அறிந்து கொள்வோம்!



கண்ணதாசனுக்கு பிடித்த மதம்


சிங்கப்பூரில் நடந்த விழா ஒன்றிற்கு கவிஞர் கண்ண தாசனை அழைத்திருந்தார்கள் நிகழ்ச்சி ஆரம்பித்து வெகு நேரம் ஆகியும் கவிஞர் அவைக்கு வந்த பாடில்லை. கூட்டம் பொறுமை இழ்ந்து சலசலத்தது.அந்நிலையில் கவிஞர் வந்து சேர்ந்தார். உடனே பேச ஆரம்பித்தார். “சிலருக்கு இந்துமதம் பிடிக்கும்.சிலருக்கு கிறிஸ்துவமதம் பிடிக்கும் எனக்கோ தாமதம் பிடிக்கும் என்று சொல்லி நிறுத்தினார். மக்கள் அவருடைய வார்த்தை நயத்தை ரசித்து மகிழ்ந்து ஆரவாரம் செய்தனர்.
    வந்தது எப்படி?



ஐரோப்பாவில் உள்ளது செங்கடல் இந்த பெயர் வந்தது எப்படி? செங்கடல் நீர் சிவப்பாக இருக்காது. “எடாம்” என்ற மலையின் நிழல் இந்த கடல் நீரில் தெரிகிறது.ஹீப்ரு மொழியில் “எடாம்” என்றால் சிவப்பு என்று அர்த்தம் ஆகவே இக்கடல் செங்கடல் என அழைக்கப்படுகிறது.



ஆச்சர்யம் ஆனால் உண்மை
மனிதன் சிந்திக்கும் வேகம் னிமிடத்திற்கு 500 சொற்கள். பேசும் வேகம் நிமிடத்திற்கு 100 சொற்கள்
நமக்கு நன்கு தெரியும் பாட்டி வடை சுடும் கதைக்கு மூல ஆசிரியர் ரஷ்யாவைச் சேர்ந்த ஐவன் கிரைலாவ்
மர குதிரை!
முதன் முதலில் சைக்கிள் 1818ல் மரத்தினால் செய்யப்பட்டது. அதில் பெடல் கிடையாது.கால்களால் உந்தித் தள்ளி ஓட்ட வேண்டும் அதை மரக்குதிரை என்று அழைத்தனர்.
 மனிதமுகத்திலுள்ள எலும்புகள் எத்தனை தெரியுமா? 14.

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2