கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 11
ஜோக்ஸ்!
1. என் மனைவி இதுவரைக்கும் வாயைத்திறந்து அது வேணும் இது
வேணும்னு கேட்டதில்லை!
அவ்வளவு
நல்ல குணமா?
நீ
வேற அவளே வாங்கிட்டு என்கிட்ட பில்லை மட்டும் காட்டுவா!
2. போர்க்களத்தில் இறங்கிவிட்டால் மன்னரை கையில் பிடிக்க
முடியாது?
அவ்வளவு
வீரமாக போரிடுவாரா?
ஊகும்!
அவ்வளவு வேகமாக ஓடுவார்!
3. மாப்பிள்ளை இடிஞ்சி போய் வந்திருக்காரா? என்ன விஷயம்?
அடுக்குமாடி
குடியிருப்பிலே ப்ளாட் வாங்கியிருந்தாராம்!
4. அந்த டாக்டர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?
பல்
கூச்சம்னு சொல்லிப்போனா நாலு பேரோட சேர்ந்து பழகுனா கூச்சமெல்லாம் காணாம
போயிரும்னு சொல்றாரே!
5. தலைவரோட நிதி நிலைமை சரி இல்லை போல!
எப்படி
சொல்றே?
சில்லறைக்
கட்சிகளை கூட்டணியிலே சேர்த்துக்கிட்டா ஏதாவது சில்லரை தேருமான்னு கேக்கறாரே!
6. மன்னருடைய உடல் வயிரம் பாய்ந்த உடல்!
அவ்வளவு
திடமா?
ஊகும்
அடிவாங்கி வாங்கி மரத்துப்போய்விட்டது!
7. மனைவி ஊருக்குப் போனா சந்தோஷப்படாம ஏன் வருத்தமா
இருக்கே?
நிறைய
ஹோம் ஒர்க் கொடுத்துட்டு போயிருக்காளே!
8. ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகலே!
அப்புறம்?
டைரக்டர்
கணக்குத் தீர்த்துட்டார்!
9. இந்த படத்துல வரலாறு காணாத திருப்பம் இருக்குன்னு
சொல்றாங்களே என்ன அது?
படம் வந்த அன்னைக்கே பொட்டிக்கு
திரும்பிருச்சாம்!
10. ஐம்பது அடியில்
சுவையான குடிநீர்னு சொன்னாங்க!
வந்துதா?
இல்லை…
கேட்டா ஐம்பது அடி தூரத்துல இருக்கிற வாட்டர் கம்பெனியில் வாங்கிக்கனும்னு
சொல்றாங்க!
11. தலைவர் பொதுக்கூட்டத்துல பேசும்போது மானத்தை
வாங்கிட்டார்!
என்ன பண்ணார்?
சானியா மிர்சாவுக்கு எதுக்கு அம்பாசிடர்
கொடுக்கிறீங்க? அந்த கார்தான் இல்லையே வேணும்னா ஒரு இன்னோவா இல்ல சாண்ட்ரோவை
கொடுங்கன்னு பேசறார்!
12. ஓடி ஓடி உழைக்கணும்னு சொல்லிகிட்டு இருக்காரே யாருங்க
அவரு?
சீட்டுக்
கம்பெனி முதலாளிதான்!
13. உண்ணாவிரதப் பந்தல்ல என்ன கலாட்டா?
பிரியாணி
போடறேன்னு சொல்லி பிரியாணி படத்தை போட்டு காண்பிச்சுட்டாங்களாம்!
14. போர்க்களத்தில் மன்னர் எதிரியின் காதைக் கடித்து
தப்பினாராமே?
நீ
வேறு.. உயிர்ப்பிச்சை தா! என்று எதிரியில் காதில் சொல்லிவிட்டு ஓடிவந்தாராம்!
15. பொண்ணுக்கு சமைக்கத்தெரியுமான்னு கேட்டது தப்பா போச்சா
ஏன்?
நீங்கதான்
நல்லா சமைப்பீங்களாமே! அதுக்குத்தான் உங்களை கட்டி வைக்கிறோம்னு சொல்றாங்க!
16. மன்னா! எதிரி
நாட்டு மன்னன் குஸ்தி போட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளான்!
அமைச்சரே!
நாம் கிஸ்தியெல்லாம் ஒழுங்காக கட்டிவிடுகிறோம் அல்லவா…?
17. அந்த பிச்சைக்காரனுக்கு அவ்ளோ கொழுப்பு இருக்கக்
கூடாது?
ஏன்
என்னாச்சு?
சில்லரை
இல்லேப்பான்னு சொன்னா வேணும்னா என் பேங்க் அக்கவுண்ட் நம்பர் தரேன்! அதுல
போட்டுருங்கன்னு சொல்றான்!
18. ஆபிஸ் வேலையை வீட்டுல செஞ்சா என் மனைவிக்கு பிடிக்காது!
இதுல
என்ன தப்பு இருக்கு?
நீ
வேற ஆபிஸ் வேலையை செஞ்சுக்கிட்டிருந்தா வீட்டு வேலையை யார் செய்யறதுன்னு
கோச்சுக்குவா!
19. அவார்டுக்கும் பட்டத்துக்கும் என்ன வித்தியாசம்?
பத்திரிக்கையிலே
காசு கொடுத்து வாங்கிறது பட்டம்
சேனலுக்கு
படத்தை வித்து வாங்கிறது அவார்டு!
20. வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்த வழக்குல தலைவர்
சொன்ன பதிலை கேட்டு ஜட்ஜே ஒரு நிமிஷம் அசந்துட்டாரு!
அப்படி
என்ன சொன்னாரு தலைவர்?
இவ்ளோ
சொத்து சேர்த்துருக்கீங்களே யாருக்காகான்னு கேட்டதும் மக்களுக்காகத்தான்னு
சொல்லிட்டாரு!
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
அனைத்தும் அருமை. பகிர்விற்கு நன்றி சுரேஷ்.
ReplyDeleteமின்னல் வேக கமெண்ட்டிற்கு மிக்க நன்றி நண்பரே!
Deleteஅடுக்குமாடி குடியிருப்பு - டைமிங்கான ஜோக்
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தேன்.
ReplyDeleteஅதில் எனக்கு மிகவும் பிடித்தது - 1 மற்றும் 18.
நன்றாக மகிழ்ந்தேன். ரிலாக்ஸ்ஸாக இருக்கு. நன்றி.
ReplyDeleteஅனைத்துமே அருமை....
ReplyDelete15 - :))))
சிறந்த நகைச்சுவைத் தொகுப்பு
ReplyDeleteதொடருங்கள்
அருமையாக இருந்தது நண்பரே,,, வாழ்த்துக்கள் சுரேஷ்.
ReplyDeleteஎனக்கு பிடித்தது சானியா மிர்சாதான் ,ஜோக்கைச் சொன்னேன் !
ReplyDeleteஅனைத்தும் அருமை ரசித்தேன் மிகவே!
ReplyDeleteசிரித்தேன்
ReplyDeleteரசித்தேன்
நன்றி நண்பரே
ஹாஹாஹாஹ சிரிச்சுட்டோம் பாஸ்! அருமை அனைத்தும்....
ReplyDelete