அடி!
அடி!
பஸ் ஸ்டாண்டில் ஆங்காங்கே முளைத்த காளான்களாய் மக்கள் நின்று கொண்டிருக்க எதிரே இருந்த டீ ஸ்டாலில் சூடாக வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. பிச்சைக்காரன் ஒருவனும் தருமம் கேட்டுக்கொண்டிருக்க நான் பஸ் வராத எரிச்சலில் நின்றுகொண்டிருந்தேன்.
அப்பொழுது ‘சார்’ என்ற குரல் கேட்டு திரும்பினேன். இரண்டு மாணவர்கள். ‘சார் நாங்க குஜராத் வெள்ள நிவாரண நிதி வசூல் செய்யறோம் உங்களாலே முடிஞ்சதை ஹெல்ப் பண்ணுங்க சார்.நம்ம சகோதர மக்களுக்கு உதவியாக இருக்கும்’ என்றனர்.


அவர்கள் முகம் பொலிவை இழக்க மவுனமாக அகன்றனர். அப்பொழுது அந்த பிச்சைக்காரன் அவர்களை கூப்பிட்டான்.தம்பிகளா கொஞ்சம் நில்லுங்க! அவர்கள் காதில் வாங்காது போகவே மீண்டும் அழைத்தான்.
‘தம்பிகளா உங்களைத்தான் நில்லுங்க!’ அவர்கள் தயங்கி நிற்க அவன் அவர்களிடம் சென்றான்.ஒரு சுருக்கு பைநிறைய இருந்த சில்லறைகளை அவர்களிடம் நீட்டினான் இதுல 100ரூபா இருக்கு தம்பி! பிச்சை எடுத்து சேர்த்த காசுதான் புயல் நிவாரணத்துக்கு எடுத்துக்கோங்க! அங்க பட்டினியால தவிக்கிற யாரோ ஒருத்தருக்கு உதவும்ல நா ஒருநாள் பட்டினியா இருந்தா கொறஞ்சுட மாட்டேன்.
‘படிக்கிற வயசுல நீங்க இப்படி தெருத் தெருவா அலைஞ்சி வசூல் பண்றப்ப தெருதெருவா அலையற நான் பணம் கொடுக்கிறதுல ஒண்ணும் தப்பே இல்ல தயங்காம வாங்கிகோங்க!’
‘பிச்சை எடுக்கிறது எனக்கு பழகிப்போச்சு! வசவும் பழகிப்போச்சு! படிக்கிற உங்களுக்கு இதெல்லாம் புதுசு! நீங்களே வசவை வாங்கிகிட்டு சேவை செய்யறீங்க அந்த சேவையில என் பங்கும் இருக்கட்டுமேய்யா’ என்று சொன்னபோது என்னை யாரோ சாட்டையால் அடித்த மாதிரி இருந்தது.
Comments
Post a Comment