தளிர் அண்ணா பொன்மொழிகள்



1.வேகமாக ஓங்கி வளரும் பனைமரம் ஒருவனுக்கு நிழலைத் தரமுடியாது.நிதானமாக செழித்துவளரும் ஆலமரமோ அரசனது படை பரிவாரங்களுக்கும் இடம் தரும். வேகமிருந்தால் போதாது. விவேகமும் தேவை.நிதானமான வளர்ச்சி நிலையான புகழைத் தரும்.

2.உடலை சுத்தமாக வைத்திருப்பவனிடம் நோய் அண்டாது. உள்ளம் சுத்தமாக இருப்பவனிடம் தீமை அண்டாது.

3.மீனுக்கு பலம் நீரினிலே குளவிக்கு பலம் அதன் கொடுக்கினிலே மனிதனுக்கு பலம் அவன் மூளையிலே மனிதனின் பலவீனம் அவன் நாக்கினிலே!

4.தோண்டதோண்ட நீர் சுரக்கும். முயல முயலவே வெற்றி கிடைக்கும்.வெட்டுப்பட்ட மரமும் துளிர்க்கும் குட்டுப்பட்ட நீயும் நிமிர்வாய் நம்பு.

5.மையில்லா எழுதுகோலால் எழுத முடியாது. தூய்மையில்லா மனிதனிடத்தில் நம்பி பழகுதல் கூடாது.

6.மேகமானது வானில் ஒளிவீசும் சூரியனைக் கூட சில நிமிடங்கள் தன் முயற்சியால் மறைத்துவிடுகிறது.அதுபோல விடாமுயற்சி இருப்பின் அடைய முடியாதது எதுவும் இல்லை.

7.தண்ணீர் ஊற்றியவனின் தாகம் தீர்க்கும் தென்னை போல உனக்கு உதவியவனுக்கு சமயத்தில் உதவுவது உன் கடமை.

8.ஒர் அறையின் மையத்தில் ஏற்றிவைக்கப்படும் ஊதுபத்தி அறையைமட்டுமின்றி அதனையும் தாண்டி தன் வாசனையை பரப்புவது போல நாம் கற்கும் கல்வி நமக்கு மட்டுமின்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனளிப்பதாய் இருக்கவேண்டும்.

9.கற்றறியா மரம் கூட மற்றவர்களுக்கு பயனைத்தறுகிறது நிழலாக உணவாக உறைவிடமாக கற்றறிந்த மூடர் நாம் அதை வெட்டலாமோ? சிந்திப்போம் சந்திகள் தோறும் சாலைகள் ஒரம் மரம் வளர்ப்போம்
10.கொழுத்த மீனுக்கு காத்திருக்கும் கொக்கைப்போல உன் இலக்கிற்கு கவனம் சிதறாமல் காத்திரு. காலம் கட்டாயம் கனியும்.

அலோ வாசகர்களே என்னுடய டியுசன் செண்டரில் மாணவர்களுக்கு போதித்த அட்வைஸ் சிலதுதான் இது. பிடித்திருந்தால் பாராட்டினால் பொன்மொழிகள் தொடரும்.

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2