தளிர் சென்ரியு கவிதைகள் 7
தளிர் சென்ரியு கவிதைகள் 7
1. மண்ணை அள்ளினார்கள்
வாயில் விழுந்தது
மண்!
2. வற்றிய குளங்களில்
புதைந்தது
விவசாயம்!
3. விஷம் என்றெழுதி
விற்பனை!
விலைபோகும் இளைஞர்கள்!
4. ஊரெல்லாம் ஒரே மாசு!
உறக்கத்தை இழந்தாச்சு!
நகரமென்று பேராச்சு!
5. வெள்ளுடை வியாபாரிகள்
விற்பனைக்கு வந்தது
மருத்துவம்!
6. எங்கும் இரசாயணம்!
மங்கிப் போனது
மனித ஆயுள்!
7.
வேகப்பந்தயம்!
விலை
போனது!
உயிர்!
8.
உச்சிக்குப்
போனது விலை!
உயர வாய்ப்பு இல்லாத
ஏழை!
9.
மாசு உள்ளே
நுழைந்ததும்
மறைந்து
போனது
மழை!
10.
ஏற்றிவிட்டார்கள்
இறங்கிப்போனது
வாழ்க்கை!
பெட்ரோல்!
11.
ஆளில்லா
கடவுப்பாதை!
அழித்துவிட்டது
குழந்தைகளின் எதிர்காலம்!
12.
நீரோடு வாழ்க்கை!
நீருக்காக
போராட்டம்!
தனுஷ்கோடி!
13.
கச்சத்தை தேடி
எச்சத்தை
தொலைக்கிறார்கள்
மீனவர்கள்!
14.
கரையிலா
பயணத்தில்
கரைந்துகொண்டிருக்கிறது
கடலோடிகள் வாழ்க்கை!
15.
தூதுவந்த
பைங்கிளி
துரத்தி
வந்த சர்ச்சை!
சானியா
மிர்சா!
16. மரணித்துப்போன மனிதம்
மவுனித்துப் போன புனிதம்!
காஸா
17. இரக்கத்தை தொலைத்தவர்கள்!
உறக்கத்தை கலைக்கிறார்கள்!
காஸா
18. நஞ்சுக்குத் தெரிவதில்லை!
பிஞ்சுகளின் உயிர்!
காஸா
19. உறங்கிக்கிடக்கும் உலகநாடுகள்!
உயிர்வலியில்
காஸா!
20. எல்லைக்குப் போடுகிறார்கள் வேலி!
எத்தனையோ கடவுப்பாதைக்கு
இன்னும் இல்லை வேலி!
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
ஒவ்வொன்றும் ஒரு தத்துவமாக இருக்கிறது நண்பரே வாழ்த்துக்கள்.
ReplyDeleteமனதைத் தொடும் கவி வரிகள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரரே!
மூன்றே வரிகள்தான் என்றாலும் ,பலவும் இதயத்தில் வலியைத் தந்தது !
ReplyDeleteஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது
ReplyDelete