கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 85



1.   படம் எடுக்கிறது உப்புமா கம்பெனின்னு எப்படி சொல்றே?
படத்தோட பேரை பை”ரவா”ன்னு வைச்சி இருக்காங்களே!

2.   விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப்போக மாட்டார்கள்னு தலைவர் சொல்லிக்கிட்டிருக்காரே என்ன விஷயம்?
இடைத்தேர்தல்ல போட்டியிடாம விட்டுக்கொடுத்தது பெட்டிவாங்கினதைத்தான் அப்படி சொல்லிக்கிட்டு இருக்கார்!

3.   என் பொண்டாட்டி எப்பவும் ட்ரெண்டியாத்தான் திட்டுவா?
எப்படி?
ஏன் இப்படி அழுதுவடிஞ்சுகிட்டு இருக்கீங்க என்பதைக் கூட ஏன் டீவி சீரியல் மாதிரி இருக்கீங்கன்னுதான் திட்டுவா!

4.   அது ரொம்ப கட்டுபெட்டியான குடும்பம்!
  அதுக்காக பொண்ணு பார்க்க வர்றப்ப கூட பொண்ணுக்கு திரை போட்டு பார்க்க சொல்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை!

5.   தலைவரோட நடை பயணத்துக்கு போதுமான ஆதரவு கிடைக்கலையாமே!
ஆமாம்! கட்சியிலிருந்து நிறைய பேர் நடையை கட்டிட்டாங்க!


6.   புலவரே! உங்கள் சொல் பெரிதா? என் வாள் பெரிதா ஒரு கை பார்த்துவிடுவோமா?
மன்னா! எல்லாவற்றையும் விட எனக்கு உயிர் பெரிது விட்டுவிடுங்கள்!

7.   அந்த டாக்டர் ரொம்பவும் பீலா உடறாரா எப்படி?
நான் பார்டர்லேயே சர்ஜிகல் ஆபரேஷன் பண்ணவன்னு சொல்றாரே!

8.   ஒரு காலத்துல நிறைய கவிதைகளை கிறுக்கிகிட்டு இருந்தானே உன் பையன் இப்போ என்ன பண்றான்!
  பத்திரிக்கைகள்ல கார்டூன் கிறுக்கிகிட்டு இருக்கான்!

9.   உங்க பையன் ரொம்ப பொறுப்பில்லாம இருக்கான்!
   என்ன சொல்றீங்க?
நீ பண்ண காரியத்துல உங்கப்பா மானம் கப்பலேறி போயிரும்னு சொன்னா டிக்கெட் யாரு எடுத்துக் கொடுப்பாங்கன்னு கேக்கறான்!

10. மைக் செட் ஆபரேட்டரை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சா ஏன்?
அடிக்கடி கேசட்டை மாத்தறா மாதிரி பொண்ணுங்களையும் மாத்தறாரே!


11.  கேடி கபாலிகிட்டே இருந்து தலைவருக்கு அழைப்பு வந்ததாமே எதுக்கு?
எங்களோட கூட்டு வச்சிக்கங்க சேர்ந்தே கொள்ளையடிக்கலாம்னு சொல்ல கூப்பிட்டானாம்!

12.  எதிரியோடு மல்லுக்கட்ட முடியாது என்று மன்னர் சொல்லிவிட்டாராமே!
ஆமாம்! அவர் தினமும் “ஃபுல்லு” கட்டிக்கொண்டிருந்தால் எப்படி முடியும்?

13. அரண்மணை நர்த்தகியோடு அரசர் ஆட்டம் போட்டது ராணியாருக்கு தெரிந்துவிட்டதாம்!
அப்புறம்?
அந்தப்புரத்தில் வைத்து அவரது “பாட்டத்தை” பிய்த்துவிட்டார்களாம்!

14.  ஏங்க இன்னிக்கு நாம கண்டிப்பா அந்த பேய் படத்துக்கு போயே ஆகணும்!
ஹூம்..! பேயுக்கு வாழ்க்கைப்பட்டா அது இஷ்டப்படித்தானே நடந்துக்கணும்!

15.  மந்திரியாரே நாட்டில் கிஸ்தியை ஒழுங்காக கட்டிவிடுகிறார்களா?
  குஸ்தி போட்டு வசூலிக்க வேண்டியிருக்கிறது மன்னா!

16.  தலைவர் அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி சுவத்துல போஸ்டர் ஒட்டிக்கிட்டு இருந்தாரு!
  இப்ப?
அரசியலுக்கு வந்தது ஸ்டிக்கர் ஒட்டிகிட்டு இருக்காரு!

17.  தலைவர் அதிகார மையத்தில் இருக்கார்!
அதுக்காக அவர கலர் காட்டும் பவர் பாயிண்டேன்னு  பேனர் வைக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!


18.  நெட் பேலன்ஸ் போட்டுக்கொடுத்து ஒரு பொண்ணு பின்னாடி சுத்திக்கிட்டிருந்தியே என்ன ஆச்சு?
ஜியோ சிம் கிடைச்சதும் ஐயோன்னு விட்டுட்டு போயிட்டா!

19. ஃபாஸ்ட் புட் கடையில என்ன கலாட்டா?
  “மெது வடை” போட மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம்!

20.  டாக்டர் நீங்க ஆபரேஷன் பண்ண பேஷண்டுக்கு நினைவு திரும்பிடுச்சு!
அட நினைக்காததெல்லாம் நடக்க ஆரம்பிச்சிருச்சே!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!


Comments

  1. ஹாஹாஹா அனைத்தும் சரவெடி நண்பரே

    ReplyDelete
  2. அனைத்தையும் ரசித்தேன், வழக்கம்போல.

    ReplyDelete
  3. ரசித்தேன்... சிரித்தேன்...

    ReplyDelete
  4. ரசித்தேன்... சிரித்தேன்...

    ReplyDelete
  5. அருமையான பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  6. அருமையான நகைசுவை கோர்வை தளிர்.

    கோ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!