சிரிக்க வைத்த சிரிப்புகள்!
சிரிக்க வைத்த சிரிப்புகள்!
# தலைவரே பசுமை புரட்சிக்கு எதிரா அரசு செயல்படுது!
சும்மா இருப்பா கஞ்சா தோட்டம் போட்டா கவர்மெண்ட் சும்மா இருக்குமா?
# அப்பா நான் ஒருத்தரை காதலிக்கிறேன்!
பையன் என்ன பண்றான்?
வயித்துல எட்டி எட்டி உதைக்கிறான்பா!
ஜே.வடிவேல்
# FM ரேடியோவில வேலைக்கு சேர்ந்தது தப்புன்னு நினைக்கிறேன்.
ஏண்டா?
சம்பள பாக்கிய கேட்டா கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்கன்னு சொல்றாங்க!
எம்.பி கருணாகரன்.
# டேய் நான் ஒருபொண்ண காதலிச்சேன் அவளுக்காக உயிரையே கொடுத்தேண்டா!
அப்புறம்!
அப்புறமென்ன... கலைச்சிட்டா!
ஜே.வடிவேல்
# வாய் ரொம்ப நாறுது டாக்டர்!
எவ்வளவு நாளா?
உங்க வாய் பத்தி உங்களுக்குத்தானே தெரியும் டாக்டர்?
சாயம் வெ. ராஜாராமன்.
# சக்கரை வியாதி வந்ததுலேர்ந்து வீட்டுல என்னை தெய்வமா மதிக்கிறாங்க!
அடடே எப்படி!
ஸ்வீட் செஞ்சா எனக்கு சும்மா காமிச்சுட்டு மத்தவங்களே சாப்பிடறாங்க!
வி.சாரதி டேச்சு
யோவ் மானம் கப்பலேறி போச்சுன்னு வருத்தப்பட்டா நக்கல் உடறியா?
அஜித்லால்
Comments
Post a Comment