குறை போக்குவோம்! கை கொடுப்போம் வாருங்கள் பதிவர்களே!

குறை போக்குவோம்! கை கொடுப்போம் வாருங்கள் பதிவர்களே!


  நான்காவது ஆண்டாக புதுகையில் கடந்த ஞாயிறன்று 11-10-15 அன்று புதுகை பதிவர் சங்கமம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கண்கவர் ஓவியங்களுடன் கவிதைக் கண்காட்சி, புத்தகத்திருவிழா, உணவுத்திருவிழா, இலக்கியத்திருவிழா, நண்பர்களின் சங்கமம் என பல்வேறு சிறப்புக்கள் அரங்கேறிய இந்த விழாவில் குறைகளே இல்லை என்று எல்லோரும் புகழ் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
    இத்தனை சந்திப்புகளை விட இந்த சந்திப்பில் ஏராளமான பரிசுகள், சிறப்பான திட்டமிடல் நேரடி ஒளிபரப்பு என்று பல  சிறப்புக்கள். விழாவிலும் நிறைய பதிவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
   குறையொன்றுமில்லை என்று பதிவர்கள் சொன்னாலும் கொஞ்சம் குறைபடுகின்றதே! என்று வருந்துகின்றார்கள் புதுகை பதிவர்கள்.
    விழாவிற்கு பதிவு செய்த பலர் முன்னறிவிப்பு கூட தெரிவிக்காமல் நின்றுவிட்டிருக்கின்றனர். நானும் அதில் ஒருவன். அவர்களுக்கென தயாரான வலைபதிவர் கையேடு, கைப்பை, உணவு எல்லாம் வீணாகலாமா?
    ஏராளமான அன்போடு தாராளமாக நடந்து கொண்ட புதுகைப் பதிவர்களை நாம் ஏமாற்றுதல் தகுமோ? நம் விழா என்ற உணர்வோடு பதிவுகளில் பகிர்ந்து ஊக்கம் அளித்தோம். அதுபோல விழா செலவிற்கும் உதவுதல் கூடிப் பகிர்தல்தானே தமிழரின் தனிச்சிறப்பு.
       விழா செலவுகள் கூடுதலாகி  பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விழாத்தலைவர் நேற்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவின் இணைப்பு இங்கே!http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_15.html
    புதுகைப் பதிவர்களை ஆதரிப்போம்!  பற்றாக்குறைதனை தவிர்ப்போம்!
விழாவுக்கு பதிவு செய்து செல்லாமல் விட்ட பதிவர்களே! உங்களால் இயன்ற அளவில் பணம் செலுத்தி வலைபதிவர் கையேட்டை பெற்று உதவுங்கள்!
   போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றவர்கள் அதில் ஒரு சிறுபகுதியை விழாக்குழுவுக்கு அளித்து உதவுங்கள்!
ஏற்கனவே நன்கொடை அளித்திருப்பினும் மேலும் சிறிது அளித்து உதவுங்கள்! நன்கொடை அளிக்காதவர்கள் இப்போது நன்கொடை பட்டியலில் இணையுங்கள்!
    தமிழ் வளர இணையம் வளர பாடுபடும் புதுகை பதிவர்களின் உழைப்புக்கு மதிப்பளித்து பற்றாக்குறையை காணாமல் போக்குவீர்கள் நண்பர்களே!
   முதல் ஆளாய் இன்று நான் ஒரு தொகை அளித்து இணைந்துள்ளேன்! சங்கிலியாக தொடருங்கள்!  புதுகை பதிவர்களின்  குறை போக்கி மகிழுங்கள்! நன்றி!
   எப்படி உதவலாம்? இங்கே சென்று பாருங்கள்! பதிவர் விழா - குறை

இந்த வங்கி கணக்கில் உங்கள் பணத்தை செலுத்துங்கள்!

 NAME - MUTHU BASKARAN N 
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA, 
PUDUKKOTTAI TOWN BRANCH 
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320

வலைபதிவர் ஒற்றுமை சிறக்கட்டும்! வலையுலகம் செழிக்கட்டும்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. ஆமாம் சகோ, நாம் அனைவரும் கைகொடுக்க வேண்டும். பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 2. நன்றி நண்பரே! உதவியேதும் வேண்டாம் நீங்கள் சொன்னதுபோல “விழாவுக்கு பதிவு செய்து செல்லாமல் விட்ட பதிவர்களே! உங்களால் இயன்ற அளவில் பணம் செலுத்தி வலைபதிவர் கையேட்டை பெற்று உதவுங்கள்!“ என்பதே எங்கள் வேண்டுகோளும்.. மற்றபடி, “போட்டிகளில் பரிசு பெற்றவர்களிடம் ஒரு பகுதி கேட்பதை அருள்கூர்ந்து மாற்றிக் கொள்ளுங்கள்.. அது போட்டியின் ஆன்மாவை சிதைப்பதாகும். தாங்கள் அனுப்பிய தொகை இன்று வந்தது. புத்தகங்களை மற்றவரும் வாங்கி நண்பர்களுக்கு அனுப்பலாம் பற்றாக்குறை பறந்துவிடும். மிக்க நன்றி

  ReplyDelete
 3. தங்களின் பங்களிப்புக்கு நன்றி நண்பரே... அனைவரும் உணர்வோம் கை கொடுப்போம்

  ReplyDelete
 4. உண்மைதான்....
  நம்மாளான உதவிகளைச் செய்ய வேண்டும்...
  உதவுங்கள் நண்பர்களே...

  ReplyDelete
 5. மிக்க நன்றி சகோ..

  ReplyDelete
 6. சிறப்பான நிகழ்வு
  ஆயினும் பொருள் பற்றாக்குறை
  இக்குறையினைக் களைவது
  பதிவர்கள் அனைவரது கடமையாகும்
  கடமையாற்றுவோம்

  ReplyDelete

 7. துயரமில்லா துணிந்தே செய்வர்
  அயர்வில்லா அன்பர் நட்புக்கு
  வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 8. சிறப்பான ஒரு விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.சூழ்நிலை காரணமாக நீங்கள் பங்கேற்காததில் சற்று ஏமாற்றமே

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2