ஹை! ஹைக்கூ!
ஹை ஹைக்கு!
வான வீதியில்
வர்ணஜாலம்!
கந்தகமில்லா
பட்டாசு!
இடி!
பேனா
மனதின் மக்களை
ஏட்டுச் சுவடியில்
பிரசவிக்கும் தாய்
தினம் தினம்
இளைக்கிறாயே
காரணம்தான் என்ன?
நாட்காட்டி
அட
வான வீதியில்
வட்ட விளக்கு
பவுர்ணமி
“சில்” லென்று
தழுவும் முகம்
காட்டா மோகினி
ரொம்ப நேரமாய்
சிணுங்கியும்
எடுப்பாரில்லை
மேஜையில் தொலைபேசி
தலையை சீவினாலும்
தயங்காமல்தருகிறது
தண்ணீர்!
இளநீர்!
காணவில்லையே
காணவில்லையே
என்று தவித்தவர்கள்
கண்டதும் ஒடுவதுஏன்?
மழை!
இயற்கை
அளித்த நிழல் கு(கொ)டை
மரம்
அஹிம்சையை போதித்த
காந்திக்கு ஹிம்சை
தபால் தலையில் காந்தி
Comments
Post a Comment