அறிந்து கொள்வோம்!
அறிந்து கொள்வோம்!
உலகிலேயே மூன்று இடங்களில்தான் வைரம் கிடைக்கிறது.அதில் இந்தியாவும் ஒன்று. ஆயிரம் கிலோ மண்ணைத் தோண்டி அலசினால் 1மில்லிகிராம் வைரம் மட்டுமே கிடைக்கும்.

மைக்கா ஒரு தாதுப்பொருள் இது பூமியிலிருந்து தகடுகளாக வெட்டி எடுக்கப் படுகிறது.ஒன்றின்மேல் ஒன்றாக அமைந்திருக்கும் பல நிறங்களில் கிடைக்கிறது. மைக்காவினால் மின்சார கருவிகளும் தீயணைப்புக் கருவிகளும் செய்யப்படுகின்றன.
எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூவின் பெயர் கர்வி.மழைக்காலங்களில் மட்டும் பூக்கும் இப்பூ மஹாராஷ்டிரா குஜராத் ம.பி யின் காடுகளில் காணப்படுகிறது.
எலிகள் எப்போதும் எதையாவது கொறித்துக்கொண்டே இருக்கும்.ஏனெனில் அதன் பற்கள் வளர விடாமல் தடுக்க இவ்வாறு செய்கின்றன. எலிகள் தங்கள் பற்களை வளர விட்டால் இரண்டரை செ.மீ நீளம் வளர்ந்து வாய் கிழிந்து இறந்து போகும்.
பூமியில் உள்ள கடல்களில் மிகப்பெரியது பசிபிக் கடல்.இதன்பரப்பளவு 16கோடி சதுர கீ.மீ பூமியின் மொத்த பரப்பில் இது மூன்றில் ஒரு பங்காகும் பசிபிக் என்றால் ‘அமைதியான’ என்று பொருள்.

தையல் இயந்திரம் 140 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.முதலில் கண்டுபிடித்தவர் திமோனியர். இது கையால் இயக்கப்பட்டது.காலால் மிதித்து இயக்கும் மிஷினை ஐசக் மெரிட் சிங்கர் 1851ல் தயாரித்தார்.

உலகில் இரவே இல்லாத இடம் ஹேமர் பாஸ்ட் எனப்படும் பனிப்பிரதேசம் இங்கு 24மணி நேரமும் சூரியனின் கதிர்கள் விழுகின்றன.
Comments
Post a Comment