கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 50


கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 50


1.   என்ன சொல்கிறீர் மந்திரியாரே! மன்னரின் வாள் செய்யாத உதவியை வாய் செய்து விட்டதா?!
பின்னே! போரில் தோற்றதும் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று வாய் தானே சொல்லி மன்னரை காப்பாற்றியது!

2.   நம்ம தலைவர் ரொம்ப அல்பமா இருக்காருப்பா!
  எப்படி சொல்றே?
அவரோட படத்துக்கு எவனோ செருப்பு மாலை போட்டிருக்கான். அதை பார்த்துட்டு என்னோட சைஸுக்கு பொருத்தமா போட்டிருக்க கூடாதான்னு கேக்கறார்!

3.   அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?
வயிறு சரியில்லேன்னு போனா வாஸ்துப்படி வயிறு மாற்று அறுவை சிகிச்சை செஞ்சிரலாம் கவலைப்படாதீங்கன்னு சொல்றாரே!

4.   அந்த மனுஷர் ஏன் ஏடிஎம் செண்டர்ல ரொம்ப நேரமா நின்னுக்கிட்டே இருக்கார்…?
நில் பேலண்ஸுன்னு மிஷின் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாரு போல!


5.   நம்ம தலைவர் எதுக்கு திடீர்னு தனக்கு கோயில் கட்டியே ஆகனுன்னு அடம் பிடிக்கிறாரு!
  அப்பத்தானே உண்டி வச்சு வசூலை அள்ள முடியும்!

6.   தலைவர் திடீர்னு வாக்கு வங்கி ஒண்ணு ஆரம்பிக்கணும்னு சொல்றாரே என்ன விஷயம்?
கூட்டணி சேர மத்த கட்சிக்காரங்க உங்ககிட்ட எவ்வளவோ வாக்கு வங்கி இருக்குன்னு கேக்கறாங்களாம்!

7.   அவங்க வீட்டுல எதுக்கு திடீர்னு ரெய்டு நடக்குது?
தினமும் பருப்பு போட்டு சாம்பார் வைக்கிறதா எவனோ போட்டுக் கொடுத்து இருக்கான்!

8.   பொண்ணுவீட்டுக்காரங்க ரொம்ப வசதியானவுங்க போலன்னு எப்படி சொல்றே?
டிபன்ல போண்டாவும் வடையும் தாரளமா போடறாங்களே!

9.   அந்த பிளேயர் கிரவுண்டுக்கு போன வேகத்திலேயே திரும்பி வந்திடறாரே ஏன்?
கேலரியிலே கேர்ள் பிரண்ட் உட்கார்ந்து கை அசைச்சு கூப்பிடுதே!

10. தியேட்டரை விட்டு ஜனங்க எல்லாம் ஏன் அவ்வளவு வேகமா ஓடி வராங்க?
அந்த தியேட்டர்ல “புலி” ஓடுதாம்!


11.  மன்னா! எதிரியின் நாட்டில் தடுக்கிவிழுந்தால் வீரர்கள்…!
  நம் நாட்டில் எப்படி மந்திரியாரே!
  தடுக்கி விழுவதில் சூரர்கள்!

12.   நம்ம தலைவர் சும்மா புகுந்து விளையாடிட்டாரு?
  அப்புறம் விளையாட்டுத்துறையில ஊழல் பண்ணினதுக்காக அரெஸ்ட் பண்ணிட்டாங்க!
13. டாக்டர் நீங்கதான் என் மாங்கல்யத்தை காப்பாத்திக் கொடுக்கணும்!
  சரி சரி! நீ இவ்ளோ கெஞ்சறதாலே நான் உன் புருஷணுக்கு ஆபரேஷன் பண்ணாம விட்டுடறேன்!

14. வேலை நிறுத்தத்திலே ஈடுபடறவங்க எல்லாம் கையிலே மை பூசிக்கிட்டு இருக்காங்களே ஏன்?
அது ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமாம்!

15.  இப்படி ஒரு பெண்ணை பெத்ததுக்கு உங்களை கிரெடிட் பண்றேன் மாமான்னு மாப்பிள்ளை சொன்னபோது புரியலை!
அப்புறம்?
சொத்தெல்லாம் கிரெடிட் ஆகி கடன்காரனா ஆனப்புறம்தான் புரிஞ்சது!

16.  மாமா! உங்க பொண்ணு என்னை அடிச்சு வாயெல்லாம் கிழிஞ்சி போச்சு!
  பொண்ணு வாய் கிழிய பேசுவா கொஞ்சம் பொறுத்துகங்கன்னு அன்னிக்கே சொன்னேனே மாப்பிள்ளை!

17.  மன்னர் ஊன் உறக்கமின்றி சதா போரைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறாராமே!
   எப்படி வெற்றி பெறுவது என்றா?
 ஊகும் எந்த பக்கமாய் தப்பித்துவருவது என்று…!

18.  புலவரே உமது பாட்டில் மன்னர் சொர்கத்துக்கு சென்றுவிட்டார்!
   அப்படியா மந்திரியாரே பரிசு நிச்சயமா?
  யோவ்! தூங்கிவிட்ட மன்னர் எழுந்த பின்னர் கேளும் பரிசை!


19.  கண்ணே உனக்காக வில்லை வளைக்க வேண்டுமா? நிலவை பிடிக்க வேண்டுமா? எதுவாயினும் சொல் அன்பே…!
  முதலில் என் செல்லுக்கு பில்லை செட்டில் செய்! அப்புறம் பார்க்கலாம்!

20.   இது பரம்பரை பழக்கம்னு சொல்றீங்களே அப்படி என்ன பரம்பரைன்னு நீதிபதி கேட்க தலைவர் சொன்னபதிலை கேட்டு ஜட்ஜ் அசந்து போயிட்டாரு!
அப்படி என்ன சொன்னாரு?
நாங்க குற்றப்பரம்பரைடான்னு!

21.  மன்னர் ஏழைகளுக்கு அரசு கஜானாவை திறந்துவிட்டுவிட்டாராமே!
  அட நீ வேறு கஜானா காலியானதால் ஏழைகளுக்கு வாடகைக்கு விட்டதைத்தான் அப்படி சொல்லி இருக்கிறார்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
                                                  

Comments

 1. அனைத்தும் சுவை அறு சுவை! சூப்பர் நண்பரே

  ReplyDelete
 2. 9 ஆவது தவிர மற்றவை ரசித்தேன் சகோ :)

  ReplyDelete
 3. ஹாஹாஹாஹா சிரித்துக்கொண்டே.... இருக்கிறேன் நண்பரே...

  ReplyDelete
 4. சிரிப்பு வெடிதான் நானும் கோவில் கட்டலாம் போல வசூல் பெற[[[[[

  ReplyDelete
  Replies

  1. அனைத்தும் அருமை!
   ரசித்து மகிழ்ந்தேன்.
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2