சாக்லேட் பெண்கள்!

சாக்லேட் பெண்கள்!
சென்னை பித்தன் ஐயாவின் சாக்லேட் பெண்கள் கதைக்கு என்னுடைய முடிவு இது. முன்கதை இல்லாமல் படித்தாலும் ஓரளவு புரியும். முன்கதை அறிய 
  மதன்லால் நள்ளிரவில் வீடு திரும்பினான். தன் வசம் வைத்திருந்த மாற்றுச்சாவி மூலம் கதவைத்திறந்து உள்ளே நுழைந்தான். மாலினி படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் உறங்குவதையே ஒரு முறை வெறித்துப் பார்த்தான். பின்னர் பெருமூச்சொன்றை விட்டான். சத்தம் போடாமல் பீரோவைத் திறந்தவன் அதிர்ந்தான்.

   சாக்லேட் பாக்ஸை காணவில்லை! அவன் முகம் வெளிறிப் போனது. இதுவரை இப்படி நடந்தது இல்லையே! இன்று மட்டும் எப்படி? அப்படியே ஒர் வினாடி செய்வதறியாமல் நின்றவன் முன் மாலினி வந்து நின்றாள்.

      எதைத் தேடறீங்க?

 அ.. அதுவந்து இங்க ஒரு சாக்லெட் டின் வைத்திருந்தனே!

      இந்த அர்த்த ராத்திரியிலே சாக்லெட் சாப்பிட போறீங்களா?

    அதெல்லாம் உனக்கு எதுக்கு? அந்த சாக்லெட் எங்கே?

    சாக்லெட்டை ஏன் மறைச்சி வைக்கிறீங்க?

    தப்புத்தான்… ஆமா நீ கேக்கறதை பார்த்தா அந்த டின்னை நீதான் எடுத்திருக்கணும்னு தோணுது…!

     தோணுது என்ன.. நான் தான் எடுத்தேன்…!

   ஷிட்! அதை ஏன் எடுத்தே? என்ன செஞ்சே… பதறினான் மதன் லால்!

       ஏங்க இப்படி பதட்ட படறீங்க? அப்ப தப்பான எதுவோ அதுல இருக்கு!

     அ.. அதெல்லாம் இல்லே!

   அப்ப ஏன் பதட்டம்! ஒண்ணும் கவலைப்படாம வந்து படுங்க!

    “அதை என்ன செஞ்சே சொல்ல போறியா இல்லையா?

    எதுக்கு இந்த கோவம்? அது வெறும் சாக்லெட்தானே… இல்லே வேற ஏதாவது….!
        ஐயோ! புரியாம விளையாடிறியே… அதை என்ன பண்ணே! திண்ணு தொலைச்சிட்டியா…?

    என் ப்ரெண்ட் சுமா தெரியுமா? அவ பொண்ணு மைத்ரிக்கு நாளைக்கு பர்த்டே! நீங்கதான் சாக்லெட் வியாபாரம் பண்றீங்களே! ஒரு டின் அனுப்ப முடியுமான்னு கேட்டா…

       நீ கொடுத்து அனுப்பிச்சிட்டியா…?

   ஏன் கொடுத்தா என்ன?

   அது பிரிச்ச டின்! பரிசா கொடுக்கிறது இப்படி கொடுத்தா என்ன நினைப்பாங்க?

     அது மட்டும்தான் உங்க கவலையா? நான் என் ப்ரெண்ட்கிட்ட சொல்லிக்கிறேன்! கவலைப்படாம படுங்க!

      ஐயோ…! அந்த டின்னை அவங்களுக்கு கொடுத்திருக்க கூடாது… அதுல..

   அதுல அப்படி என்னதான் இருக்கு…!

    அ… அது..

  நான் சொல்லட்டுமா!

   நீ பார்த்துட்டியா? தெரிஞ்சுமா அதை உன் ப்ரெண்ட்டுக்கு கொடுத்தே!

  நான் அதை கொடுக்கலை! வேற டின் வாங்கி அனுப்பிட்டேன்!

    ஸ்… அப்பாடா….!

    ஏங்க இப்படி செய்யறீங்க?

   என்ன செய்யறேன்…?

  அந்த டின்ல இருந்ததைத்தான் கேக்கறேன்! அத்தனையும் வீரியமான கருத்தடை மாத்திரைகள்! இதை எதுக்கு வீட்டுக்குள்ளே பதுக்கி வைக்கறீங்க!

      நீங்க சொல்ல மாட்டீங்க! உங்க கடை பையனை விசாரிச்சிட்டேன்! சில இளம்பெண்கள் வழிதவறி நடக்க  இந்த மாத்திரைகளை விற்கறீங்க! அவங்களும் உங்க கிட்ட சட்ட விரோதமா வாங்கி உபயோகிக்கிறாங்க! நீங்க ஒரு அந்தமாதிரி ஒருகிளப்லே இருக்கீங்க! பெரிய பிரமுகர்கள் எல்லோருக்கும் பெண்களை சப்ளை பண்றீங்க! அவங்களுக்கு இந்த கருத்தடை மாத்திரைகளை கொடுக்கிறீங்க !

   எத்தனை கருவை இந்த மாத்திரைகள் அழிச்சிருக்கும்! அந்த பாவம் தாங்க என் வயித்துல ஒரு குழந்தையும் நிக்கலை!

   மாலினி குலுங்கி குலுங்கி அழ மதன்லால் மரம் போல் நின்றான்.

டிஸ்கி}
சென்னை பித்தன் ஐயாவின் கதையை ஏதோ எனக்குத் தெரிந்த வகையில் ஓரளவுக்கு நிறைவு செய்துள்ளேன். இதற்கு இரண்டு மூன்று முடிவுகளை கற்பனை செய்து டைப் செய்ய ஆரம்பித்தேன். டைப் செய்கையில் திடிரென தோன்றியது இந்த க்ளைமேக்ஸ்! அவசரகதியில் உருவானதால் கொஞ்சம் தவறுகள் இருக்கலாம்! மூன்றுநாளாய் பதிவெழுதவில்லை! இன்று கரு கொடுத்து உங்களால் முடியும் என்று ஊக்குவித்த ஐயாவால் ஒரு பதிவு தேத்த முடிந்தது! நன்றி ஐயா!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி

Comments

 1. Replies
  1. ஆஹா அருமையான முடிவு! சரியான முடிவு!!

   நன்றி நண்பரே!

   Delete
 2. கதையை வேறு கோணத்தில் சிந்தித்து அருமையாக முடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்
   ஐயா
   கதை சிறப்பாக உள்ளது இறுதியில் சொல்லி முடித்த விதம் சிறப்பு
   தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டி கலந்து கொள்ளுங்கள்
   ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெர...:  

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   Delete
 3. தேத்தவில்லை. சிறப்பாகவே செய்துள்ளீர்கள். நன்றி.

  ReplyDelete
 4. இப்படி ஒரு வித்தியசமான முடிவைத்தான் நான் எதிர்பார்த்தேன்,மிகச் சிறப்பாக முடித்துள்ளீர்கள் .வாழ்த்துகளும் நன்றியும்!

  ReplyDelete
 5. அருமை சுரேஷ்!!! நல்ல முடிவு!! வாழ்த்துகள்!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!