புதுக்கோட்டைக்கு புறப்படுவீர்!


  
 விடுமுறை ஞாயிறு!
   விடியலில் புதுக்கோட்டை!
  படையெடுப்பீர் பதிவர்களே!
  புடைசூழ புறப்படுவீர் புதுக்கோட்டைக்கு!
  உலகுக்கு ஒளிகொடுப்பது ஞாயிறு!
  உலகப்பதிவர்களுக்கெல்லாம் இவர் எழுஞாயிறு!
  தொலைக்காட்சிகளில் பேசுவார் பட்டி மன்றம்!
  தொல்லையென்றாலும் காட்டமாட்டார் முகவாட்டம்!
  அருந்தமிழ் ஆசிரியர் அண்ணன் முத்துநிலவன்
  விருந்துக்கு அழைக்கின்றார் புதுக்கோட்டை!
  மருந்தென புறந்தள்ளாது  பருந்தென பறப்பீர் புதுக்கோட்டை!
   
   புதுகை கணிணி தமிழ்ச் சங்க நண்பர்கள்
   உவகையோடு காத்திருக்கிறார்கள் உமது வருகைக்கு!
   அளவளாவி மகிழ அனைத்தும் உண்டு!
   அள்ள அள்ளக் குறையாத பரிசுகள்!
   அள்ளி அள்ளிக் கொடுக்கின்றார்கள் அன்புடனே!
   பதிவர்கள் எல்லாம் உறவுகளாய் ஒருமித்தே
   உதிப்பார்கள் ஞாயிற்றுக்கு மாற்றாய் அன்றே!

     வலைபதிவர் கையேடும் நூல்வெளியீடும்!
     இலக்கியப்போட்டியில் பரிசுகளும் கேடயமும்
     இனிய விருந்தினரின் நனி பேச்சுக்களும்
     புத்தகக் கண்காட்சியும் புதுப்புது பதிவர்களின்
     பொன்னான அறிமுகமும் கிடைக்கும் நன்றே!
     
      எழுத்தில் வாசித்த நட்புக்களை 
      பழுத்த இலக்கிய சிறப்புக்களை
      பக்கத்தில் வைத்தே நாம் காணலாம்!
     
     பதியவில்லை என்றே எண்ண வேண்டாம்!
     புதியவரோ என்று மயங்க வேண்டாம்!
      பதிவரில்லையே என்று பதறவேண்டாம்!
     உங்கள் வருகை மட்டுமே எங்கள் எண்ணம்!
     எங்கள் விருந்தினராய் ஏற்பது திண்ணம்!

      தயங்காதீர்! தளராதீர்!
     முடங்காதீர்! முழங்குவீர்! பதிவர் ஒற்றுமை சிறக்கட்டும்!
     புதுகை விழா சிறக்க புதிய பாதை அமைத்திட
     உவகையோடு புறப்படுவீர்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. அருமை நண்பரே நான் இதோ புறப்பட்டு விட்டேன்...

    ReplyDelete
  2. நன்றி தோழர்....

    நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

    இணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  3. அருமை நண்பரே, அபுதாபி சென்று கில்லர்ஜியையும் அழைத்துக் கொண்டு விழாவிற்கு வந்துவிடுகிறேன்.

    ReplyDelete
  4. அருமை நண்பரே! நான் எப்பவோ ரெடி!

    ReplyDelete
  5. கண்ணில் தென்படும் தூரத்தில் கொண்டாட்டம்!

    ReplyDelete
  6. கிளம்பியாச்சு
    வித்தியாசமான அருமையான அழைப்புக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா
    வித்தியாசமாக அசத்தியுள்ளீர்கள் விழா சிறக்க எனது வாழ்த்துக்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. அருமையான அழைப்பு நண்பரே
    புதுகைக்கு க் கிளம்ப காத்திருக்கிறோம்
    நன்றி

    ReplyDelete
  9. சிறப்பான அழைப்பு!ஆனால் வர இயலாத நிலை!

    ReplyDelete
  10. வாங்க வாங்க சகோ..

    ReplyDelete
  11. அழைப்பும் அழைத்தவிதமும் சிறப்பு!
    விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. வழா சிறப்பிக்க வாழ்த்துக்கள், வரமுடியவில்லையே என்று வருத்தம்

    ReplyDelete
    Replies
    1. அழைப்புக்கு நன்றி நண்பரே!
      விழா சிறக்க வாழ்த்துகள்
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  13. ஆஹா அருமை சகோ,
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!