வாரமலர் இதழில் என்னுடைய ஜோக்!
வாரமலர் இதழில் என்னுடைய
ஜோக்!
வணக்கம் அன்பர்களே!
வலைப்பூவிலும் முகநூலிலும் என்னதான் எழுதினாலும் அச்சு ஊடகத்தில் வார மாத
இதழ்களில் நம் படைப்புக்கள் அச்சேறினால் அளவிட முடியாத மகிழ்ச்சிதான். அந்த
மகிழ்ச்சி எனக்கு சில முறை அரங்கேறி இருக்கிறது.
முதன் முதலில் கோகுலம் சிறுவர் இதழில் என்
படைப்பு பிரசுரம் ஆனது. பின்னர் இருபது வருடங்கள் கழித்து பாக்யா இதழில் எனது
கவிதைகளும், நகைச்சுவைகளும், ஒரு கதையும் தொடர்ந்து சில இதழ்களில் வெளிவந்தது.
அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சியும் ஊக்கமும் மீண்டும் அச்சு ஊடகங்களுக்கு எனது
படைப்புக்களை அனுப்பத் தூண்டியது.
கடந்த மே மாதம் சில ஜோக்குகளை வாரமலர் இதழுக்கு
அனுப்பி இருந்தேன். அதில் ஒன்று இந்த வார வாரமலர் இதழில் பிரசுரம் ஆகி எனக்கு இன்ப
அதிர்ச்சியினை அளித்தது.
என்னுடைய 13வது வயதில் எனக்கு எழுத்து
பழக்கமானது 18வது வயதில் முதல் சிறுவர் கதை பிரசுரம் ஆனது. கையெழுத்துப்
பத்திரிக்கை எல்லாம் நடத்தினேன். எல்லாம் 2000 வருடம் வரை. ஆனாலும் அதன் பின்னர்
என் எழுத்தில் தோய்வுநிலைதான். சில வருடங்கள் எழுதுவதை நிறுத்தி இருந்தேன்.
பின்னர் டியுசன் மாணவர்களுக்காக சில கவிதைகள் எழுதி கொடுப்பேன். அவர்களுக்கு
பொங்கல்வாழ்த்து என்ற பெயரில் அறிவுரை கவிதைகள் எழுதினேன். அப்புறம் 2011ல்
இணையப்பக்கம் வந்தபின் தான் எழுத்தை மீண்டும் சுவாசித்தேன்!
என் படைப்புக்களை இணையம் வாயிலாக சிலராவது
படிக்க முடிகிறதே என்ற மகிழ்ச்சி! நிறையபேர் படிக்க வேண்டும் என்று சில வேண்டாத
முயற்சி என்று இணையப்பயணம் தொடர்ந்தது. திரு .கரந்தைஜெயக்குமார் அவர்கள் எழுதிய
ஷிட்னி ஷெல்டன் வரலாறு என்னை கொஞ்சம் ஊக்கப்படுத்தியது. சாதிப்பதற்கு வயது
தடையல்ல! தொடர்ந்து முயற்சி என்று ஊக்கப்படுத்தியது. என் வாழ்நாளில் ஒரு
புத்தகமாகவது வெளியிட்டுவிட வேண்டும் அது நல்ல புத்தகமாகவும் அமையவேண்டும் என்று
நினைத்துக் கொண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட சிந்தனைகளை உரம் போட்டு வளர்க்க
பத்திரிக்கைகளில் அவ்வப்போது வரும் என் துணுக்குகளோ,கவிதை, கதைகள்
உதவிக்கொண்டிருக்கின்றன. இந்த இணையப்பக்கமும் என் இலக்கிய, கதை,கவிதை ஆசைகளை
தீர்த்துக் கொள்ள வடிகாலாக அமைந்துள்ளது. இதற்கெல்லாம் இந்த பக்கத்தின் வாசகர்களான
நீங்கள் மிகப்பெரிய காரணிகள். உங்களின் பெருமித்த ஆதரவினால் என் எழுத்துக்கள்
செம்மைப் பெற்று இன்று அச்சு ஊடகத்திலும் வெளிவந்துள்ளது. இதற்காக உங்களுக்கு
நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்! தொடர்ந்து இந்த வலைப்பூவினை வாசித்து என்
எழுத்தார்வத்தை ஊக்குவித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் என் படைப்புக்களை
காணிக்கையாக்கி நன்றி கூறுகின்றேன்!
நன்றி! நன்றி! நன்றி!
வாழ்த்துக்கள்
ReplyDeleteமனப்பூர்வமான வாழ்த்துக்கள் சுரேஸ்.
ReplyDeleteவாழ்த்துகள் சுரேஷ்
ReplyDeleteமேலும் பல உயரங்கள் தொட வாழ்த்துக்கிறேன்!
ReplyDeleteஎங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்! சுரேஷ்! இன்னும் உங்கள் எழுத்து பல உயரங்களைத் தொடவும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமுன்பொருமுறை என் ஜோக்கும் வந்த போது உங்களைப் போலவே நானும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் ,எழுதி அனுப்பி மூன்று மாதம் கழித்து பிரசுரமாவதுதான் எனக்கு மிகுந்த சலிப்பைத் தருகிறது !வாழ்த்துக்கள் ,s.சுரேஷ் பாபு !
ReplyDeleteஉங்களின் எழுத்து மேன்மேலும் பல பத்திரிக்கைகளில் பிரசுரமாக என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே !
ReplyDeleteஇது ஆரம்பம் மட்டுமே ! நிங்கள் இன்னும் பல உயரங்கள் தொடுவீர்கள்.
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
அது ஏன் சுரேஷ் பாபு ?
ReplyDeleteஎன் முழுப்பெயர் சுரேஷ்பாபுதான்! இணையத்துக்காக சுரேஷ் என்று சுருக்கிக்கொண்டேன் ஸ்ரீனிவாசன் சீனு ஆனதைப் போல!
Deleteநன்று,வாழ்த்துக்கள் சுரேஷ் ஐயா!
ReplyDeleteவாழ்த்துக்கள்! சுரேஷ் சார் ஜோக் சூப்பர்!!
ReplyDeleteவாழ்த்துக்கள் , வாழ்த்துக்கள் சுரேஷ்
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா
ReplyDeleteசிறந்த பகிர்வு
தொடருங்கள்
vaazththukal வாழ்த்துகள்
ReplyDelete