கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 8

ஜோக்ஸ்! 


1.      மாப்பிள்ளை கரண்டு மாதிரி…
  “கப்”னு பிடிச்சுக்குவாரா?
 ஊகும்!அடிக்கடி காணாம போயிடறார்!

2.      அவரு கட்சிக்கு நாயா உழைச்சாரு!
அப்புறம்!
 கல்லெடுத்து அடிக்காத குறையா துரத்திவிட்டுட்டாங்க!

3.      தலைவரை  கட்சிப்பதவியைவிட்டு நீக்கனதும் கொதிச்சுப் போயிட்டாரு!
    அப்புறம்?
    மந்திரி பதவி தரேன்னு சொன்னதும் ஆறிப்போயிட்டாரு!


4.      மன்னர் ஏன் கட்டியம் கூறுபவனை முறைக்கிறார்?
இங்கிலிஷீல் வரவேற்பு கூறுவதாகச் சொல்லி வெல்கம் பேக் மஹாராஜா என்பதற்கு பதில் வெல்கம் ‘பேக்கு’ மஹாராஜா என்று சொல்லிவிட்டானாம்!

5.      ஊசி போடற இடத்துல தடுப்பு வெச்சிருக்காங்களே ஏன்?
அது தடுப்பு ஊசி போடற இடமாம்!

6.      அந்த வேலைக்காரிக்கு ஆனாலும் திமிர் அதிகம்!
    எப்படி சொல்றே?
வேலை செய்யற வீட்டை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் ல போட்டு எந்த வீடு டாப்னு வோட் பண்ணச்சொல்லி கேட்டுருக்கா!

7.      எதிரியின் அறைகூவலை மன்னர் அலட்சியப்படுத்தி இருக்க கூடாது?
ஏன் என்ன ஆயிற்று?
 இருக்க ஓர் அறை கூட இல்லாமல் போய்விட்டது!

8.      அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?
    சளி பிடிச்சிருக்கு டாக்டர்னு சொன்னா எங்க பிடிச்சிருக்கோ அங்க கொஞ்சம் லூஸ் பண்ணிக்கங்கனு சொல்றாரே!

9.      தலைவருக்கு எப்பவுமோ பணத்து மேலதான் நினைப்பு போல!
எப்படி சொல்றே?
தலைவரே நீங்க கொடுத்து வெச்சவர் தலைவரே!ன்னு சொன்னதும் எவ்வளவு கொடுத்து வெச்சிருக்கேன்! யாருக்கிட்டே! டீடெய்லா சொல்லுன்னு கேக்கறாரே!


10.  கல்யாண பந்தியிலே என்ன கலாட்டா?
யாரோ ஒருத்தர் மாப்பிள்ளை வீட்டார்கிட்ட சமரசம் பண்ணீங்கன்னு சொன்னீங்களே! அதை கொஞ்சம் ஊத்துங்கன்னு கேட்டாராம்!

11.  பொண்ணுக்கு கல்யாண ஆசை வந்துருச்சு எப்படி சொல்றீங்க?
    அப்பா சமையலை சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்துப் போச்சு! வேற சமையலை சாப்பிடனும்னு சொல்றாளே!

12.  போர்க்களத்தில் திடீரென்று எதிரி மன்னன் வாளோடு நம் முன்னர் குதித்துவிட்டான்!
    அப்புறம்!
 அப்புறம் என்ன? நம் மன்னர் குப்புற படுத்துவிட்டார்!

13.  அவர் ஏன் அந்த ஸ்டேஷனுக்கு ரப்பர் பேண்டோட போறார்?
    அங்க லஞ்சம் தலைவிரிச்சு ஆடுதுன்னு ரிப்போர்ட் வந்துருக்காம்!

14.  மாப்பிள்ளை எல்லாத்தையும் ஊதித் தள்ளிடுவார்ன்னு சொல்றீங்களே? என்ன பண்றார்?
நாதஸ்வர வித்வானா இருக்கார்!


15.   உன்னை எனக்கு முன்னே பின்னே தெரியாது! என்கிட்ட பணம் கேட்கறியே?
முன்னே பின்னே தெரிஞ்சவங்க யாரும் எனக்கு பணம் கொடுக்க மாட்டாங்களே!

16.   உனக்கு இன்ஷுயுரன்ஸ் பாலிசி தரமாட்டேன்னு சொல்லிட்டாங்களா? ஏன்?
      அடுக்குமாடி குடியிருப்புல குடியிருக்கேன்னு சொல்லிட்டேன்!

17.  தலைவர் மப்புல இருக்கார்னு எப்படி சொல்றே?
     பி.எம் போஸ்ட் இல்லாவிட்டாலும் பராவாயில்லை அட்லீஸ்ட் ஏ.எம் போஸ்ட்டாவது கிடைக்குமான்னு கேக்கறாரே!

18.  அந்த பேங்க் ல என்ன கலாட்டா?
    யாரோ ஒருத்தர் வந்து நகைக்கடன் தரப்படும்னு போட்டிருக்கீங்களே ஒரு அஞ்சு சவரன் நகையை கடனா தர்றீங்களான்னு கேட்டாராம்!

19.  கவர்ச்சியா பேசனும்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பா போச்சு!
ஏன் என்ன ஆச்சு!
       பனியன் ஜட்டியோட கூட்டத்துக்குக் கிளம்பிட்டார்!
  
20.  பொண்ணை பத்திரமா பார்த்துக்கங்க! பத்திரமா பார்த்துக்கங்கன்னு இத்தனை தடவை சொல்றாரே உன் மாமனார் என்ன பண்றார்?
பத்திர எழுத்தாளரா இருக்கார்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
  Comments

 1. சிரிக்க..வைத்ததற்கு நன்றி. வித்தியாசமான பதிவு.மகிழ்ச்சி நன்றி சகோதரரே.

  ReplyDelete
 2. அனைத்துமே நல்ல ரசனையானது நண்பரே... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. கொஞ்சமென்ன நிறையச் சிரித்தோம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அனைத்தும் படித்து ரசித்து சிரித்து மகிழ்ந்தேன்,
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 5. ரசித்தேன்
  சிரித்தேன்
  நன்றி நண்பரே

  ReplyDelete
 6. இன்னைக்கு கொஞ்சம் வேலைப்பளு அதிகம்... உங்கள் பதிவை படித்து சிரித்ததில் அயர்வு போயே போச்சி !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete
 7. சிரிக்க..சிரிக்க..சிரிக்க..சிரிக்க..சிரிக்க..சிரிக்க..சிரிக்க..சிரிக்க..வைத்ததற்கு நன்றி

  ReplyDelete
 8. அனைத்து நகைச்சுவை துணுக்குகளும் அருமை. இரசித்தேன்!

  ReplyDelete
 9. நல்லாவே...இல்ல...இல்ல ரொம்பவே சிரிச்சோம் பாஸ்! அப்படியே கொஞ்சம் தைலம் அனுப்புங்க.....விலா எலும்பு நோவுது பாஸ்!

  ReplyDelete
 10. ஹாஹா நன்றாகவே சிரிக்க வைத்தீர்கள்.. அதிலும்

  //அந்த வேலைக்காரிக்கு ஆனாலும் திமிர் அதிகம்!
  எப்படி சொல்றே?
  வேலை செய்யற வீட்டை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் ல போட்டு எந்த வீடு டாப்னு வோட் பண்ணச்சொல்லி கேட்டுருக்கா!///


  மற்றும்

  //அந்த பேங்க் ல என்ன கலாட்டா?
  யாரோ ஒருத்தர் வந்து நகைக்கடன் தரப்படும்னு போட்டிருக்கீங்களே ஒரு அஞ்சு சவரன் நகையை கடனா தர்றீங்களான்னு கேட்டாராம்!//

  இரண்டும் ஹை லைட்

  ReplyDelete
 11. அனைத்துமே அருமை.

  பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2