சிவவழிபாடு.
சிவவழிபாடு. கிழக்கு மேற்கு நோக்கிய சன்னதிகளில் வடக்கே தலை வைத்து வணங்க வேண்டும் தெற்கு வடக்கு நோக்கிய சன்னதிகளில் கிழக்கே தலைவைத்து வணங்க வேண்டும். கால் நீட்டும் பின்புறத்தில் எந்த சன்னதியும் இருக்க கூடாது. கொடிமரத்தின் முன்னால் விழுந்து வணங்கினால் அங்கு எந்த தெய்வ சன்னதியும் இருக்காது அதனால்தான் இங்கு மட்டுமே விழுந்து வண்ங்க வேண்டும் என்று முன்னோர்கள் விதித்துள்ளனர். அபிஷேக காலத்தில் கோயில் உட் பிரகாரத்தில் வலம் வரக்க்கூடாது ஆலய ஆகம விதிப்படி சிவன்கோயிலில் மூலவருக்கும் எதிரில் உள்ள நந்திக்கும் இடையே உள்ள இடத்தில் விழுந்து வணங்க கூடாது. நந்தி மூக்கினால் வரும் சுவாசக்காற்று மூலவருக்குப்போய் அவருக்கு நிலை தருவதாக ஐதீகம். இதனால் குறுக்கே செல்வதும் வணங்குவதும் கூடாது என்பார்கள். சிவன் கோயிலிக்கு செல்பவர்கள் கோயிலிலிருந்து வெளியே வரும்போது கோயில் வாயிலில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டுதான் வர வேண்டும். அதே போல் வீட்டிற்கு வந்தவுடன் கால் அலம்பக்கூடாது. சிறிது நேரம் கழித்துதான் கை கால்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நைவேத்தியம் செய்யும்போது தரிசனம் செய்தல் கூடாது. அவ்வாறு செய்த...