சிரிச்சுக்கிட்டே இருங்க! பகுதி 5.
சிரிச்சுக்கிட்டே இருங்க ! பகுதி 5. 1. மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் எல்லாம் தங்களோட குமுறலைக் கொட்டித்தீர்த்திட்டாங்களாமே! அட நீ வேற கெட்டுப்போன சாப்பாட்டைத்தான் கொட்டிட்டு போயிட்டாங்க! 2. உண்ணாவிரதப் போராட்டத்துலே கலந்துகிட்டவங்க எல்லாம் ஹாஸ்பிடலுக்கு எதுக்கு வந்திருக்காங்க ? ” அஜீரனக் கோளாறு ” ஏற்பட்டிருச்சாம் ! 3. மன்னரின் வீரம் கொடிகட்டி பறக்கிறதாமே ... ? ஆம் ...! போரில் மன்னரிடம் உருவிய ஆடையை எதிரி மன்னன் தன் கோட்டையில் கொடிகட்டி பறக்கவிட்டுள்ளானாம் ! 4. எதிரிக்கு பயத்தைக் காட்ட வேண்டும் அமைச்சரே …! நீங்கள் “அபயம்” கேட்டு அவன் முன் நிற்கையில் அவனுக்கு நன்றாக காண்பித்துவிடலாம் மன்னா! 5. சந்திரனில் விக்ரம் லேண்ட் ஆகிருச்சுன்றதை நம்ம தலைவர் தப்பா புரிஞ்சுகிட்டார் ! எப்படி ச...