தளிர் சென்ரியு கவிதைகள்!
காணாமல் போனது குழந்தைத்தனம்!
தேடிக்கொண்டிருக்கிறார்கள்!
தனியார் பள்ளிகள்!
எழுதப்பட்ட கடிதங்கள்
அழிக்கப்பட்டன!
அலைபேசி!
சுமந்து வந்தும்
வெளியே நிறுத்தப்படது!
காலணி!
உழைப்பே இல்லை!
பிழைப்பாய் சிலர்!
நூறுநாள் வேலைதிட்டம்!
ஆயிரம் வெடிகள்!
கலைந்தன பறவைகள்!
தலைவர் விடுதலை!
வெட்டி சாய்க்கையிலும்
மரத்தில் துளிர்விட்டது
நம்பிக்கை!
உயரத்தில் இருந்தாலும்
உசரவில்லை கூலி!
கோபுரத்தில் பணி!
பயிரோடு சேர்ந்து
நோய்களும் வளர்கிறது!
பூச்சிக்கொல்லிகள்!
மருந்துகள் உணவானது!
மறந்தே போனது!
பசுமை விவசாயம்!
கொடிகள் அசையும் நிலங்கள்!
விதையே போடாமல் விளைந்தது!
வீட்டு மனை வியாபாரம்!
ஒப்பனை செய்து கொண்ட பழங்கள்!
அழகு ஈர்த்தது!
மெழுகுப்பூச்சு!
தேயும் அரசுப்பள்ளிகள்!
வளரும் கல்வித்தந்தைகள்!
கோடிகளில் கல்வி!
வேர் பிடிக்கையில்
நீர் பிடித்துக்கொண்டது!
சிக்கலில் விவசாயிகள்!
மலைகளை பிளந்தார்கள்!
மலையானது பிரச்சனை!
கனிமவள முறைகேடு!
அள்ளிக் குவித்தார்கள்!
வற்றிப்போனது விவசாயம்!
மணல்!
கைத்தட்டல்களில் தேய்ந்து போனது
மக்களின் நம்பிக்கை!
சட்ட மன்றம்!
கன்றுக்கும் இல்லை!
விலையும் இல்லை! மண்குடித்தது!
பசுவின் பால்!
ஒளிமயமான எதிர்காலம்!
படப்பிடிப்பில்
அறிமுக நாயகி!
இறங்கி வருகையில்
பாரம் குறைகிறது!
படியில் பிச்சைக்காரர்கள்!
ஆகா ...அழகான கவிதைகள்! எதார்த்தமாய் சுலிர் என்கிறது! அருமை! நண்பரே!
ReplyDeleteஇப்ப நல்லா படி
வேலையில்லையா?
புல்லா குடி "
நன்றி!
எதைச்சொல்ல, எதை விட? எல்லாமே அருமை. குறிப்பாக நம்பிக்கை, காலணி கவிதைகள்.
ReplyDeleteஅனைத்தும் ரசித்தேன் நண்பரே வாழ்த்துகள்
ReplyDeleteகவிதையை படித்தேன் ரசித்தேன் மிக அருமை சார்.
ReplyDeleteமருந்துகள் உணவானது!
ReplyDeleteமறந்தே போனது!
பசுமை விவசாயம்!
அருமை அருமை நண்பரே
அருமை அருமை...ஆமாம் இந்த கவிதைகளின் தொகுப்பு எப்போது புத்தகமாக வரப் போகிறது
ReplyDeleteஅருமையான கவிதைகள்!
ReplyDeleteஎல்லாமே அருமை சுரேஷ்....அனைத்துமே ரசித்தோம்...
ReplyDeleteஎல்லாமே அருமை. பாராட்டுகள்.
ReplyDeleteஅனைத்தும் சிறப்பு. சிந்திக்கவும் வைத்தது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஒவ்வொன்றும் ஒவ்வொரு செய்தியைத் தருகிறது, அருமையாக. நன்றி.
ReplyDeleteரொம்ப நாளாச்சு உங்க கவிதை படித்து.. அருமை.. ஒரு இளம் வளரும் கவிஞருக்கு அடையாளம் காட்டினேன் உங்கள் எழுத்துக்களை...
ReplyDelete
ReplyDeleteசிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
http://www.ypvnpubs.com/