பொன்மொழிகள்



ஆன்றோர் மொழிகள்

தூசியைக்கண்டதும் இமைகள் மூடுவது போல தீமையை கண்டதும் விலகி விட வேண்டும்.
        புலவர் கீரன்
தோலிவியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே! தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
                 -லெனின்
பழகிய மனைவி,பழகியநாய், தயாராக இருக்கும் பணம் ஆகியவைதான் நம்பிக்கைக்குரிய நண்பர்கள்.
              பெஞ்சமின் ஃப்ரான்க்ளின்

தான் சிறந்த அறிவாளி என்று நினைப்பவன் முட்டாள் மட்டுமல்ல துன்பம் தருபவனும்கூட.
              -டைரர்
முயற்சியும் தன்னம்பிக்கையும் ந்றைந்தவனுக்கு நேரம் இரு கைகளையும் தூக்குகிறது.
                                            -மண்ட்
உண்மை எங்கே இழுத்து செல்லினும் பின் தொடருங்கள்.கோழையாகவும் வேடதாரியாகவும் ஆகாதீர்கள்.
                         -விவேகானந்தர்.
ஒருவனைக் கண்டிக்க நேர்ந்தால் தனிமையில் கண்டியுங்கள்! ஒருவனை பாராட்ட நேர்ந்தால் பலர் அறிய பாராட்டுங்கள்.
                     -பப்ளீயஸ் சைரஸ்
நீங்கள் கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அறுபது வினாடி இன்பமான பொழுது இழ்ந்துவிடுகிறீர்கள்
                       -எமர்சன்
வெட்கம் மனிதனைவிட்டு விலகினால் அவன் விலங்காவான்.
                                  -முதுமொழி
வயிறுதான் நம்மை வேலைசெய்யத் தூண்டுகிறது.பசிதான் நம்மைமுன்னேற்றுகிறது.
                     -இங்கிலாந்துப் பொன்மொழி                                      
பணத்தை பாதுகாப்பதைவிட நாம் பேசுவதைபாதுகாத்தால் அதிக நன்மை அடையலாம்.
                  அமெரிக்கப்பொன்மொழி
உண்மைகளை விலைகொடுத்து வாங்குங்கள்;ஆனால் அதை ஒருபோதும் விற்றுவிடாதீர்கள்
              -சாலமன் மன்னன்
துவண்டுவிடாதீர்கள்! முதல்தடவை உங்களை ஒதுக்கலாம் இரண்டாம் தடவை நீங்கள் ஒளிவீசப்போவது உறுதி.எனவே தொடர்ந்து செல்லுங்கள்.
                                  -வால்டேர்.
உலகை வெல்ல கப்பல் நிறைய ஆயுதம் வேண்டாம் ஒரு கை நிறைய வலிமை இருந்தாலே போதும். 
                -ஜெர்மானியப் பொன்மொழி

Comments

  1. நல்ல தொகுப்பு
    http://mahaa-mahan.blogspot.com/

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2