மறைவாக ஒரு காரியம்!


மறைவாக ஒரு காரியம்

நான் “அந்த” காரியம் செய்யப்போகிறேன் என்றதும் எனது இதயம் 60கிமீ வேகத்தில் “படபட”வென்று அடித்துக்கொண்டிருந்தது. எனக்கு பயம்தான் நான் இதுவரை அதெல்லாம் செய்ததும் இல்லை.ஆனால் நண்பன் சிவாதான் கட்டாயப்படுத்தினான்.
    “டேய் குமார் வாழ்க்கையில் ஒரு ‘த்ரில்’ வேணும்டா எங்களைப்பாரு நாங்க என்ன கெட்டாப் போயிடும். இதுக்கூட கத்துக்கலன்னா அப்புறம் நீ என்னடா ஆம்பள போ போயி புடவை கட்டிக்கோ போ என்று உசுப்பேத்திவிட என் ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது.
      என்னையா பொட்டைன்னு சொல்ற நான் ஆம்பளடா நீ என்னா சொன்னாலும் சரிடா நான் ரெடிடா! என்றேன்.
    அப்படி போடு மச்சி சாயாங்காலம் குளக்கரைக்கு வந்துடு அங்கதான் வசதியா இருக்கும் என்றவன் போய்விட்டான்.
    நான் அக்கம் பக்கம் யாராவது பார்த்துவிடப்போகிறார்கள் என்று பயந்தபடியே இப்போது குளக்கரையில் அமர்ந்திருக்க எனது இதயம் படபடத்தது.எனக்கு வேணும் மனசுக்குள் முனகினேன்.
“டேய் குமார் வந்துட்டியா ?” முதல்ல சட்டைய கழட்டு” சிவா குரல் விடுத்தான்.
“டேய் வேண்டாம்டா! பயம்மாயிருக்குடா” “ஏய் ஆரம்பிச்சுட்டியா புராணத்தை கழட்டுடா மரியாதையா!”.
சட்டையை கழட்ட “ம் லுங்கி அத யாரு கழட்டுவா?”
“வேண்டாம்டா”
“அடச்சீ கழட்டுடான்னா”
கழட்டிஎறிந்தேன் . ம்.. குளத்தில் குதி! கைய கால மாத்தி போடு ! ம் ஆவட்டும் என்று நீச்சல் தெரியாத எனக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தான் சிவா.
ஐயையோ அடிக்கவராதீங்க சார்.

Comments

  1. உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.

    http://www.filmics.com/share

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2