கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 9

ஜோக்ஸ்!


1.      அந்த வக்கீல் ஏன் டார்ச் லைட்ட அடிச்சு சட்ட புத்தகத்தை படிக்கிறாரு?
சட்டம் ஓர் இருட்டறைன்னு யாரோ சொன்னாங்களாம்!

2.      மன்னர் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று சொல்கிறாரே எதை?
எதிரி மன்னன் அனுப்பிய தூதுப்புறா செய்தியை போட்டுவிட்டு பறந்துவிட்டதைத்தான் அப்படி சொல்கிறார்!

3.      தமாஷ் நடிகரை அழவைக்கணும்னா என்ன செய்யனும்?
விஜய் டீவியிலே கூப்பிட்டு ஒரு அவார்டை கொடுக்கணும்!

4.      மாப்பிள்ளை பெரிய பில்டருன்னு சொன்னதை நம்பி ஏமாந்துட்டோம்!
எப்படி?
அவரு  “பாடிபில்டர்”ங்க!

5.      தலைவர் எதுக்கு கட்சி எம்.எல்.ஏக்களை சங்கிலி போட்டு கட்டி வச்சி இருக்காரு!
எதிர் கட்சிக் காரங்க இழுத்துட்டு போயிருவாங்கன்ற பயம்தான்!

6.      நம்ம தலைவர் பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை!
ஏன் என்ன பண்ணிணார்?
ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் விலையை பிக்ஸ் பண்ணி சட்டையிலே டேக் கட்டி விட்டிருக்கார்!

7.      டிரிட்மெண்டுக்கு வந்த பேஷண்ட் கிட்ட  சுகர் இருக்குன்னு சொன்னது தப்பா போச்சு!
ஏன்?
கொஞ்சம் எடுத்து கொடுத்தீங்கன்னா காபியிலே போட்டு சாப்பிட சவுகர்யமா இருக்கும்னு சொல்றார்!

8.      அந்த டாக்டர்கிட்ட பாலிசி இருந்தாத்தான் டிரிட்மெண்டுக்கு போகமுடியும்!
அப்படியா? என்ன பாலிசி எதிர்பார்க்கிறார்!
மெடிக்கல் இன்ஷுரன்ஸ் பாலிசிதான்!

9.      அந்த பேட்ஸ்மேன் தொடர்ந்து சொதப்புறாரே!
டேட்டிங் போக ஆரம்பிச்சுதுல பேட்டிங் மறந்து போயிருச்சாம்!

10.  அந்த பேட்ஸ்மேன் ஏன் கையில பேட் இல்லாம தடியோட உள்ளே வர்றாரு!
அவரு நைட் வாட்ச்மேனாம்!

11.  எதிரி படையெடுத்து வருகிறான் என்றதும் மன்னருக்கு ஆவேசம் வந்து உடல் துடிக்கிறதை பாருங்கள்!
ம்.. நீ வேற இது உடல் துடிப்பு அல்ல! உடல் நடுக்கம்!

12.  மன்னர் ஏன் புலவர் மீது கோபமாக உள்ளார்?
மன்னரை புகழ்ந்து பரணி பாடச்சொன்னால் புரளி பாடிவிட்டாராம்!

13.  தலைவருக்கு எப்பவுமே கமிஷன் மேலேயே கண்
ஏன் என்னாச்சு?
திட்டக் கமிஷன்! திட்டக் கமிஷன்!னு சொல்றாங்களே யாரை திட்டினா கமிஷன் தருவாங்கன்னு கேக்கறார்!

14.  பொண்ணு சொக்கத் தங்கம்னு தரகர் சொன்னதை நம்பினது தப்பா போச்சு?
ஏன்?
இப்பத்தான் தெரியுது எவனோ உரசிப் பார்த்திருக்கான்னு!


15.  அவரை எல்லோரும் தூர் தர்ஷன்னு சொல்றாங்களே! அங்க வேலை செய்யறாரா?
நீ வேற அவர் கிட்ட யாரும் நெருங்க முடியாது அவ்ளோ கப்பு! அதான்..

16.  நாள் தள்ளிக்கிட்டே போவுது சீக்கிரமா பொண்ணு கல்யாணத்தை முடிங்கன்னா கேட்டீங்களா?
இப்ப என்ன ஆகிப்போச்சு!
வயித்த தள்ளிண்டு வந்து நிக்கறா!

17. புலவரே பாட்டில் பொருள் குறைகின்றதே?
  நீங்கள் கொடுக்கும் பொன்னிலும் மாற்று குறைகின்றதே மன்னா?

தங்கள் வருகைக்கு நன்றி !பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

 1. தமாஷ் நடிகரை அழவைக்கணும்னா என்ன செய்யனும்?
  விஜய் டீவியிலே கூப்பிட்டு ஒரு அவார்டை கொடுக்கணும்!........யதார்த்தமான ஜோக்

  ReplyDelete
 2. நல்ல நகைசுவைதான் நண்பரே,,,

  ReplyDelete
 3. ஹாஹா ..எல்லாமே நல்லாருக்குங்க ! ரசித்தோம் சிரித்தோம்!

  ReplyDelete
 4. மொழியை கற்பிக்கும் பதிவுகள், சமூக பார்வை, நகைச்சுவை என அனித்திலும் அசத்துகிறீர்கள். உங்களை வலைமனை அஸ்டாவதானி என அழைக்கலாம்.

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  எனது புதிய பதிவு : ரெளத்திரம் பழகு !

  http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post_22.html

  ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

  ReplyDelete

 5. வணக்கம்!

  நல்ல நகைச்சுவை! நானும் படித்திங்குச்
  சொல்லச் சுரக்கும் சுவை!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு


  ReplyDelete
 6. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
 7. ரசித்துச் சிரித்தேன் சுரேஷ்.

  ReplyDelete
 8. ரசித்தேன்
  சிரித்தேன்
  நன்றி நண்பரே

  ReplyDelete
 9. ///தமாஷ் நடிகரை அழவைக்கணும்னா என்ன செய்யனும்?
  விஜய் டீவியிலே கூப்பிட்டு ஒரு அவார்டை கொடுக்கணும்!///

  மிகவும் ரசித்தேன் பாராட்டுக்கள்

  ReplyDelete
 10. சிறந்த நகைச்சுவைப் பகிர்வு

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2