சகல வினைகள் போக்கும் சனிப்பிரதோஷம்!
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது அவ்வையாரின்
வாக்கு. தமிழகம் எங்கும் சிவாலயங்கள் நிறைந்த பூமி. சிவ சிவ என்கையிலே நம் தீவினைகள்
எல்லாம் ஓடிவிடும் என்பது பெரியோர் வாக்கு. சிவாலயத்தில் பிரதோஷ தரிசனம் தொடர்ந்து
செய்துவந்தால் முன் ஜென்ம பாவ வினைகள் கரைந்தோடும் என்பது ஐதீகம்.
பிரதோஷம்
என்பது மாதம் இரண்டுமுறை ஆலயங்களில் அனுஷ்டிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு
மாதமும் வளர்பிறை திரயோதசி, மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல்
ஆறு மணிவரை பிரதோஷ காலம் என்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த திரயோதசி திதி கார்த்திகை
மாதத்தில் சனிக்கிழமைகளில் வந்தால் சனிமஹாப்பிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. அன்றுதான்
சிவன் ஆலகால விஷத்தை உண்டதாக புராணங்கள் கூறுகின்றன.
எனவே
சனிக்கிழமைகளில் பிரதோஷம் என்பது சனிப்பிரதோஷம் என்று சிறப்பாக வழிபாடு செய்யப்படுகின்றது.
இருபது வகையான பிரதோஷ வழிப்பாட்டு முறைகள் ஆகமங்களில் கூறப்படுகிறது. இருப்பினை மாதப்பிரதோஷமும்
அதிலும் சனிப்பிரதோஷமும் ஆலயங்களில் விமரிசையாக வழிபாடு நடத்தப்படுகின்றது.
வளர்பிறை தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று அதிகாலையில் எழுந்து நீராடி நித்தியக் கடன்களை முடிக்கவேண்டும். சிவாலயம் சென்று வழிபடவேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்கவேண்டும். திருமுறைகளை ஓத வேண்டும். பிரதோஷநேரம் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை. இந்நேரத்தில் சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாயநம) ஓதி வழிபட வேண்டும். வசதி உள்ளவர்கள் சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தல் அவசியமாகும். சிவபெருமானுக்கு ருத்ரன் என்றொரு பெயரும் உண்டு. ருத் - என்றால் துக்கம். ரன் - என்றால் ஓட்டுபவன். ருத்ரன் - என்றால் துக்கத்தை விரட்டுபவன் என்று பொருள்.
பிரதோஷகாலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து பூஜை செய்கிறார்கள்.
எனவே, பிரதோஷ தினத்தன்று மறவாமல் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும்.
பிரதோஷகாலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து பூஜை செய்கிறார்கள்.
எனவே, பிரதோஷ தினத்தன்று மறவாமல் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும்.
பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்:-
1. பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
2. தயிர் - பல வளமும் உண்டாகும்
3. தேன் - இனிய சாரீரம் கிட்டும்
4. பழங்கள் - விளைச்சல் பெருகும்
5. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
6. நெய் - முக்தி பேறு கிட்டும்
7. இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்
8. சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
9. எண்ணெய் - சுகவாழ்வு
10. சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
11. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்

.
உத்தம மகா பிரதோஷம் :
சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும்.
சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும்
பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

பிரதோஷ காலத்தில் சிவனுக்கும்
நந்திதேவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள்.
மாவினால் செய்த அகல் விளக்கில் நெய்விளக்கு ஏற்றவார்கள். அரிசியில் வெல்லம் சேர்த்து (காப்பரிசி) படைத்து வணங்குவார்கள். பொதுவாகச் சிவன் கோயில்களை இல்லறவாசிகள் வலம் இடமாக வலம் வந்து வணங்க வேண்டும். முற்றும் துறந்த துறவியர் இடம் வலமாக வந்து வணங்க வேண்டும்.
பிரதோஷ நாட்களில் மட்டும் சிவாலயத்தை வலம் வரும் முறையினைச் சோமசூக்தப் பிரதட்சணம் என்று கூறுவர். சோமசூக்தம் என்ற சொல் சிவலிங்க அபிஷேக நீர்வந்து விழும் கோமுகி தீர்த்தத் தொட்டியைக் குறிக்கும்.
இத்தீர்த்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ளப்பெறும் பிரதட்சண முறையே சோமசூக்தப் பிரதட்சணம் எனப்படும். இம்முறை சிவாலயத்தில் மட்டும் அதுவும் பிரதோஷ காலத்தில் மட்டும் மேற்கொள்ளப் பட வேண்டிய முறையாகும். பிரதோஷ காலத்தின் போது நந்தியை முதலில் தரிசனம் செய்ய வேண்டும்.
அங்கிருந்து இடது புறமாகச் சென்று சண்டிகேஷ்வரரைத் தரிசனம் செய்தல் வேண்டும். பிறகு சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்தல் வேண்டும். அங்கு நின்றும் வலமாச் சென்று பராசக்தியின் அம்சமாய் விளங்கும்.
அபிஷேகநீர் வரம் துவார வழியே சிவனைத் தரிசனம் செய்து சென்றவழியே திரும்பி வந்த நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்தல் வேண்டும். இவ்வாறு மேலும் இருமுறையாக, மும்முறை இடம் வலம், வலம் இடமாக, பிரதட்சணமாகச் சுற்றிக் கொள்ளுதல் வேண்டும்.
இப்படியாக வலம் செய்வதன் வாயிலாக அரிய பேற்றைப் பெறலாம் என்பது ஆகம விதியாகும்.

சிவனை வழிபட ஏற்ற காலம் மாலை நேரம்; அதிலும் சிறந்தது சோமவாரம்; (திங்கட்கிழமை) அதிலும் சிறந்தது மாத சிவராத்திரி, அதிலும் சிறந்தது பிரதோஷ காலம். பிரதோஷ காலத்தில் சிவதரிசனம் செய்பவர்கள், எல்லா தேவர்களையும் தரிசித்த பலனையும் பெறுவர்.
பிரதோஷ காலத்தில், சகல தேவர்களும், சிவதரிசனம் செய்ய வந்து விடுகின்றனர். அதனால், நம் வீடுகளில் தெய்வ வழிபாடு பிரதோஷ காலத்தில் அவசியமில்லை.
பிரதோஷ காலங்களில் சிவதரிசனம் செய்வதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும்; சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்; சோமாஸ் கந்த மூர்த்தியை தரிசிப்பதால், இந்திரனுக்கு சமமான புகழ் கிட்டும்; பிரதோஷ காலத்தில் சிவாலயத்தில் செய்யப்படும் எந்த கைங்கர்யமும் பலவாகப் பெருகி, அளவற்ற பலனை கொடுக்கும்.

துன்பங்கள் போக்கும் திருநீலகண்ட
பதிகம்!
சுருட்ட பள்ளி பள்ளி கொண்டீஸ்வரர் |
திருச்சிற்றம்பலம்
அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயின் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
ஏவினை யாலெயின் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
முலைத்தட மூழ்கிய போகங் களுமற் றெவையுமெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டு மழுவு மிவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டு மழுவு மிவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
நாற்ற மலர்மிசை நான்முக னாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய வடியு முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
தோற்ற முடைய வடியு முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி யிருதலைப் போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
பாக்கிய மின்றி யிருதலைப் போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகி லிமையவர் கோனடிக்கண்
திறம்பயின் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.
இறந்த பிறவியுண் டாகி லிமையவர் கோனடிக்கண்
திறம்பயின் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.
திருச்சிற்றம்பலம்
பிரதோஷ காலத்தில் அனைத்து கடவுளர்களும் இறைவன்
சிவபெருமானின் திருநடனம் காண சிவாலயம் வந்து சேர்வர். சிவாலயத்தில் உள்ள மற்ற
கடவுளர்களின் சந்நிதிகளும் மூடப்பட்டோ அல்லது திரையிடப்பட்டோ இருக்கும். இச்சமயத்தில் மற்ற
கோவில்களுக்கு செல்லக் கூடாது. அங்குள்ள தெய்வங்களும் சிவாலயம் வந்து சிவதரிசனம்
காண குழுமியிருக்கும்.
பிரதோஷ காலங்களில் நாம் (வீட்டிலோ அல்லது
திருத்தலங்களிலோ அல்லது வேறு இடங்களிலோ) உணவை உட்கொள்ளல் ஆகாது. சிவ சிந்தையுடன் சிவாலய
வழிபாடு செய்திடல் வேண்டும். அச்சமயம் நமக்கு மற்ற தெய்வங்களின் ஆசிகளும்
கிட்டும். பிரதோஷ காலத்தில் நந்தி தன் தவத்தை துறந்து இறைவன் மற்றும்
இறைவியுடன் அபிசேக ஆராதனைகளை ஏற்பார். அச்சமயங்களில்
நந்தியெம்பெருமானிடம் நமது கோரிக்கைகளை வைக்க அவர் இறைவிக்கும், இறைவனுக்கும் தெரிவித்து அவற்றை
நிறைவேற்றுவார்.
ஈசன் விஷம் உண்ட மயக்கத்தில் பார்வதியின் மடியில் சயனிக்கும் கோலத்தில் அமைந்த சுருட்ட பள்ளி பள்ளிகொண்டீஸ்வர் ஆலயத்தில் சனிப்பிரதோஷ வழிபாடு செய்வது சிறப்பாகும். இதை விட சிறப்பு பஞ்செட்டி அருகே அமைந்துள்ள வாலீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு செய்வது சுருட்ட பள்ளி பிரதோஷ வழிபாட்டின் மும்மடங்கு பலனைத்தரும் என்று மயிலை புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இங்குள்ள ஈசன் அம்பிகையின் சர்ப்பதோஷத்தை ஏற்று கருமையாக உள்ளார். பால் அபிஷேகம் செய்கையில் கருநீலமாக வழிவதும் ராகு தோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குவது சிறப்பாகும்.
சனிப்பிரதோஷ தினத்தில் சிவாலயங்களுக்கு சென்று வழிபடுவோம்! சிவனருள் பெறுவோம்!
(இணைய தளங்களில் படித்து தொகுத்தது)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
உங்கள் பதிவோடு உள்ளம் கசிய வேண்டிக்கொள்கிறேன் சகோதரரே!
ReplyDeleteசிறப்பான நாளில் நல்ல பதிவு!
நன்றியுடன் வாழ்த்துக்கள்!
அருமையான தொகுப்பு. சுரேஷ் நன்றி. சுருட்டப்பள்ளி பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், அந்த திருத்தலத்தின் மகிமையை உங்களது பதிவின் மூலம் மேலும் அறிந்துகொண்டேன், மீண்டும் நன்றி.
ReplyDeleteஇந்த திருநீலகண்டன் பதிகத்தை பாட
ReplyDeleteநான் பெருமைப் படுவேன்.
இன்று சிவன் சன்னதியில் பிரதோஷ காலத்தில்
இதைப் பாடிடுவேன்.
சுப்பு தாத்தா.
www.pureaanmeekam.blogspot.com
இதுவரை இதன் மகத்துவம் அறியேன். மிகவும் நன்றி பதிகத்திற்கும் பதிவிற்கும். உள்ளம் உருக பாடினேன். வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteஅருமையான தகவல்கள்.
ReplyDeleteநன்றி சுரேஷ்.
நமஸ்தே அஸ்து பகவன் கிச்வேஸ்வராய மஹாதேவாயத் திரயம்பகாய.............
ReplyDeleteபிரதோஷம் பற்றிய தகவல்களை உங்கள் பதிவின் மூலம் நன்றக தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteஅருமையான தொகுப்புத் தகவல்கள்! சனி பிரதோஷம்...
ReplyDeleteநாங்கள் இந்த சனி ப்ரதோஷம் அன்று (புதுக்கோட்டைப் பயணத்தின் போது) 25 ஆம் தேதி திருவாரூர் தியாகராஜா கோயிலில் இருந்தோம்...ஹப்பா என்ன பெரியகோயில்? எத்தனை எத்தனை சிவலிங்கங்கள். மூலவர் மரகத லிங்கம். சன்னிதிகள்! அருமையான கோயில். புனர் சீரமைப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. காலையிலும் சென்றோம் மாலையிலும் சென்றோம். அழகு அழகு....மிகப்பழைய கோயில்!!!! மனதை விட்டு அகலாத கோயில்!!!