்துமே அருமை! பாராட்டுக்கள் சுரேஷ்! கற்றுக் கொள்கின்றோம்!

    கழனிகள் எல்லாம்
    கலர் தோரணங்கள்!
    உதித்தது புதிய நகரம்!

    தோண்டத் தோண்டப் பிணங்கள்!
    நாற்றமெடுத்தது
    அதிகாரிகளின் ஊழல்!

    பசி ஆற்றிக்கொண்டிருக்கிறான்
    பசியோடு
    ஓட்டல் பணியாள்!// சான்றுகள்!

    ReplyDelete
  15. அனைத்துமே அருமை. எதைச் சொல்ல எதை விட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. அருமை.. தெளிவான பதிவு.. பகிர்வினிற்கு நன்றி..

    Happy Friendship Day 2014 Images

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!