அன்ன தோஷம் போக்கும் அன்னாபிஷேக தரிசனம்!
அன்ன தோஷம் போக்கும் அன்னாபிஷேக தரிசனம்!
தானங்களில் சிறந்தது அன்னதானம் என்று சிறப்பிக்கப்படுகிறது. ஒருவனுக்கு எத்தனைக் கோடி பொன்கொடுத்தாலும் அவன் மனம் மேலும் மேலும் ஆசைப்பட்டு இன்னும் கிடைக்காதா என்று ஏங்கும். அதே சமயம் அன்னத்தை தானமாக அளிக்கையில் வயிறுடன் மனதும் நிறைந்து திருப்தி அடையும். போதும் என்று மகிழ்வாக உரைப்பான். ஆதாலால்தான் அன்னதானம் சிறப்பாக சொல்லப்படுகின்றது.
உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் உயிராய் செயல்படுவது அன்னம். அத்தகைய அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்விப்பது அன்னாபிஷேகம் என்று சிறப்பாக சொல்லப்படுகின்றது. எத்தனையோ பொருட்கள் இருக்க இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்விப்பது ஏன்? எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னவடிவில் இருப்பதாக சாமவேதத்தில் கூறப்படுகின்றது. அன்னமும் லிங்க வடிவில் உள்ளது. அன்னத்தால் இறைவனை அபிஷேகிப்பது மிகவும் விஷேசமானது ஆகும்.
ஒவ்வொரு வருடமும் ஐப்பசிமாதம் அஸ்வினி நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி தினம் அன்னாபிஷேகத் திருநாள் ஆகும். சந்திரன் அன்றுதான் தனது பதினாறு கலைகளும் ஒளிவீச பூரணச் சந்திரனாக பரிமளிப்பான். அன்றைய தினம் சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வித்தல் சிறப்பாகும்.
ஐப்பசி மாதப் பவுர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான். அது என்ன சாபம்? தெரிந்த கதைதான். சந்திரன், அஸ்வினி, முதல் ரேவதி வரையான தனது நட்சத்திர மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பு செலுத்தி மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டியதால், மாமனார் தட்சனால் உடல் தேயட்டும் என்று பெற்ற சாபம். சந்திரனுக்கு ஒவ்வொரு கலையாக தேய ஆரம்பித்தது. அவன் மிகவும் வருந்திக் கெஞ்சவே, திங்களூரில் சிவனை பூஜித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார், தட்சன். உடனே அவன் திங்களூர் வந்து சிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான். அவன் மேனியின் ஒளி நாளுக்கு நாள் மங்கத் துவங்கியது. மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருக்கும் போது சிவனார், அவன்பால் மனமிரங்கி அந்தப் பிறையைத் தனது தலையில் அணிந்து கொண்டார். கொடுத்த வாக்கை மீறிய அவனுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும் முழுப்பொலிவும் வருடத்தின் ஒரு நாள் அதாவது ஐப்பசி பவுர்ணமி அன்று மட்டுமே கிடைக்கும். அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்து பின் படிப்படியாக வளரும். இது எப்போதும் நடக்கும் ஒரு சுழற்சியாக இருக்கும் என்று அருளிச் செய்தார்
ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல். நவகிரங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தினார்கள்.
உணவு. உணவின்றி உயிரில்லை. உயிரின்றி உலகில்லை. அன்னம் எனும் உணவே அனைத்திற்கும் ஆதாரம்.வேதங்கள் அன்னத்தை மிகவும் போற்றுகின்றன. தைத்ரீய உபநிஷதம், சாம வேதம் போன்ற ஸ்ம்ருதிகள் அன்னத்தின் புகழைப் பறை சாற்றுகின்றன. அதர்வண வேதத்திலுள்ள அன்னபூர்ணோ உபநிஷத் அன்னத்தின் மேன்மைகளைக் கூறுகின்றது. அன்னம் ந நிந்த்யாத் - அன்னத்தை நிந்தனை செய்யக் கூடாது. அன்னம் ப்ராணாவோ அன்னம் - எது உயிர் கொடுக்கின்றதோ அதுவே அது இல்லாமல் போனால் அதுவே உயிர் எடுக்கின்றது. எது ஒன்றை ஒருவர் உண்கின்றாரோ அதுவே அவரை உண்கின்றது. அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னம் - அன்னமே இறை வடிவம். மஹேஸ்வரப் பெருமானே அன்னத்தின் வடிவத்தில் இருக்கின்றார். அன்னமே தானாக இருக்கின்றேன் என்று வேதநாயகனே கூறுவதாக வேதங்கள் விளக்குகின்றன.
தெய்வங்களுக்குச் செய்யப்படும் யாகத்தில் அன்னம் மிகப் பெரும் பங்கு வகிக்கும். அந்த அன்னம் மட்டுமே ஹவிர் பாகமாக - தெய்வத்திற்கு உணவாக, பெரும் மரியாதையாக செய்யப்படுவது. ஹோமத்திற்கான ஹவிர் பாகத்தைப் பெறுவதற்கு என்றும் தெய்வங்கள் தயார் நிலையில் இருப்பார்கள் என்று வேதங்கள் கூறுகின்றன.
அன்னம் பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உருவாவது ஆகும். நிலத்தில் விதைத்து மழையால் வளர்ந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரிய ஒளியினால் முழுமையான வளர்ச்சி அடைகின்றது . இறைவன் பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆள்பவன். எனவே அவருக்கு அன்னாபிஷேகம் செய்விக்கப்படுகின்றது.
அன்னாபிஷேக தினத்தில் முதலில் இறைவனுக்கு மஹா அபிஷேகம் எனும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்விக்கப்படும், பஞ்சகவ்யம், பால், தயிர், தேன், கதம்பபொடி, பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம் முதலிய அபிஷேகங்கள் செய்விக்கப்பட்ட பின் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படும்.
இந்த அபிஷேகம் அன்னத்தால் இறைவனை மூடுவது ஆகும். இறைவனின் உச்சி முதல் பாதம் வரை அன்னத்தால் மூடி அலங்கரிப்பார்கள். பிரம்மபாகம், விஷ்ணுபாகம், சிவபாகம் என்று மூன்றுவிதமாக அன்னம் சார்த்தப்படும். இதில் லிங்க உச்சியில் சார்த்தபடும் சாதம் வீரியம் மிக்கது.
இதை பின்னர் நீரில் கரைத்துவிடுவார்கள்.
90 நிமிடங்கள் ஒரு முகூர்த்த காலம் தரிசன நேரமாகும்.
அப்போது ருத்ர பாராயணம், திருமறைகள் பாடி துதிப்பார்கள். பின்னர் அன்னத்தை கலைத்து
பிரசாதமாக தயிர் கலந்து விநியோகிப்பார்கள். அதை உண்ணுகையில் சகலதோஷங்களும் விலகும்.
அன்னாபிஷேக தினத்தன்று தரிசனம் செய்து அந்த அந்த
பிரசாதத்தை உண்ணுவதால் குறிப்பாக அன்னதோஷம் விலகும். அன்னதோஷம் என்பது வீட்டில் நிறைய உணவிருந்தும் அன்னம்
உண்ண பிடிக்காது ஒருவித வெறுப்பு ஏற்படும். பசியின்மையாக இருக்கும். இந்த தோஷம் அன்னாபிஷேக
பிரசாதம் உண்ணுவதால் நீங்கும்.
மேலும் இந்த பிரசாதத்தை சாப்பிடுவதால் பலவித தோஷங்கள்
விலகி புத்திர சந்தானமும் கிட்டும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
அன்னாபிஷேகதரிசனம் செய்தால் கோடி சிவலிங்க தரிசனம்
செய்த புண்ணியம் கிட்டும்.
தொன்மையான சிவாலயங்களில் அன்னாபிஷேகம் செய்வித்து
வழிபட்டால் மழைபொழிந்து கிராமங்கள் சுபிட்சம் அடையும். உணவுத் தட்டுப்பாடு குறையும்
.
வாடாமல் உயிரெனும் பயிர் தழைத்து ஓங்கிமிக
அருள் மழை பொழிந்தும் இன்ப
வாரிதியிலே நின்ன தன் பெனுஞ் சிறகால்
வருந்தாமலே யணைத்து
கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல் குஞ்சரக்
கூட்ட முதலான சீவ
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும்
அருள் மழை பொழிந்தும் இன்ப
வாரிதியிலே நின்ன தன் பெனுஞ் சிறகால்
வருந்தாமலே யணைத்து
கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல் குஞ்சரக்
கூட்ட முதலான சீவ
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும்
இத்தகைய சிறப்பு
வாய்ந்த அன்னாபிஷேகத்தை சிவாலயங்களில் தரிசனம் செய்து தோஷங்கள் விலக வழிபடுவோம். பழமையான
சிவாலயங்களில் வழிபாடு செய்ய அரிசி, அபிஷேகப் பொருட்கள் முதலியன வாங்கிக் கொடுத்து
உதவுவோம். அன்னாபிஷேகம் காண்போம்! அனைத்து தோஷங்கள் விலக்கிடுவோம்!
(படித்ததில் தொகுத்தது)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
நன்றி நண்பரே
ReplyDeleteஅன்னாபிஷேகம் பற்றி அறியாதன அறிந்தேன். நன்றி.
ReplyDeleteஅன்னாபிஷேகம் பற்றிய விளக்கமான,சிறப்பான ப்கிர்வு!
ReplyDeleteநன்றி சுரேஷ்
மிக அருமை!
ReplyDeleteஅன்னாபிஷேகச் சிறப்புப் பற்றி அறிந்து கொண்டேன்!
நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!
அன்ன தோஷம் போக்கும் அன்னாபிஷேக தரிசனம்!
ReplyDeleteபௌர்ணமி ஒளியாய் தெரிந்தது உமது பதிவில் நண்பரே!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
ReplyDeleteஐயா
தாங்கள் சொல்லிய கருத்தைபடித்து மகிழ்ந்தேன்.. வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறப்பான தகவல்கள். படங்களும் நன்று.
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
அருமையான பதிவு.. மனமார்ந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteஅருமையான பதிவு.. மனமார்ந்த பாராட்டுக்கள்.
ReplyDelete