கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 11
ஜோக்ஸ்! 1. என் மனைவி இதுவரைக்கும் வாயைத்திறந்து அது வேணும் இது வேணும்னு கேட்டதில்லை! அவ்வளவு நல்ல குணமா? நீ வேற அவளே வாங்கிட்டு என்கிட்ட பில்லை மட்டும் காட்டுவா! 2. போர்க்களத்தில் இறங்கிவிட்டால் மன்னரை கையில் பிடிக்க முடியாது? அவ்வளவு வீரமாக போரிடுவாரா? ஊகும்! அவ்வளவு வேகமாக ஓடுவார்! 3. மாப்பிள்ளை இடிஞ்சி போய் வந்திருக்காரா? என்ன விஷயம்? அடுக்குமாடி குடியிருப்பிலே ப்ளாட் வாங்கியிருந்தாராம்! 4. அந்த டாக்டர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே? பல் கூச்சம்னு சொல்லிப்போனா நாலு பேரோட சேர்ந்து பழகுனா கூச்சமெல்லாம் காணாம போயிரும்னு சொல்றாரே! 5. தலைவரோட நிதி நிலைமை சரி இல்லை போல! எப்படி சொல்றே? சில்லறைக் கட்சிகளை கூட்டணியிலே சேர்த்துக்கிட்டா ஏதாவது சில்லரை தேருமான்னு கேக்கறாரே! 6. மன்னருடைய உடல் வயிரம் பாய்ந்த உடல்! அவ்வளவு திடமா? ஊகும் அடிவாங்கி வாங்கி மரத்துப்போய்வ...