"டீக்கடைக் காரர்” பொண்ணை கட்டிக்கிட்டா என்ன வசதி? ஜோக்ஸ்!
ஜோக்ஸ்! 1.பொதுக்கூட்ட பாதுகாப்புக்கு 100 போலீஸ் வேணும்னு கேட்டிருக்கீங்களே எதுக்குத் தலைவரே? போலீஸ்காரங்களாவது கூட்டமா இருக்கட்டுமேன்னுதான்! சீர்காழி வி. வெங்கட் 2.உங்க பையன் படிச்சு முடிச்சதும் என்னவாகனும்னு ஆசைப்படுறீங்க? பாஸாகணும்னு! கொளக்குடி சரவணன். 3.கடைசியாக ஏதாவது சொல்ல விரும்புகிறாயா? நிறைய பொய் சொல்லிட்டேன் போதும் எசமான்! பர்வீன் யூனுஸ் 4.என்னய்யா… டி.வி சர்வீஸுக்கு வந்தவன், வாரண்ட்டை பத்தி கேக்கிறான். எதையாவது உளறி வெச்சுடாதீங்க தலைவரெ, அவன் வாரண்டி கார்டு கேக்கிறான்! அ.ரியாஸ். 5.எனக்கு உலகமே என் மனைவிதான்! மெதுவாப் பேசுங்க தலைவரே! இரண்டாம் உலகம் வந்துட்டு இருக்கு! ...