சிவவழிபாடு.


சிவவழிபாடு.

கிழக்கு மேற்கு நோக்கிய சன்னதிகளில் வடக்கே தலை வைத்து வணங்க வேண்டும் தெற்கு வடக்கு நோக்கிய சன்னதிகளில் கிழக்கே தலைவைத்து வணங்க வேண்டும்.
கால் நீட்டும் பின்புறத்தில் எந்த சன்னதியும் இருக்க கூடாது. கொடிமரத்தின் முன்னால் விழுந்து வணங்கினால் அங்கு எந்த தெய்வ சன்னதியும் இருக்காது அதனால்தான் இங்கு மட்டுமே விழுந்து வண்ங்க வேண்டும் என்று முன்னோர்கள் விதித்துள்ளனர்.

அபிஷேக காலத்தில் கோயில் உட் பிரகாரத்தில் வலம் வரக்க்கூடாது ஆலய ஆகம விதிப்படி சிவன்கோயிலில் மூலவருக்கும் எதிரில் உள்ள நந்திக்கும் இடையே உள்ள இடத்தில் விழுந்து வணங்க கூடாது.

நந்தி மூக்கினால் வரும் சுவாசக்காற்று மூலவருக்குப்போய் அவருக்கு நிலை தருவதாக ஐதீகம். இதனால் குறுக்கே செல்வதும் வணங்குவதும் கூடாது என்பார்கள்.

சிவன் கோயிலிக்கு செல்பவர்கள் கோயிலிலிருந்து வெளியே வரும்போது கோயில் வாயிலில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டுதான் வர வேண்டும். அதே போல் வீட்டிற்கு வந்தவுடன் கால் அலம்பக்கூடாது. சிறிது நேரம் கழித்துதான் கை கால்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

நைவேத்தியம் செய்யும்போது தரிசனம் செய்தல் கூடாது. அவ்வாறு செய்தால் வேதாளமாக பிறக்க நேரிடும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
 
செம்பருத்தை, தாழம்பு குந்தம் கேஸரம் குடஜம் ஜடாபுஷ்பம் ஆகியவைகளால் சிவனுக்கு பூஜை செய்யக்கூடாது.  

ஆலயங்களில்

பூஜை இல்லையெனில்  ரோகம் உண்டாகும்.
புஷ்பம் இல்லையெனில் குலநாசமுண்டாகும்
சந்தனமில்லாவிடில்  குஷ்டரோகமுண்டாகும்
தண்ணீர் இல்லாவிடில் துக்கமுண்டாகும்
தூபமில்லாவிடில் சுகக்குறைவு உண்டாகும்
தீபமில்லாவிடில் பொருள் சேதமேற்படும்
நெய் இல்லாவிடில் மரணபயம் ஏற்படும்
நைவேத்தியமில்லாவிடில்  துர்பிக்ஷமுண்டாகும்
அன்னபலி போடாவிடில் கிராமம் க்ஷீணமடையும்.
மணி இல்லாவிடில் செவிட்டுத் தன்மை உண்டாகும்
மந்திரம் இல்லாவிடில் தரித்திரம் உண்டாகும்
வஸ்திரம் இல்லாவிடில்  மகாரோகமுண்டாகும்
ஹோமம் இல்லாவிடில் குலக்ஷேமக்குறை உண்டாகும்
உத்ஸவங்கள் இல்லாவிடில் அரசர் ராஜ்யங்களுக்கு பயமுண்டாகும்.

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2