கவிதைத் தேன்!
வாழைமரம் கற்றதா?
கனி கொடுக்க மறந்ததா?
சோலைவனம் கற்றதா?
நிழல் கொடுக்க மறந்ததா?
பசுவும் கன்றும் கற்றதா?
பால் கொடுக்க மறந்ததா?
நந்தவனம் கற்றதா?
நறுமலர் தர மறந்ததா?
விளைநிலம் தான் கற்றதா?
விளைச்சல் தர மறந்ததா?
தென்னை மரம் கற்றதா?
தேன்சுவைநீர் தர மறந்ததா?
கழுதைக் கூட்டம் கற்றதா?
பொதிசுமக்க மறுத்ததா?
நீர் சுரக்க மறந்ததா?
பெற்ற மக்கள் கற்றதேன்?
பெற்றோரை வீதியில் விட்டதேன்?
மனிதகூட்டம் கற்றதேன்?
மனிதம் மறந்து போனதேன்?
Comments
Post a Comment