Posts

Showing posts from November, 2014

துன்பம் எப்படியெல்லாம் துரத்துகிறது? தித்திக்கும் தமிழ்! பகுதி 6

Image
துன்பம் எப்படியெல்லாம் துரத்துகிறது? தித்திக்கும் தமிழ்! பகுதி 6 துன்பம் இல்லாத மனிதன் யார்? இன்பம் இல்லாத மனிதர்கள் கூட இருப்பார்கள் துன்பம் இல்லாதவர்கள் இல்லை! எல்லோருக்கும் எதோ ஒரு கஷ்டமோ துயரமோ இருக்கத்தான் செய்கிறது.    பல கோடி அதிபனுக்கும் ஓர் துயரம் இருக்கிறது! இந்த கோடிகளை காப்பாற்றவேண்டுமே என்ற பயம் இருக்கிறது! அதற்காக துயரப்படுகின்றான். தனக்குப் பின் இந்த செல்வம் என்ன ஆகுமோ? என்று துயரப்படுகின்றான்.     ஒன்றுமே இல்லாத ஏழைக்கும் துன்பம் இருக்கிறது! இன்றைய பொழுது எப்படி போகுமோ? அடுத்த வேளைக்கு உணவு கிடைக்குமா? என்று துயரப்படுகின்றான். இருந்தாலும் துன்பம் இல்லாவிட்டாலும் துன்பம்! பிறந்தாலும் துன்பம்! இறந்தாலும் துன்பம்.    என்னப்பா எப்படி இருக்கே? என்று கேட்டுப்பாருங்கள்! ஏதோ இருக்கேன்! என்று விட்டேற்றியாக பதில் வரும் பலரிடம் இருந்து. அனைத்தையும் எதிர்மறையாகவே சிந்தித்து எதிர்மறையாகவே வாழ்ந்து தானும் துன்பத்தில் உழன்று பிறரையும் துன்பத்தில் ஆழ்த்தி விடுவார்கள் இவர்கள்.      சிலரோ இப்படி எதிர்மறை எண்ணங்களை விட்டொழித்து எவ்வளவு துன்பம் வந்தாலும் அதில் இருக்கும் நன

தேனுக்கு ஆசைப்பட்ட நரி! பாப்பா மலர்!

Image
தேனுக்கு ஆசைப்பட்ட நரி! சயனாவனம் என்ற காட்டில் பல்வேறு விலங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. இயற்கை எழில் கொஞ்சும் அந்த காட்டில் ஓங்கி உயர்ந்த மரங்களும் நீரோடைகளும் பசும் புல்வெளிகளும் நிறைந்து இருந்தன. இதனால் விலங்குகள் உணவிற்கு பஞ்சமின்றி இருந்தன. அதே சமயம் அந்த காட்டினுள் வாழும் விலங்குகளை மனிதர்களோ பிறரோ துன்புறுத்துவது கிடையாது. வேட்டையாடுதல் தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இதனால் விலங்கினங்கள் மிகவும் நிம்மதியாக அந்த காட்டில் வாழ்ந்து வந்தது.     அந்த காட்டினில் குள்ள நரி ஒன்று வசித்து வந்தது. அது மிகவும் தந்திரம் கொண்டது. காட்டு ராஜாவான சிங்கத்தின் மந்திரிசபையில் முக்கிய பதவியில் இருந்தது. சிங்க ராஜாவிற்கே ஆலோசனை வழங்கும் பொறுப்பில் இருந்ததால் மிகவும் கர்வத்துடன் அது சுற்றிவந்தது.     அதை கண்டாலே மற்ற விலங்குகள் அஞ்சி நடுங்கி வணக்கம் தெரிவித்தன. அதை மதியாதவர்களை ஏகவசனத்தில் திட்டி அவர்களை தக்க சமயத்தில் பழிவாங்கிக் கொண்டு இருந்தது நரி. இதனால் நரி வருகிறது என்றாலே மற்ற விலங்குகளுக்கு கொஞ்சம் அச்சம் தான். அது என்ன சொல்லுமோ? அதன் வாயில் வீணாக மாட்டிக் கொள்ள வேண்டாமே என்று ஒது

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 24

Image
  கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 24 தலைவர் கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ண சொன்னாராமே எந்த ஊரிலே கூட்டம்? அட நீ வேற! கூட்டம் எந்த ஊரிலே இருந்தாலும் கூடற கூட்டத்தைத்தான் ஏற்பாடு பண்ண சொல்லியிருக்காரு! நம்ம கட்சியோட ஒவ்வொரு தொண்டனும் விலைமதிப்பு இல்லாதவர்கள்னு தலைவர் சொன்னது தப்பா போச்சு! விலை மதிப்பில்லாம இங்க ஏன் இருக்கணும்னு எதிர்கட்சியிலே ஒவ்வொருத்தரா போய் சேர்ந்துட்டாங்க! இந்த படத்துல பாக்யராஜ், பாரதிராஜா, பாலசந்தர், பார்த்திபன்,னு எல்லா பெரிய டைரக்டர்களோட பாதிப்பும் இருக்கும்! அப்ப இவங்க எல்லோரட படத்துல இருந்தும் கொஞ்சம் கொஞ்சம் சீன் சுட்டு படம் எடுத்திட்டீங்கன்னு சொல்லுங்க! முத்த போராட்டத்துக்கு ஆதரவளிச்சதால மேனேஜரோட கன்னம் வீங்கிருச்சா ஏன்? போராட்டத்துக்கு ஆதரவளிச்சு வேலைக்காரிக்கு முத்தம் கொடுத்தது வீட்டுக்காரிக்கு தெரிஞ்சு போச்சாம்! அவரு பல பேரை உயரத்திலே ஏற்றி வச்சிருக்காரு!      ஆசிரியரா?    இல்லே லிப்ட் ஆபரேட்டர்! நம்ம தலைவர் ஒரு பழைய பஞ்சாங்கம்னு எப்படி சொல்றே? அவனவன் டூ ஜி, த்ரி, ஜின்னு ஊழல் பண்ணா இவர் இன்னும

சிகரெட்டுக்குத் தடையும்! முதல் எச்சரிக்கையும்! கதம்ப சோறு பகுதி 52

Image
கதம்ப சோறு பகுதி 52 நல்லா போட்றாங்கய்யா சட்டம்!        நம்ம ஆட்சியாளர்கள் போடும் சட்டங்களை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை! பூனைக்கும் நண்பன் பாலுக்கும் காவல் என்பது போல உள்ளது இவர்கள் போடும் சட்டங்கள். சிகரெட்டை பாக்கெட்டாய் தான் விற்க வேண்டும் என்று புதிய சட்டம் போடப்போகிறார்கள். புகையிலைப் பொருட்களை தடை செய்ய வேண்டும் இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்ற நல்ல எண்ணத்தில் இந்த சட்டமாம். இதனால் பலனடையப்போவது உண்மையில் வியாபாரிகளும் சிகரெட் கம்பெனிகளுமே! ஏதோ ஐந்து பத்து கொடுத்து ஒன்று இரண்டு சிகரெட் பிடித்தவன் வாய் சும்மா இருக்குமா? அப்பா பாக்கெட்டில் கைவிட்டு ஐம்பது நூறு எடுத்து ஒரு பாக்கெட்டாக வாங்கிவிடுவான். ஒன்று ஊதியவன் அட பாக்கெட்டே இருக்கிறதே என்று ஒருநாளைக்கு ஒரு பாக்கெட் ஊதுவான். அதற்குத்தான் வழிவகுக்கும் இந்த சட்டம். பான்பராக் உள்ளிட்ட பான் பொருட்களை தடை செய்தார்கள். ஆனால் இன்று கடைகளில் பப்ளிக்காக கிடைக்கிறது. முறையான கடுமையான நடவடிக்கை கிடையாது. எல்லாம் லஞ்சம் ஊழல் நிறைந்த இந்த நாட்டில் ஒவ்வொரு சிகரெட்டாய் கூட விற்பார்கள் ஐந்து ரூபாய் சிகரெட்டை பத்து ரூபாய் எ

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! இருண்டதும் அழகாகின்றன! நகரங்கள்! தழுவிவிட்டு நழுவிக்கொண்டே இருக்கின்றது காற்று! கேள்விகள் விளைகையில் வளர்கிறது குழந்தை! மையிட்டு பொட்டுவைத்துக்கொண்டது வானம்! நிலா! ஒளிரும் சாலைகள் ஊர்ந்தன புழுக்கள்! இரவில் வாகனங்கள்! கடத்தல்காரனை காதலிக்கின்றது உலகம்! காற்று! கடல் குளியலில் சூரியன்! குளிர்ந்தது பூமி! மின்னியது! கூசவில்லை! மின்மினி! விளக்கேந்தி விடியலைத் தேடுகின்றன மின்மினிகள்! ஆயிரம் அர்த்தங்கள் புதைந்துகிடக்கின்றது குழந்தையின் மொழி! பொம்மைக்கு அடிபட்டதும் வலிக்கிறது குழந்தை மனசு! சலனப்பட்டு வாழ்க்கை இழக்கின்றது நீர்! மூடிக்கொண்டன இதழ்கள்! மவுனம்! மூழ்காமலே முத்தெடுத்தது! தாமரை இலை! ஒற்றைக்காலில் தவம்! கிடைக்கவில்லை வரம்! அல்லிமலர்கள்! அழுக்காகத் தெரிவது அழகாகிறது! குழந்தையின்சட்டையில் மண்!  விரட்டினாலும் ஒட்டிக்கொள்ளவே   விரும்புகிறது குழந்தையிடம் மண்! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 23

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்!  பகுதி 23 1.       இந்த படத்துல கதை ஒண்ணையுமே காணோமே! யாரோட கதையையும் திருடி எடுத்தேன்னு யாரும் சொல்ல முடியாதுன்னு டைரக்டர் சொன்னப்பவே நினைச்சேன்! 2.       தலைவர் அடிக்கடி இதை மேலிடத்துக்கிட்ட கேட்டுச் சொல்றேன் மேலிடத்துக்கிட்டே கேட்டுச்சொல்றேன்னு சொல்றாரே நம்ம கட்சிக்கு ஏதுய்யா மேலிடம்?     நீ வேற மேலிடம்னு அவர் சொல்றது அவர் சம்சாரத்தை! 3.       மன்னா! நம் நாட்டை போர் மேகங்கள் சூழ்ந்துவிட்டன!   மந்திரியாரே எதிரியுடன் சமரசம் பேசி ஒரு குடையின் கீழ் ஆட்சியை கொண்டுவந்து விடலாமா? 4.       தலைவருக்கு எப்பவுமே விளம்பர மோகம் ஜாஸ்தி! அதுக்காக குற்றப்பத்திரிக்கையிலே கட்சி விளம்பரம் வரனும்னு சொல்றது கொஞ்சம் கூட நல்லாவே இல்லை! 5.       தொண்டர்கள் எல்லாம் எதுக்கு மாலையோட வந்து இருக்காங்க? நீங்கதானே தலைவரே நம்மகட்சியிலே ஜனநாயகம் செத்துவிட்டதுன்னு அறிக்கை விட்டீங்க! 6.       நீதிமன்றத்திலே தலைவர் சொன்ன பதிலைக்கேட்டு ஜட்ஜே  அசந்துட்டார்! எப்படி? இவ்வளவு ஊழல் பண்றதுக்கு உங்களுக்கு எப்படி மனசுவந்ததுன்னு கேட்டதுக்கு அது என்னோட உடன

ஓடிக்கொண்டே இருக்கும் மோடியும்! ஓடாத ஓபிஎஸ்ஸும்! கதம்பசோறு பகுதி 51

Image
கதம்பசோறு பகுதி 51 ஓடிக்கொண்டே இருக்கும் மோடியும்! ஓடாத ஓபிஎஸ்ஸும்!   நம்முடைய மாநிலத்தையோ நாட்டையோ எடுத்துக்கொண்டால் ஆட்சி முறை கூட்டாட்சி தத்துவம். எனவே பிரதமரும்- முதல்வரும் முக்கியமானவர்கள். நமக்கு வாய்த்த நல்லவர்கள் வல்லவர்களாக இல்லாதது நாம் செய்த பெரும்பாக்கியம்தான் என்ன செய்வது? பிரதமருக்கு சொந்த நாட்டில் இருப்பதை விட வெளிநாடுதான் பிடிக்கிறது! தினம் ஒரு நாடு என்று கணக்குவைத்து சுற்றிப் பார்க்கிறார் அன்னிய முதலீடு என்கிறார் அது இது என்று எல்லா நாடுகளுக்கும் சுற்றிவருகிறார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ரெகார்டை முறியடித்துவிடுவார் போலிருக்கிறது. அவராவது ஒரு அணுகுண்டு வெடித்து கார்கில் போரை வெற்றிகரமாக சமாளித்தார். இவருக்கு நாட்டில் குப்பையை அகற்றவும் கழிப்பறைகட்ட வெளிநாட்டில் நிதிகேட்கவே நேரம் போதவில்லை! இதற்கிடையில் மீடியாக்களுக்கு போஸ் கொடுக்கவும் விளம்பரங்களில் நடிக்கவும் வேறு நேரம் ஒதுக்க வேண்டும். எப்படியோ குஜராத்தை மாற்றிவிட்டேன் என்று ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி இந்தியாவை மாற்றுகிறேன் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். சரி இவராவது பரவாயில்லை! ஓபிஎஸ் ஒண்ணுக்