கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 51

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 51


1.   இன்னும் வளரணும்னு போலீஸ் தேர்வுல திருப்பி அனுப்பிட்டாங்களா அப்படி எது வளரலை!
  தொப்பைதான்!

2.   சர்வர் கஸ்டமர் கிட்ட என்ன தகறாரு!
  சேவைக் கட்டணம்னு போட்டிருக்கீங்களே நான் சேவை எதுவும் சாப்பிடலை அந்த பணத்தை தரமாட்டேன்னு சொல்றார் சார்!

3.   தலைவர் ரொம்ப அல்பமா இருக்கார்!
  எப்படி சொல்றே?
மாநாட்டு பட்ஜெட்ல நிறைய துண்டு விழுதுன்னு சொன்னா அதுல ஒரு ரெண்டை எனக்கு அனுப்பிச்சிடுன்னு சொல்றாரே!

4.   ஹோம் ஒர்க் ஏன் செய்யலை?
எங்க வீட்டுல எல்லா ஒர்க்கும் முடிஞ்சிருச்சு மிஸ்! இனி ஒன்னும் பாக்கி இல்லை!


5.   வரதட்சணை கொடுமைன்னு மருமக புகார் சொல்லியிருக்காங்களே அப்படி என்ன செய்ஞ்சீங்க!
பருப்பு சாம்பார் வைச்சு போடும்மா கேட்டேன்!

6.   கல்யாணத்தப்போ மாப்பிள்ளை ரொம்ப முறுக்கோட இருந்தாரே இப்ப எப்படி?
  என் பொண்ணு முறுக்கிவிட்டப்படி ஆடற நிலைமைக்கு வந்துட்டார்!

7.   பையன் பார் அசோசியேஷன்ல மெம்பர்னு சொல்லி ஏமாத்திட்டாங்க!
  எப்படி?
டாஸ்மாக் பார்ல மெம்பராம்!

8.   டென்னிஸ் ப்ளேயரை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சா ஏன்?
  ஆ.. ஊ..ன்னா கோர்ட்டுக்கு போயிடறாளே!

9.   தலைவரை போற்றி பாராட்ட வார்த்தைகளே இல்லை என்பதால் எல்லோரையும் இரண்டுநிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்!
10.  இந்த வீடு தலைவர் குறுக்குவழியிலே சம்பாதிச்சு கட்டினது எப்படி சொல்றே?
   குறுக்குச் சந்திலே வீட்டை கட்டி இருக்காரே!

11. என்னப்பா சர்வர் சாம்பார்ல பருப்பையே காணோமே!
சாம்பார்ல பருப்பை பார்கணும்னா உங்க பர்ஸ்ல பணம் காணாம போயிரும் பரவாயில்லையா சார்!


12.  இராணியார் ஏன் மன்னர் மீது இவ்வளவு கோபமா இருக்கிறார்?
மன்னர் பேஸ்புக்கில் ராணியை அன்பிரண்ட் பண்ணிவிட்டாராம்!

13.  மன்னா! நம் குடை சாய்ந்தது கொடி வீழ்ந்தது!
   உடை கிழியும் முன் ஓடிவிடுவோமா மந்திரியாரே!

14.  ஒரு நிமிசம் உங்க செல்போனை கொடுக்க முடியுமா ஒரு கால் பண்ணணும்!
     பேலன்ஸ் இருக்காதே…!
அப்ப ரெண்டு காலாவே பண்ணிடறேன்!

15. உன் மனைவி அடிக்கடி குத்தி காமிச்சிக்கிட்டேஇருந்ததை சரிபண்ண கொஞ்சம் செலவாயிருச்சா ஏன்?
காதுல குத்திக்கிட்ட ஓட்டையை மாட்டல் போட்டு அடைக்கிறதாயிருச்சே!

16.  மன்னா! என் வறுமை கொடியது!
உங்கள் பாட்டை கேட்பது அதைவிட கொடியதாக இருக்கிறது புலவரே!

17.  எங்க ஆபீஸ்லே நேரத்துக்கு ஒழுங்கா வர்றது ஒருத்தர்தான்!
  யார் அவர் உங்க மேனேஜரா?
 இல்லே பக்கத்து கடையில இருந்து டீ சப்ளை பண்றவர்!

18.  தலைவரே நம்ம கொள்கைகளை தொண்டர்கள் காத்துல பறக்க விட்டுட்டாங்க!
     என்ன சொல்றே?
 கொள்கைகள் எழுதன பேப்பரை கிழிச்சு போட்டுட்டாங்கன்னு சொல்றேன்!

19.   இவ்வளவு வேகமா வண்டி ஓட்டறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை டியர்!
  எனக்கும் கூடத்தான் ஆனா ப்ரேக்கும் கூடத்தான் பிடிக்க மாட்டேங்குது!


20.  அந்த பார்மஸியிலே காலாவதியான மருந்துக்களை வித்திட்டிருந்தாங்களாமே!
பல பேரோட தலைவிதியையே மாத்திட்டிருந்தாங்கன்னு சொல்லுங்க!

21. மன்னர் எதற்கு போருக்கு நிறைய  மையை எடுத்துச் செல்கிறார்?
போர்க்களத்தில் எதிரியை அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடுவதாக சொல்லியிருக்கிறாரே  மை பூசி அடையாளம் தெரியாமல் மாற்றிவிடத்தான்!

22.  எதிரிக்கு பயத்தை காட்டவேண்டும் அமைச்சரே…!
   முதலில் உங்களின் பயத்தை போக்கிக் கொள்ளுங்கள் மன்னா!
   

23. மன்னா அந்தப்புரத்தில் திருடன் ஒருவன் புகுந்துவிட்டான்!
பிடித்துச் சிரச்சேதம் செய்துவிட வேண்டியதுதான்!
ஆனால் இளவரசியின் மாங்கல்யத்திற்கு சேதம் வந்துவிடுமே!

24. எதிரி மன்னன் வெற்றிக் களிப்புடன் வந்து கொண்டிருக்கிறான்!
நம் மன்னருக்கு...?
அரண்மனை வைத்தியர் களிம்புடன் வந்து கொண்டிருக்கிறார்!

  

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. அனைத்தையும் ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. அனைத்தும் கல கல
    ரசித்தேன் சிருத்தேன்
    நன்றி நண்பரே!!

    ReplyDelete
    Replies
    1. 2 டஜனையும் ரசித்தேன் பாஸ்....

      Delete
  3. ரசித்தேன்
    சிரித்தேன் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்
      ஐயா

      அனைத்தும் சிறப்பு படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      Delete
  4. தீபாவளி நெருங்குவதால் சரவெடியா ஹஹாஹ்ஹ!!!

    ReplyDelete
  5. 1, 2, 3... அட.. எல்லாமே அருமை பாஸ். ரசித்தேன், சிரித்தேன்.

    ReplyDelete
  6. அடேங்கப்பா ,ஒரே பதிவில் இத்தனை ஜோக்கா ?அருமை :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2