தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!





எட்டிப்பார்த்ததும்
பதறிப்போனார்கள்!
இரத்தம்!

நீர் அணைத்தும்
நெருப்பு அணையவில்லை!
சுடர்விட்ட குளம்!

கடத்தல் காரனுக்காக
காத்திருக்கும் கூட்டம்!
காற்று!

பிடித்திருந்தும்
பிடிக்காமல் போனது!
அளவு மாறிய சட்டை!

பசி புகுந்ததும்
விரட்டிஅடிக்கப்பட்டது!
மானம்!

பகல் மறைந்ததும்
குளிர்விட்டது
இரவு!

மடிந்தாலும்
மணம் வீசின
மலர்கள்!

கொட்ட கொட்ட
கூடுகின்றது கூட்டம்!
அருவி!

ஐப்பசிமழை!
தொலைத்த தூக்கம்!
தவளைகளின் குரல்!

மறைத்து வைத்தாலும்
எடுத்தச் செல்ல மறக்கின்றது!
இரவு!

நுழையும் போதே வாசித்துவிடுகிறது
மேசை புத்தகங்களை!
காற்று!

வயல்களை காணாத வருத்தம்
வதங்கி வாடின
கிளிகள்!

சுட்டி தொலைக்காட்சிகள்
கட்டிப்போடுகின்றன 
சுட்டித் தனங்கள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. #அருவியில் கொட்ட கொட்ட
    கூடுகின்றது கூட்டம்!
    அருவி!#
    ஆஹா நானும் ஹைக்கூ அருவியில் குளித்து மகிழ்ந்தேன் :)

    ReplyDelete
  2. அனைத்தும் அருமை... ரசித்தேன்...

    ReplyDelete
  3. அனைத்தும் மிக அருமை நண்பரே
    நேரமிருப்பின் என் தளமும் வாங்க நண்பா!!!!

    ReplyDelete
  4. அருமை அருமை! ரசித்தேன் அனைத்தும்.

    ReplyDelete
  5. நல்ல முயற்சி சுரேஷ்!

    ReplyDelete
  6. மிகவும் ரசித்தேன் நண்பரே...

    ReplyDelete
  7. அருமையான ஹைக்கூ ரசித்தேன்!

    ReplyDelete
  8. "நுழையும் போதே வாசித்துவிடுகிறது
    மேசை புத்தகங்களை!
    காற்று!" அருமை!!

    ReplyDelete
  9. அனைத்துமே நன்று. பாராட்டுகள்.

    ReplyDelete
  10. அனைத்துமே அருமை

    பசி புகுந்ததும்
    விரட்டிஅடிக்கப்பட்டது!
    மானம்!//

    நிதர்சனம்! அருமை....பாராட்டுகள் சுரேஷ்!

    ReplyDelete
  11. //நுழையும் போதே வாசித்துவிடுகிறது
    மேசை புத்தகங்களை!
    காற்று!//
    அசத்தல் கவிதை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2