உடல் நலம்
ஆமாம் நீங்க நலமா?
மருத்துவ குறிப்புகள்
@ பற்களில் இரத்தக்கசிவா? இதற்கு சீரகம்,கடுக்காய், உப்பு மூன்றையும் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை இடித்து தூளாக்கி தினமும் இரண்டுவேளை பல் துலக்கி வந்தால் இரத்த கசிவு நிற்கும்.
@ உங்களுக்கு வயிற்றுப்புண்ணா? அப்படியெனில் காப்பி டீ குடிப்பதை நிறுத்துங்கள். நுரை வரும் பாணங்கள் உணவுக்குழாயில் சுழற்சியை நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிறது எனவே காப்பி டீ கோலா போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
@ தலைக்கு அதிக உயரமான தலையணைகள் வைத்துப்படுப்பதால் நீண்டகால சளித்தொல்லைக்கு ஆளாக நேரிடும்.மேலும் தலைச்சுற்றல் பிடரிவலி போன்றவையும் ஏற்படலாம். சமதரையில் தலைவைத்துப்படுப்பதே நல்லது.
@ தொண்டைப்புண்ணா? மஞ்சள் பொடி போட்டு கொதிக்கவைத்த நீரை வாயில் ஊற்றிக்கொண்டு தொண்டையில் படும்படி சற்று நேரம் வைத்திருந்து பிறகு கொப்பளித்து விடவும் சில வேளைகள் செய்து வர தொண்டைப்புண் பொயே பொயிந்தி!
@ நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலைசாற்றுடன் இஞ்சிச்சாறு கலந்து கொடுக்கலாம்.
@ ஜலதோஷம் உள்ளவர்கள் எலுமிச்சைச் சாறு அருந்தலாமா? தாராளமாக! சாப்பிடலாம் ஆனால் ஐஸ் இல்லாமல். எலுமிச்சைச் சாறில் விட்டமின் சி உள்ளது. இது ஜலதோஷத்தை குறைக்க வல்லது. அதே நேரத்தில் உடல் பருமனை குறைப்பதிலும் இரத்த அழுத்தம் குறையவும் எலுமிச்சைச் சாறு உதவுகிறது.
@சிறுநீரில் உள்ள கற்களை துளசிச் சாறு கரைக்கும். ஒரு தேக்கரண்டி தேனும் சேர்த்துஅரை டம்ளர் துளசிச்சாறை தினமும் ஒருமுறை ஆறுமாத காலம் அருந்திவர கற்கள் கரைந்து சிறுநீர் வழியே வெளியேறி விடும்.
@ ஒரு வயது குழந்தையிலிருந்து எல்லோருக்கும் இரும்புச்சத்து தேவை. இதை எளிதில் பெற வாழைப்பழம் சாப்பிடுங்கள்.
Comments
Post a Comment