பாபாவுக்கு கவிதாஞ்சலி!


பாபாவுக்கு கவிதாஞ்சலி!
 


சத்ய சாயி!
நீதான் உன்
பக்தர்களுக்கெல்லாம் ஆயி!

நீ செய்வாய் சித்து
பக்தர்களுக்கெல்லாம்
உன்மேல் பித்து!

நீ சேர்த்திருக்கலாம்
பல கோடி சொத்து
ஆனால் உன் அமுத
மொழிகளே எங்கள்
முத்து!

புட்டபர்த்தி எனும்
சிறு மெழுகுவர்த்தி
உன்னால் ஆனது
பெரும் காட்டுத்தீ!
 
பிரசாந்தியில் நீ
ஆற்றும் உரை!
இனி எப்பொழுது
சேர்வோம் கரை!

பக்தியொடு
தேவை மக்கள்
சேவை! அன்போடு
உணர்த்தினாய் இதை!

தந்திரம் என
பழித்தோரும்
உன்னிடம் பெற்றனர்
மோதிரம்!
சென்னையின்
தாகம் தணித்த
இறை மன்னவனே!

ஆயிரம் கல்விமையம் உன்
பாயிரம் பாட உன்
மருத்துவ சேவைமையங்கள்
மகத்துவம் பேச
நீ சென்றாய் உன்
உடலை விட்டு!

தகிக்கும்
வெயிலில் தவிக்கும்
தளிர்களைப்போல
தவிக்கும் பக்தர்களைவிட்டு!

உன்னுயிர் உன்னைவிட்டுச்
சென்றாலும்
உன்னருள் என்றும்
எமை காக்கும்!
உன் புகழ் என்றும் உலகினில்
நிலைத்து நிற்கும்!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2