சுகங்கள் நல்கும் கார்த்திகை சோமவார விரதம்!
சுகங்கள் நல்கும் கார்த்திகை சோமவார விரதம் ! தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகையில் சுபகாரியங்கள் நடத்துவது சிறப்பாகும். விரதங்கள் கடைபிடிக்கவும் கார்த்திகை மாதம் உகந்ததாகும். சங்க இலக்கியங்களிலும் கார்த்திகை மாதம் சிறப்பித்துக் கூறப்படுகின்றது. கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் ஈஸ்வரனுக்கு மிகவும் உகந்த நாளாகும். சோகங்களைப் போக்கி சுகங்களை தரவல்லது கார்த்திகை சோமவார விரதமாகும். கார்த்திகை மாத சுக்ல பட்ச அஷ்டமி திதியில் தோன்றியவர் சோமன் எனக்கூடிய சந்திரன். இவருக்கு தட்சன் தன்னுடைய இருபத்தேழு பெண்களையும் திருமணம் செய்து கொடுத்தார். அவர்களில் ரோகிணியிடம் மட்டும் சந்திரன் அதிக அன்பு பாராட்டினான். மற்ற பெண்கள் தந்தையிடம் முறையிட்டார்கள். தட்சன் வெகுண்டு போய் சந்திரனை தேய்ந்து போகும் படி சாபம் இட்டார். தன்னுடைய ஒளி தேய்ந்து போவதை கண்டு வேதனையடைந்த சந்திரன் சிவபெருமானை சரணடைந்தார். சிவபெருமானும் சந்திரனை தன்னுடைய தலையில் சூடி பாதி நாள் வளர்ந்தும் பாதி நாள் தேய்ந்தும் இருக்கு...